Wednesday, March 11, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

மொழி என்பது, கல்வியை கற்பிக்கும் கருவி மட்டுமே ! இனி மார்க் சீட் முறை இல்லை! புதிய கல்வி குறித்து பிரதமரின் அற்புதமான விளக்கம்

Oredesam by Oredesam
September 12, 2020
in இந்தியா, செய்திகள்
0
மொழி என்பது, கல்வியை கற்பிக்கும் கருவி மட்டுமே ! இனி மார்க் சீட் முறை இல்லை! புதிய கல்வி குறித்து பிரதமரின் அற்புதமான விளக்கம்
FacebookTwitterWhatsappTelegram

புதிய கல்வி கொள்கை குறித்து நேற்று பிரதமர் மோடி தலைமையில் காணொலி வாயிலாக கருத்தரங்கு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் மத்திய கல்வி அமைச்சர் திரு ரமேஷ் பொக்ரியால், மத்திய கல்வி இணை அமைச்சர் திரு சஞ்சய் தோத்ரே, உயர்கல்வி செயலாளர் திரு அமித் காரே மற்றும் உயர் அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.இந்த மாநாட்டில் பேசியவர்கள், நாட்டை கல்வி மற்றும் இதர துறைகளில் முன்னெடுத்து சொல்வதற்கான திட்டங்கள் புதிய கல்விக் கொள்கை மூலம் வகுக்கப்பட்டுள்ளன என்றும், அதை அனைவரும் இணைந்து செயல்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.

புதிய உயர்நோக்கங்களை நிறைவு செய்வதாகவும், புதிய இந்தியாவில் புதிய வாய்ப்புகளை அளிப்பதாகவும் தேசிய கல்விக் கொள்கை இருக்கும் என்றும் அவர்கள் கூறினர்.மாநாட்டில் பேசிய பிரதமர், இந்தியாவின் 21வது நூற்றாண்டுக்குப் புதிய திசையைக் காட்டுவதாக தேசிய கல்விக் கொள்கை இருக்கும் என்று கூறினார். நாட்டின் எதிர்காலத்துக்கு அடித்தளமிடும் காலத்தில் நாம் இருக்கிறோம் என்று அவர் குறிப்பிட்டார்.

READ ALSO

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

மேலும் அவர் பேசுகையில் ‘வரும், 2022ல், நாட்டின், 75வது சுதந்திர தினத்தை நாம் கொண்டாடும் வகையில், புதிய கல்விக் கொள்கையின் கீழ், மாணவர்கள் பாடத் திட்டங்களை படிக்கத் துவங்கி விடுவர். அவர்களுக்கு அழுத்தம் தரும் மதிப்பெண் பட்டியல் முறை அகற்றப்பட்டு, முழுமையான மதிப்பீட்டு முறை பின்பற்றப்படும்.

விரும்பிய பாடம் மற்றும் தொழிற்கல்வியை சுதந்திரமாக தேர்வு செய்து படிக்கும் சூழல் உருவாக்கப்படும்,” என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். புதிய கல்விக் கொள்கை அறிவிக்கப்பட்டவுடன், எந்த மொழியில் கல்வி கற்பிக்கப்படும் என்பது, பெரும் விவாதப் பொருளாகி விட்டது.மொழி என்பது, கல்வியை கற்பிக்கும் கருவி தானே தவிர, அதுவே முழுமையான கல்வியாகி விடாது. புத்தகத்தால் கிடைக்கும் அறிவில், மக்கள் மூழ்கிக் கிடக்கின்றனர்.

எனவே, இந்த அறிவியல்பூர்வமான உண்மையை அவர்கள் உணர மறுக்கின்றனர்.
ஐரோப்பிய நாடுகளான எஸ்தோனியா, அயர்லாந்து, பின்லாந்து, போலந்து, கிழக்காசிய நாடுகளான ஜப்பான், தென் கொரியா போன்ற நாடுகளில், தாய் மொழியில் தான் ஆரம்பக் கல்வி கற்பிக்கப்படுகிறது.வீட்டில் எந்த மொழியைக் கேட்டு குழந்தை வளர்கிறதோ, அந்த மொழியிலேயே கல்வியை கற்கும் போது, வேகமாக அதை புரிந்து கொள்ள முடியும்.குழந்தையால் எந்த மொழியில் எளிதாக கல்வியை கற்க முடிகிறதோ, அந்த மொழியில் கல்வி கற்பிக்கப்பட வேண்டும்.

