கோவை செயின்ட் பால்ஸ் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இதனை கிறிஸ்தவ மத போதகர் டேவிட் நடத்தி வருகிறார்.
கடந்த சில ஆண்டுகளாக இந்துக்கள் கொண்டாடும் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு போட்டியாக அங்குள்ள கிறிஸ்தவர்களை தூண்டிவிட்டு, ஜெப யாத்திரையை நடத்தி வந்தது, இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அதோடு இந்த ஆண்டும் விநாயகர் விழாவின்போது, அதற்கு போட்டியாக ஜெப யாத்திரை நடத்துமாறு வேண்டுகோள் விடுத்து நோட்டீஸ் அச்சடித்து வெளியிட்டுள்ளார்.
மதவெறியைத் தூண்டும் வகையிலும், சமூக நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கின்ற வகையிலும் கிறிஸ்தவ மத போதகர் டேவிட் பட்டவர்தனமாக செயல்பட்டது இந்துக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது.
இது தொடர்பாக, கோவை வடக்கு மாவட்ட இந்து முன்னணி சார்பில் கோவை மாவட்ட பொறுப்பாளர் பாலன், பொது செயலாளர் தியாகராஜன், செய்தி தொடர்பாளர் ஜெய் கார்த்திக உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் துடியலூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு புகார் அளித்தனர். அதோடு உடனடியாக எப்ஐஆர் போடப்பட்டு, டேவிட் கைது செய்யப்படாவிட்டால் 5,000 இந்துக்களை திரட்டி மேட்டுப்பாளையம் ரோட்டில், ஞானாம்பிகா மில்ஸ் பிரிவில் மாபெரும் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து வேறு வழியில்லாமல், கிறிஸ்து போதகர் டேவிட் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் அவர் நடத்தி வரும் செயின்ட் பால் பெண்கள் கல்லூரியின் லோகோவில் காஷ்மீர் இல்லாத இந்திய வரைபடம் பயன்படுத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அவர் வேண்டுமென்றே காஷ்மீர் மாநிலத்தின் ஒரு பகுதி இல்லாத வரைபடத்தை பயன்படுத்தியது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதேபோல செயின்ட் பால் கல்லூரி மற்றும் பள்ளிகளில் அனைத்து லெட்டர் படங்களிலும் காஷ்மீர் இல்லாத இந்திய வரைபடம் ஏ பயன்படுத்தப்பட்டுள்ளது.
கிறிஸ்தவ மத போதகர் டேவிட் இந்த தேச விரோத செயல் இந்துக்களை மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களையும் கோபம் அடைய செய்துள்ளது.
இவரது கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் மனதில் நஞ்சை விதைக்கின்ற வகையில் கிறிஸ்தவ மத போதகர் டேவிட் திட்டமிட்டு செயல்பட்டுள்ளதை சமூக ஆர்வலர்களும், தேச பக்தர்களும் கண்டித்துள்ளனர்.
அதோடு கிறிஸ்தவ மத போதகர் டேவிட் மீது இந்த தேசவிரோத செயல் தொடர்பாகவும், அவர் மீது தேச விரோத வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கொரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் தேச விரோத செயல்கள், மத நல்லிணக்கம் மற்றும் சமூக ஒற்றுமைக்கு எதிரான செயல்கள் போன்றவைகளின் கூடாமாக செயல் பட்டு வரும், செயின்ட் பால் கல்லூரியை உடனடியாக இழுத்த மூட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.
=====