தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநிலத் தலைவராக இருப்பவர் விக்கிரமராஜா. கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த இவர், தொடர்ந்து இந்து விரோத செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும் இந்து வியாபாரிகள் தொடர்பான பிரச்சனைகளில் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கு வியாபாரிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்த நிலையில் வருகின்ற 11-ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படும் கிருஷ்ண ஜெயந்தி விழாவை சீர்குலைக்கும் வகையில், திட்டமிட்டு வேண்டுமென்றே அதற்கு முந்தைய தினமான 10-ஆம் தேதியன்று கடையடைப்பு போராட்டத்தை அறிவித்தார் விக்கிரமராஜா. கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாததால், கோயம்பேடு மார்க்கெட்டை தற்போது திறப்பதற்கு வாய்ப்பு இல்லை என்று தெரிந்திருந்தும், அதனைக் திறக்கக்கோரி இந்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
மேலும் கோயம்பேடு மார்கெட்டால் தான் தமிழகம் முழுவதும் கொரோனா பரவியது என்பது அனைவருக்கும் தெரிந்ததே. கொரோனா பரவுவதற்கு முன்னரே மார்க்கெட்டை மூடவேண்டும் என சொன்னபோது அதெல்லாம் முடியாது என மறுத்துள்ளார்கள்வியாபாரி சங்கத்தினர். இந்த செய்தியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருந்தார்.
இந்த நிலையில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடும் இந்துக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் விக்கிரமராஜா போராட்டத்தை அறிவித்ததால், அது இந்துக்கள் மத்தியிலும், இந்து வியாபாரிகள் மத்தியிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.இதுதொடர்பாக கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் இந்துக்கள் தொடர்ந்து எதிர்ப்பை தெரிவித்து வந்தனர். அதோடு விக்கிரமராஜாவின் இந்து விரோத செயலையும் கடுமையாக விமர்சித்தார்கள்.
இது ஒருபுறமிருக்க, விக்கிரமராஜா தலைமையில் இயங்கும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையை சேர்ந்த வியாபாரிகள் நேரடியாகவே தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள்.இந்துக்களின் கடும் எதிர்ப்பால் வேறு வழியில்லாமல் 11-ஆம் தேதி நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த கடையடைப்பு போராட்டத்தை விக்கிரமராஜா கைவிடுவதாக திடீரென இன்று (07.08.2020) அறிவித்தார்.
அப்போது, “இந்துக்களின் முக்கிய பண்டிகையான கிருஷ்ணஜெயந்தி விழா 11-ஆம் தேதி கொண்டாட இருப்பதாலும், கோயம்பேடு மார்க்கெட்டை திறக்க அரசு உறுதியளித்ததாலும் போராட்டம் கைவிடப்படுவதாக” அவர் தெரிவித்தார்.அரசு தரப்பில் இருந்து கோயம்பேடு மார்க்கெட் விரைவில் திறக்கப்படும் என்று எந்த அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை. அதாவது இப்போதைய சூழ்நிலையில் கோயம்பேடு மார்கெட் திறக்கப்பட மாட்டாது என்பதைத்தான் தெளிவுபடுத்தி உள்ளனர்.
“இந்துக்களின் எதிர்ப்பால் போராட்டம் கைவிடப்பட்டது” என்று கூறினால் அது திட்டமிட்டு போராட்டம் அறிவித்த விக்கிரமராஜாவுக்கு பெருத்த அவமானம் என்பதால் அவர் பூசிமெழுகி உள்ளார் என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள்.