தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. சென்னையில் கடந்த 6 நாட்களாக மிதமான மழை பெய்து வந்த நிலையில் 2 நாட்களாக மழை வெளுத்து வாங்கி வருகிறது.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. சென்னையில் கடந்த 6 நாட்களாக மிதமான மழை பெய்து வந்த நிலையில் 2 நாட்களாக மழை வெளுத்து வாங்கி வருகிறது.
குறிப்பாக வடசென்னையின் திருவொற்றியூர், எண்ணூர், காசிமேடு, ராயபுரம், தண்டையார்பேட்டை, வியாசர்பாடி, பெரம்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.வியாசர்பாடி உள்ளிட்ட வடசென்னையின் தாழ்வான பகுதிகளில் குடியிருப்புகளை சூழ்ந்து நிற்கும் தண்ணீர் வடியாத சூழல் உள்ளது. இதனால் பல்வேறு பகுதிகள் தீவுகள் போல காட்சி அளிக்கின்றன.
ராயபுரம், பாரிமுனை, காமராஜர் சாலை, பட்டினம்பாக்கம், மயிலாபூர், சேப்பாக்கம், அண்ணாசாலை, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், அண்ணாநகர், போரூர், நந்தம்பாக்கம், விமானநிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
சென்னையின் மழை வெள்ளத்தால் தத்தளித்துக் கொண்டிருக்கும் நேரத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எதுவும் எடுக்காத காரணம் என்று மக்கள் புலம்பி வருகிறார்கள் மேலும் இரண்டு மூன்று நாட்களாக மின்சாரம் இல்லாமலும் தேங்கிய தண்ணீர் வடியாமலும் இருப்பதால் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றார்கள் பொது மக்கள் முதல்வர் சென்னையை சுற்றி சுற்றி வந்தாலும் தண்ணீர் வடிந்த பாடில்லை.
அதிமுக அரசு வடிகால்கள் இருந்தும் அதை தூர் வாராமல் கிடப்பில் போட்டது இதற்குக் காரணம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றது
கடந்த மாதம் 20ஆம் தேதி அமைச்சர் நேரு பேசுகையில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பே அனைத்து வடிகால்களும் முதல்வரின் உத்தரவுப்படி தூர் வரப்பட்டுள்ளன எனவே மழைநீர் எங்கும் தயங்காது என செய்தியாளர்களிடம் பேசினார்