மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என்ற தகவல் கடந்த சில வாரங்களாக பரவிய நிலையில்,இன்று மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் புதிதாக 43 மத்திய அமைச்சர்கள் பதவி ஏற்றுக்கொண்டார்கள். 43 அமைச்சர்களில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகனும் ஒருவர். தமிழகத்தில் இருந்து தற்போது 3 பேர் தற்போது மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் அவர்கள் இன்று மத்திய அமைச்சராக பதவி ஏற்றார். மத்திய அமைச்சர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டது. அதில் சுவாரசியம் என்னவென்றால் தமிழகத்தை சேர்ந்த சிலருக்கு ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அமைச்சர் எல் முருகன் அவர்களின் பயோடேட்டாவில், அவரது மாவட்டத்தை குறிப்பிடுவதற்கு பதில், கொங்குநாடு என்று இருந்ததுதான் அதிர்ச்சிக்கு காரணம்.
ஒவ்வொரு மத்திய அமைச்சரின் விவரம் அதாவது அவர்கள் வயது கல்வித் தகுதி , வயது, எந்த மாவட்டத்தை சேர்ந்தவர்கள், எந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்ற விவரம் அதில் இடம்பெற்றுள்ளது. அதில் தமிழக பாஜக மாநிலத்தலைவர் எல்.முருகன் அவர்களின், வயது கல்வித் தகுதி வயது அவர் இதுவரை பணியாற்றிய விவரங்கள் அனைத்தும் இடம்பெற்றது . ஆனால், மாவட்டம் நாமக்கல் என்பதற்கு பதில் கொங்கு நாடு என்று இருந்தது. மாநிலம் தமிழ்நாடு என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மத்திய அரசை ஒன்றிய அரசு என குறிப்பிடும் போது ஆனந்தமாக இருந்தவர்களுக்கு இந்த ட்விஸ்ட் பேரிடியாக இருக்கிறது. சேர, சோழ, பாண்டிய நாடு, கொங்குநாடு தொண்டைநாடு நடு நாடு என்பவை சேர்ந்தது தமிழ்நாடு என பெயர் பெற்றது. என்பது குறிப்பிடத்தக்கது.