இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவித்து தொடர்ந்து இந்தியாவுக்கு குடைச்சல் தருகிறது. எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் பாகிஸ்தான் தன்னுடைய சொந்த மக்களின் நிலையை ஒரு போதும் கவனித்தது கிடையாது. இதன் விளைவு அத்தியாவசிய பொருட்கள் கூட கிடைக்காமல் லட்சக்கணக்கான மக்கள் தவித்து வருகின்றனர் கோடிக்கணக்கான மக்கள் அத்தியாவசிய பொருட்களை கூட வாங்க முடியாத நிலையில் இருக்கும்போது பாகிஸ்தான் இந்தியாவுடன் போரை தொடங்கினால் அதன் பொருளாதார நிலமை மேலும் மேலும் மோசம் அடையும் என்பதுதான் நிதர்சனமான உண்மை. கடந்த சில ஆண்டுகளாகவே பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. அந்த நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை எல்லாம் பல மடங்கு உயர்ந்திருக்கிறது. இதன் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் மூன்று வேளை உணவுக்கு கூட கஷ்டப்பட்டு வருகின்றனர்.
ஆனால் இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் ஆதரவாளர்கள் பாகிஸ்தானில் இஸ்லாமியர்கள் சந்தோசமாக வாழ்வது போன்றும் இந்தியாவில் அடிமைப்படுத்துவது போன்றும் மதத்தின் அடிப்படையில் கட்டமைக்கிறார்கள். பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் சென்று பார்த்தல் தான் தெரியும் மதவெறியால் நாடுகளே அழிந்துவருகிறது. இந்தியாவின் அருமை தெரியாமல் இந்தியாவிற்கு எதிராக பேசியும் பாகிஸ்தான் கொடி ரோட்டில் கிடந்தால் அதை எடுத்து பாகிஸ்தான் மேல் அன்பையும் காட்டுகிறார்கள். அவர்கள் என்ன இந்தியாவில் இருக்கவேண்டும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
உதாரணமாக பாகிஸ்தானில் ஒரு கிலோ சிக்கன் 798 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அரிசி ஒரு கிலோ 340 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது, ஒரு டஜன் முட்டையின் விலை 332 ரூபாய் ,ஒரு லிட்டர் பாலின் விலை 224 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது . பாகிஸ்தானை சேர்ந்த சுமார் பத்து மில்லியன் மக்கள் மூன்று வேளை உணவு கிடைக்காமல் தவித்து வருவதாக ஒரு அறிக்கை கூறுகிறது.
இப்படி பல்வேறு பொருளாதார சவால்களுக்கு மத்தியில் சிக்கி இருக்கும் பாகிஸ்தான் இந்தியாவுடன் போரை தொடங்குவது பொருளாதார ரீதியாக மேலும் சிக்கலை ஏற்படுத்தும். உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி ஏற்கனவே பாகிஸ்தானில் வேளாண்மை கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. அங்கே பெரும்பாலும் நெல் மற்றும் சோளம் விளைவிக்கப்பட்ட நிலையில் காலம் தவறிய மழை, வறட்சி உள்ளிட்டவை காரணமாக விவசாயம் சரிவடைந்துவிட்டது. இதனால் ஏற்கனவே அங்கே உணவுப் பொருட்களுக்கு பற்றாக்குறை நிலவுகிறது..
பாகிஸ்தான் அரசு வெளிநாடுகளில் இருந்து தான் உணவு பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறது. அதற்கும் போதிய அளவிலான வெளிநாட்டு பணம் கையிருப்பு பாகிஸ்தான் அரசிடம் இல்லை. இதன் காரணமாக நடப்பாண்டில் மட்டும் சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான பாகிஸ்தான் மக்கள் கடுமையான உணவு பஞ்சத்தில் சிக்கித் தவிப்பார்கள் என உலக வங்கியின் அறிக்கை கூறுகிறது.
குறிப்பாக வேளாண்மையை சார்ந்து இருக்கும் கிராமப்புறங்கள் பெரும் பாதிப்பை சந்திக்கும் என தெரிவிக்கப்படுகிறது. இது தவிர பாகிஸ்தானில் பணவீக்க விகிதம் பல மடங்கு உயர்ந்திருக்கிறது. உருளைக்கிழங்கு, தக்காளி, காய்கறிகள் மற்றும் பழங்கள் உள்ளிட்டவற்றின் விலை பல மடங்கு உயர்ந்திருப்பதால் சாமானிய மக்களால் மூன்று வேளை உணவு என்ற தேவையை கூட பூர்த்தி செய்து கொள்ள முடியாத நிலையில் இருக்கின்றனர்.
இப்படிப்பட்ட சூழலில் தான் பாகிஸ்தான் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை தூண்டி விடுகிறது. கடந்த 22 ஆம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை அடுத்து பாகிஸ்தான் மீது ராஜாங்க ரீதியிலான பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வருகிறது. இது இரு நாட்டு உறவிலும் பெரிய விரிசலை ஏற்படுத்தி விட்டது.