புரியாத மொழியில் கல்வி கற்பிப்பதால், குழந்தையின் கவனம், பாடத்தில் இருந்து மொழியை புரிந்து கொள்வதில் திரும்பி விடுகிறது. பாடத் திட்டங்கள், தாய் மொழியில் இல்லாமல், வேறு மொழிகளில் இருப்பதால், கிராமப்புற பெற்றோர், தங்கள் குழந்தைகளுக்கு பாடம் சொல்லித் தருவதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே தான், ஐந்தாம் வகுப்பு வரை, தாய் மொழி அல்லது உள்ளூர் மொழியில் பாடம் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மற்ற மொழிகளை கற்றுக் கொள்ள, வயது தடையில்லை என்பதை, நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆங்கிலம் உள்ளிட்ட உலக மொழிகளை, நாம் எந்த வயதிலும் கற்கலாம்.தற்போதைய கல்வி, கற்றல் முறையைக் காட்டிலும், மதிப்பெண் பட்டியல் முறையிலேயே செயல்படுகிறது. மதிப்பெண் பட்டியல் என்பது, பெற்றோருக்கு கவுரவ பட்டியலாகவும், மாணவர்களுக்கு அழுத்தத்தை அதிகரிக்கும் பட்டியலாகவும் உள்ளது. இதில் இருந்து மாணவர்களை விடுவிப்பதை, முக்கிய குறிக்கோளாகக் கொண்டு, புதிய கல்விக் கொள்கை வகுக்கப்பட்டு உள்ளது. தேர்வுகளை வைத்து மட்டுமே, ஒரு மாணவனை எடை போட முடியாது. எனவே, மதிப்பெண் பட்டியல் முறை அகற்றப்பட்டு, முழுமையான மதிப்பீட்டு முறை பின்பற்றப்படும்.

கடந்த, 30 ஆண்டுகளில், உலகம் பெரும் அளவிலான மாற்றத்தை சந்தித்துள்ளது. அதற்கு தகுந்தாற்போல, கல்வி முறை மற்றும் பாடத் திட்டங்களை மாற்ற வேண்டியது அவசியமாகிறது. மாணவர்களின் புதிய எதிர்காலத்திற்கு, இந்த புதிய கல்விக் கொள்கை, பிரகாசமான வழியை உருவாக்கும்.விளையாட்டு முறையிலான மழலையர் பள்ளிகள், தற்போது நகர்ப்புற மக்களுக்கு மட்டுமே கிடைக்கக் கூடியதாக உள்ளன. இனி, கிராமப்புற மற்றும் ஏழை மக்களின் குழந்தைகளுக்கும் இந்த வசதி கிடைக்கும்.குஜராத் முதல்வராக நான் பதவி வகித்த போது, பள்ளி மாணவர்களிடம், தங்கள் ஊரில் உள்ள ஒரு பழமையான மரத்தை அடையாளம் கண்டு, அதைப் பற்றி எழுதி வரச் சொன்னேன். இதன் வாயிலாக, சுற்றுச்சூழலை பற்றி மாணவர்கள் கற்றுக் கொள்வதோடு, அவர்கள் வாழும் பகுதி குறித்தும் அறிய, அது வழிவகுத்தது.

