தற்போது தமிழ்நாட்டில் கொங்குநாடு விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது இதன் ஒரு பகுதியாக ட்விட்டர் சமூக வலைதளப் பக்கத்தில் கொங்கு நாடு தமிழ்நாடு உள்ளிட்ட அதிகாரிகள் ட்ரெண்டாகி வருகிறது.
தமிழக பாஜக தலைவராக இருந்த எல் முருகன் இரு தினங்களுக்கு முன்பு மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார் .
அப்போது அவருடைய சுய விபரக் குறிப்பேட்டில் அவரது விலாசத்தில் நாமக்கல் மாவட்டத்திற்கு பதிலாக கொங்கு நாடு தமிழ் நாடு என்று குறிப்பிட்டு இருந்தது அந்த நாள் முதலே தமிழகத்தில் கொங்கு நாடு என்ற விவாதம் தொடங்கியது.
மேலும் பாஜகவினர் தமிழகத்தை பிரித்தாளும் நோக்கில் கொங்கு நாடு என்று சொல்வதாக திமுகவினர் மற்றும் திமுக வினர் குற்றம் சாட்ட இந்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுக அரசு கூறிய விரித்தாடும் போது உங்களுக்கு தெரியவில்லை என்று பாஜகவினர் எதிர் குற்றச்சாட்டு கூறி வருகின்றனர்.
தற்போது இந்நிலையில் சமூக வலைதளமான பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் கொங்குநாடு விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
அதிலும் முக்கியமாக டுவிட்டரில் கொங்கு நாடு என்கின்ற அஷ்ஷேக் இந்திய அளவில் டிரெண்ட் ஆகி வந்ததே இதேபோல் தமிழ்நாடு என்பதும் அதை பின்தொடர்ந்து டிரெண்ட் ஆகி வந்தது.
இதனால் திமுக நிர்வாகிகள் தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் தமிழ்நாடு பிரிக்கக்கூடாது நாம் அனைவரும் தமிழர் என்கின்ற பல்வேறு கோணங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருவதால் பெரும் பேசுபொருளாக தற்போது கொங்கு நாடு என்கின்ற சொல் பேசப்பட்டு வருகிறது.