கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு பகுதியில் சிறுமியை 60-வயது முதியவர் கற்பழித்த குற்றச்சாட்டில் திருவிதாங்கோடு முஸ்லிம் ஜமாத் நிர்வாகிகள் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்காமல் குற்றம் சாட்டப்பட்ட நபரை ஜமாத் அலுவலகத்தில் கட்டி வைத்து வீட்டை விற்று மூன்று லட்சம் ரூபாய் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வழங்க வேண்டும் என்று கூறி கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இது சம்பந்தமான செய்திகள் சமூக வலைத்தளங்களில் பரவிய பின்னர் அந்த முதியவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் ஜமாத் நிர்வாகிகள் மீது எந்த நடவடிக்கையும்
எடுக்காதது தமிழக காவல்துறைக்கு முஸ்லிம் ஜமாத்கள் மீது அச்சம் ஏற்பட்டுள்ளதா.? என்ற சந்தேகத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்துகிறது. தமிழகம் முழுவதும் முஸ்லிம் ஜமாத்கள் தனி அரசாங்கம் போல் செயல்பட்டு வருவது ஜனநாயகத்தை சீரழிக்கும் என்பதை தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். தமிழக காவல் துறை இந்த சம்பவத்தில் கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபட்ட முஸ்லிம் ஜமாத் மீது யாரும் புகார் தெரிவிக்கவில்லை என்று காரணம் கூறாமல் தாமாகவே முன்வந்து வழக்கு பதிவு செய்து நடவடிக்கை வேண்டும்.
மேலும் இந்த சம்பவத்தில் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் நேரடியாக விசாரணை நடத்தி சம்மந்தப்பட்ட ஜமாத் நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இது போன்ற அணுகுமுறை தொடர்ந்தால் நாட்டில் சட்ட ஒழுங்கு பிரச்சனையும், நம்பகத்தன்மை இல்லாத சூழலும் உருவாகும் என்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். என ஹிந்து முன்னணி மாநிலத்தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அவர்கள் அறிக்கை
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















