திமுக என்ற கட்சி தொடக்கம் முதல் தற்போது வரை கருணாநிதிக்கு, அடுத்து ஸ்டாலின் அடுத்து உதயநிதி என வாரிசு அரசியல் தான் நடந்து வருகிறது தலைவர்களாக உள்ளார்கள் என்பது அனைவரும் அறிந்ததே!. ஆனால் கருணாநிதியின் இன்னொரு மகனான முக அழகிரியல் தொடர்ந்து அரசியலில் நீடிக்க முடியவில்லை அதற்கு காரணம் உட்குடும்ப அரசியல்.
அழகிரி வந்தால் ஸ்டாலின் காணாமல் போய்விடுவார் என அறிந்து பக்கா பிளான் போட்டு அதற்கேற்றாற் போல் முக அழகிரியை வில்லனாக சித்தரித்து தினகரன் அலுவலகம் கொளுத்தப்பட்டு 3 அப்பாவிகள் உயிரிழந்தனர். அதற்கடுத்து அழகிரியால் அரசியல் செய்ய முடியவில்லை. அதற்கு இன்னொரு காரணம் ஜெயலலிதா. அவரை தரைகுறைவாக விமர்சித்த அழகிரியை அரசியல் வாசமே இல்லாமல் ஆக்கிவிட்டார்.
இந்த நிலையில் கருணாநிதியின் இன்னொரு வாரிசான கனிமொழியால் எங்கே உதயநிதிக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று பல்வேறு காய் நகர்த்தல்களை செய்துகொண்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்… உதயநிதியை முன்னிலைப்படுத்தி, கட்சியினரை உதயநிதிக்கு கும்பிடு போட வைப்பது என்று திமுகவையே தற்போது தன் மகனுக்கு எழுதிவைத்திருக்கிறார். இதுபோதாதென்று, சில நாட்களுக்கு முன்னர் ஹாக்கி மைதான துவக்கவிழாவில், இன்பநிதியை அறிமுகம் செய்து வைத்து அவருடைய அரசியல் வாழ்க்கைக்கும் பிள்ளையார் சுழி போட்டார்
இது ஒருபுறம் இருக்க தன் மகள் செந்தாமரையின் கணவர் சபரீசனை எப்படி திமுகவிற்குள் உச்சாணிக்கொம்பில் உட்காரவைத்தாரோ அதேபோல, தன் மகன் உதயநிதியின் மனைவி கிருத்திகா உதயநிதியையும் அரசியல் நிகழ்வுகளில் பங்கெடுக்க வைத்து, அடுத்த வாரிசுகளை உருவாக்கிக்கொண்டிருக்கிறார்.உதயநிதியின் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் தமிழக அரசின் சமூகநலன் மற்றும்மகளிர் உரிமைத்துறை சார்பில் நடந்த சமுதாய வளைகாப்பு விழாவில் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்திருக்கிறார் உதயநிதியின் மனைவி கிருத்திகா..
திடீரென்று கிருத்திகாவை களத்தில் இறக்க என்ன காரணம்? என்று யோசித்து மண்டையை பிய்த்துக்கொள்ளாதீர்கள்.. இதற்கு ஒரே ஒரு காரணம்தான்.. கனிமொழி.. ஆம், உதயநிதி – கனிமொழி இடையிலான பனிப்போர் நாளுக்குநாள் முற்றிக்கொண்டிருப்பதால், கனிமொழிக்கு பயம்காட்ட கிருத்திகா உதயநிதியை வைத்து காய் நகர்த்துகிறது ஸ்டாலின் குடும்பம்.. எப்படி ஸ்டாலின் மனைவி திமுகவிற்குள் கிச்சன் கேபினட் நடத்திக்கொண்டிருக்கிறாரோ, அதேபோல, உதயநிதி நாளை தலைமைக்கு வரும்போது, ஆதிக்கம் செலுத்த இப்போதே டிரெய்னிங் எடுக்கிறார் உதயநிதியின் மனைவியார்..
ஒரு அமைச்சரின் மனைவி, அரசுத்திட்டத்தை தொடங்கிவைக்கவோ, நடத்தவோ எந்த அரசியலமைப்புச்சட்டம் வழி வகுக்கிறது? உதயநிதியை தொடர்ந்து அவர் மகன் இன்பநிதி, மனைவி கிருத்திகா என்று வரிசையாக வந்தால் கடைக்கோடி திமுக தொண்டர் வெறும் போஸ்டர் மட்டும் தான் ஒட்டிக்கொண்டிருக்க வேண்டுமா?
கனிமொழி Vs உதயநிதி என்ற போட்டி, இனிவரும் காலங்களில் கனிமொழி Vs கிருத்திகா என்று மாற்ற திட்டம் போடுகிறாரா ஸ்டாலின்? ஸ்டாலினின் இத்தகைய வாரிசு அரசியல் போக்கால், திமுகவிற்குள்ளேயே கடும் கொந்தளிப்பில் இருக்கிறார்கள் உடன்பிறப்புகள். ஸ்டாலின்-அழகிரி சண்டைபோல, உதயநிதி-கனிமொழி மோதல், கனிமொழி – கிருத்திகா சண்டை என்று வாரிசுச்சண்டையால் வெகுவிரைவில் உடையப்போகிறது திமுக என்பது மட்டும் தெளிவாகிறது.