சமூக வலைத்தளங்களுக்கு புதிய கட்டுப்பாடு விதிகளை மத்திய அரசு செயல்படுத்தியது .இந்த விதிகளுக்கு ட்விட்டர் மட்டும் பிடிவாதமாக ஒப்புக்கொள்ள மாட்டோம் என அடம் பிடித்து வருகிறது. இந்த நிலையில் சமூகவலைதளங்களுக்கான புதிய விதிமுறைகளின் படி – குறை தீர்க்கும் அதிகாரி, நிர்வாகத்தின் தொடர்பு நபர், இணக்க அதிகாரி – ஆகியோரை நியமிக்க தவறியதால், ட்விட்டர் தன் இடைநிலை” (intermediary) அந்தஸ்தை இழந்தது!
இதன் காரணமாக, ட்விட்டர் பயன்பாட்டாளர்கள் பதியும் தவறான – சட்டவிரோதமான தகவல்களுக்கு ட்விட்டர் நிறுவனம் தான் பொறுப்பு . இதற்கடுத்து ட்விட்டர் நிறுவனம் மீது பல வழக்குகள் பாய்ந்தது . முகமது ஜுபேர் என்பவர், “உத்தரபிரதேசத்தில் வயது முதிர்ந்த பாய் ஒருவரை ஜெய் ஶ்ரீராம் சொல்லச் சொல்லி சிலர் அவரை வற்புறுத்தி அடித்தனர். அவர் தாடியை வெட்டினர்” என ஒரு வீடியோ பகிர, அதை விசாரித்த உபி காவல்துறை, “அந்த முதியவர் பாய் தாயத்து விற்பவர். அவரிடம் தாயத்து வாங்கியவர்கள், அந்த தாயத்தால் அவர்களுக்கு கெட்டது நடந்ததாக சொல்லி அவரை அடித்திருக்கிறார்கள். அடித்த நால்வரில் மூவர் இஸ்லாமியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவரை ஜெய்ஶ்ரீராம் சொல்ல சொல்லவில்லை அவர்கள்” என்று கூறியுள்ளார்கள்.
கலவரம் தூண்டும் நோக்கத்தில் அந்த வீடியோவை பகிர்ந்த முகமது ஜுபேர் அந்த வீடியோவை மியூட் செய்து பகிர்ந்திருந்தார். ஒலியில்லா வீடியோவை பார்த்து பொங்கி ஆயிரக்கணக்கானோர் ரீட்வீட் செய்தனர். பல ஊடகங்ககளும் அதை காப்பி செய்து பகிர்ந்தனர்.இந்து முஸ்லிம் கலவரம் உருவாகும் அபாயம் இருந்ததால், உ.பி போலீஸ் அந்த வீடியோவை ‘manipulated media’ என ட்விட்டரை அறிவிக்க சொல்லியும் ட்விட்டர் கேட்கவில்லை. ட்விட்டர் இந்தியாவின் நிர்வாக இயக்குனரை கைது செய்ய முடிவு செய்யப்பட்டது. உத்திர பிரேதேச காவல்துறை
பல்வேறு பிரிவுகளின் கீழ், ‘டுவிட்டர் இந்தியா’ மீது உ.பி., போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
கர்நாடகாவின் பெங்களூருவில் உள்ள ‘டுவிட்டர் இந்தியா’ தலைவர் மணிஷ் மகேஸ்வரிக்கு நேரில் ஆஜராகும்படி, ‘நோட்டீஸ்’ அனுப்பப்பட்டது.இந்நிலையில், மணிஷ் மகேஸ்வரியை கைது செய்ய, இடைக்கால தடை விதித்து கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, ‘என்னை கைது செய்ய மாட்டோம் என, உ.பி., போலீசார் உறுதி அளித்தால், 24 மணி நேரத்திற்குள், உத்திர பிரேதேசத்தில் விசாரணைக்கு ஆஜராக தயார்’ என, மணிஷ் மகேஸ்வரி தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.இதற்கு பதில் அளித்த உ.பி., போலீஸ் தரப்பு, ‘மணிஷ் மகேஸ்வரியை கைது செய்வதற்காக அவருக்கு நோட்டீஸ் அனுப்பவில்லை. ‘டுவிட்டர் நிறுவனத்தின் இந்திய பிரதிநிதி யார் என்பதை அறிந்து கொள்ளும் நோக்கத்தில் தான் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இது விசாரணையின் ஒரு பகுதி’ என, தெரிவிக்கப்பட்டது.
மத்திய அரசின் புதிய விதிமுறையின்படி, பயனாளர்கள் அளிக்கும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க, நம் நாட்டிலேயே குறை தீர்ப்பு அதிகாரியை நியமிக்காமல், ‘டுவிட்டர்’ காலம் தாழ்த்தி வந்தது.டுவிட்டர் நிறுவனத்தின் அமெரிக்க பிரிவின் சட்ட கொள்கை இயக்குனர் ஜெரமி கெசல் என்பவரை, நம் நாட்டுக்கான குறை தீர்ப்பு அதிகாரியாக அந்நிறுவனம் நியமித்தது.
‘இந்தியாவில் வசிப்பவரையே, குறை தீர்ப்பு அதிகாரியாக நியமிக்க வேண்டும்’ என, புதிய விதிமுறை தெரிவிக்கிறது.மத்திய அரசின் விதிமுறைகளை டுவிட்டர் நிறுவனம் மீறியுள்ளதாக, அமித் ஆச்சார்யா என்ற வழக்கறிஞர், டில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘புதிய குறை தீர்ப்பு அதிகாரியை நியமிக்க, தங்கள் இஷ்டத்துக்கு கால அவகாசம் எடுத்துக் கொள்வதை அனுமதிக்க முடியாது’ என, நீதிபதி தெரிவித்தார்.இதையடுத்து, டுவிட்டர் தரப்பில் இரண்டு வாரங்கள் கால அவகாசம் கோரப்பட்டது.அதை ஏற்க மறுத்த நீதிபதி, ‘புதிய அதிகாரி எப்போது நியமிக்கப்படுவார் என்பது குறித்து நாளை