பிரதமர் நரேந்திர மோடி இந்த தாக்குதலுக்கு காரணமாக இருப்பவர்கள் கடும் விளைவுகளை எதிர்கொள்வார்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளார். ஏற்கனவே பாகிஸ்தான் அரசாங்கம் உள்நாட்டிலேயே அரசியல் அழுத்தம், பொருளாதார சிக்கல், மக்களின் அதிருப்தி என பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து இருக்கும் போது தற்போது இந்தியாவின் நடவடிக்கைகளும் பாகிஸ்தான அரசுக்கு பெரிய பிரச்சனையாக உருவாகியிருக்கிறது. 2024 ஏப்ரல் மாதத்தில் இருந்து 2025 ஜனவரி வரையிலான காலகட்டத்தில் மட்டும் பாகிஸ்தான் இந்தியாவிடம் இருந்து 450 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான பொருட்களை இறக்குமதி செய்து இருக்கிறது. இது நேரடி வர்த்தகம். மறைமுகமாக நடைபெற்ற வர்த்தகத்தின் மதிப்பு 10 பில்லியன் டாலர்கள் என சொல்லப்படுகிறது.
குறிப்பாக மருந்து, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் எல்லாம் இந்தியாவில் இருந்து தான் பாகிஸ்தானுக்கு செல்கின்றன. மேலும் சில உணவுப் பொருட்கள் இந்தியாவிலிருந்து துபாய், சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு சென்று பின்னர் அங்கிருந்து பாகிஸ்தானுக்கு கொண்டு செல்லப்படுகிறது. தற்போது இந்தியா பாகிஸ்தானுடன் அனைத்து வகையான வர்த்தக உறவையும் ரத்து செய்து இருப்பதால் பாகிஸ்தானில் பெரிய அளவிலான உணவு பஞ்சம் ஏற்படும்.
சிந்து நதி ஒப்பந்தத்தையும் மத்திய அரசு நிறுத்தி வைத்திருக்கிறது. இதன் மூலம் இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு செல்லக்கூடிய நீர் தடுக்கப்படும். இதனால் பாகிஸ்தானில் விவசாயம் பாதிக்கப்படும். பஞ்சாப் மற்றும் சிந்து ஆகிய மாநிலங்களில் வறட்சி ஏற்படும் வாய்ப்பு உண்டாகும்.இது பாகிஸ்தானில் வேளாண்மையை பெருமளவு பாதிக்கும் பசியாலேயே பலர் உயிரிழக்கக் கூடிய சூழலை உண்டாக்கும் என சொல்லப்படுகிறது. பாகிஸ்தானில் பணவீக்க விகிதம் 25 சதவீதமாக உயர்ந்து இருக்கிறது. இதன் மூலம் ஆசியாவிலேயே அதிகபட்ச பணவீக்கம் கொண்ட நாடு என பாகிஸ்தான் பெயர் பெற்றிருக்கிறது .
பணம் வீக்கம் உயர்ந்து வருவது, உணவு பாதுகாப்பின்மை, பொருளாதாரம் சரிவடைந்து வருவது ,இந்தியாவுடன் எல்லை மோதல்கள் மற்றும் ஏற்கனவே வெளிநாடுகளில் வாங்கி இருக்கும் கடன் இப்படி இந்த பிரச்சனைகளுக்கு மத்தியில் பாகிஸ்தான் இந்தியாவுடன் போரில் ஈடுபட்டால் போருக்காகவே அது பல மடங்கு பணத்தை செலவு செய்ய வேண்டி இருக்கும். இது பாகிஸ்தானை சேர்ந்த சாமானிய மக்களை மேலும் பாதிக்கும்.
பாகிஸ்தான் 22 பில்லியன் அமெரிக்க டாலர்கள் பணத்தை வெளியில் கடனாக வாங்கி வைத்திருக்கிறது. அந்த நாட்டின் வெளிநாட்டு நாணய கையிருப்பு வெறும் 8 பில்லியன் டாலராகத்தான் இருக்கிறது. இந்த 8 பில்லியன் டாலர்களைக் கொண்டு அடுத்த ஒன்றரை மாதங்களுக்கான இறக்குமதிக்கு மட்டுமே பாகிஸ்தானால் செலவிட முடியும்.
சர்வதேச நாணய நிதியமான ஐஎம்எஃப் பாகிஸ்தான் அமைதியை நிலைநாட்ட வேண்டும் பிராந்திய ரீதியாக போர் உள்ளிட்ட எந்த ஒரு நடவடிக்கைகளும் மேற்கொள்ளக்கூடாது என நிபந்தனைகளை விதித்து தான் பல மில்லியன் டாலர்கள் நிதியுதவியை வழங்கி இருக்கிறது. எனவே பாகிஸ்தான் இந்தியாவுடன் போரில் ஈடுபட்டால் ஐஎம்எஃப் வழங்க வேண்டிய பணம் நிறுத்தி வைக்கப்படும். இப்படி பல்வேறு நெருக்கடியில் சிக்கி இருக்கும் பாகிஸ்தான் இந்தியாவுடன் போரில் இறங்கினால் பொருளாதார ரீதியாகவும் பசி, பஞ்சம் என்றும் லட்சக்கணக்கான மக்களை பலி கொடுக்க வேண்டிய நிலைக்கு சென்றுவிடும்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