ஒவ்வொரு பகுதிக்கும், ஒரு தனி சிறப்பு உள்ளது. உதாரணத்திற்கு, பீஹாரின் பாகல்பூர், புடவை தயாரிப்புக்கு பிரசித்தி பெற்றது. இது குறித்து மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும். அதை, அவர்கள் நேரடியாக கண்டு உணர வேண்டும்.தங்களை தினமும் பள்ளிக்கு அழைத்து வரும், ரிக் ஷா ஓட்டுனர்களுடன், மாணவர்கள் கலந்துரையாட வேண்டும். அப்போது தான், நம் தினசரி வாழ்க்கையில், உழைக்கும் வர்க்கத்தினரின் பங்கு குறித்து, மாணவர்கள் உணர முடியும்.செயற்கை நுண்ணறிவு, ‘கிளவுட்’ தொழில் நுட்பம் போன்ற, 21ம் நுாற்றாண்டுக்கு தேவையான அறிவும், மாணவர்களுக்கு புகட்டப்பட வேண்டும். தற்போதைய பாடத் திட்டம், மாணவர்களுக்கு பல தடைகளை விதிக்கிறது. கலைப் பாடம் படிக்கும் மாணவனால், அறிவியல் படிக்க முடியாது என்ற நிலை உள்ளது; இது தவறு.

இதன் காரணமாக, பல மாணவர்கள், பாதியிலேயே படிப்பில் இருந்து விலக நேர்கிறது. ஆனால், நடைமுறையில் ஒவ்வொரு பாடமுமே, மற்றொன்றுடன் தொடர்புடையது.இந்த புதிய கல்விக் கொள்கையை பொறுத்தவரை, ஒரு குறிப்பிட்ட பாடப் பிரிவில் மட்டுமே, தன்னை பொருத்திக் கொள்ள வேண்டும் என்ற அவசியம் மாணவனுக்கு இல்லை.அவர்கள் விரும்பிய பாடம் மற்றும் தொழிற்கல்வியை தேர்வு செய்து படிக்கும் சுதந்திரமான சூழல் உருவாக்கப்படும். புதிய கல்விக் கொள்கை குறித்து, இதுவரை, 15 லட்சத்துக்கும் மேற்பட்ட கருத்துக்கள், பரிந்துரைகள், ‘ஆன்லைன்’ வாயிலாக வந்துள்ளன.வரும், 2022ல், நாட்டின், 75வது சுதந்திர தினத்தை நாம் கொண்டாடுகையில், புதிய கல்விக் கொள்கையின் கீழ், மாணவர்கள் பாடத்திட்டங்களை படிக்கத் துவங்கி இருப்பர்.
என அவர் பேசினார்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
செய்திகள்

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

March 5, 2026
வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.
இந்தியா

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

February 20, 2026
Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

9baje9minute ஞாயிற்றுக்கிழமை இரவு இந்த இதயத்தைத் தூண்டும் படங்கள் கொரோனா வைரஸுக்கு எதிரான இந்த போராட்டத்தில் நாங்கள் ஒன்றாக இருப்பதைக் காட்டுகின்றன.

9baje9minute ஞாயிற்றுக்கிழமை இரவு இந்த இதயத்தைத் தூண்டும் படங்கள் கொரோனா வைரஸுக்கு எதிரான இந்த போராட்டத்தில் நாங்கள் ஒன்றாக இருப்பதைக் காட்டுகின்றன.

April 6, 2020
திமுக ஆட்சியில் சீரழியும் சிறுவர்கள்-டாக்டர் ராமதாஸ்.

திமுக ஆட்சியில் சீரழியும் சிறுவர்கள்-டாக்டர் ராமதாஸ்.

September 28, 2021
விஜய் மல்லையாவை கதற விட்ட மோடி அரசு! 6200 கோடிக்கு ₹14,000 கோடி பறிமுதல் செய்வதா? விஜய் மல்லையா புலம்பல்!

விஜய் மல்லையாவை கதற விட்ட மோடி அரசு! 6200 கோடிக்கு ₹14,000 கோடி பறிமுதல் செய்வதா? விஜய் மல்லையா புலம்பல்!

July 27, 2021
புதிய எம்.பிக்கள் ‘கொள்கை விவகாரங்களில் புதுப்பிப்புடன் இருங்கள்’ மோடி அறிவுரை!

சமூக வலைதளங்களை நாட்டின் நலனுக்கு எதிராக பயன்படுத்த வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு.

July 26, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • BREAKING || த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!
  • போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!
  • தமிழக வெற்றிக் கழகத்துடன்(TVK) இனி யார் கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளது..?
  • வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x