தமிழகத்தில் பா.ஜ.கவை வலுப்படுத்த தேசிய தலைமை உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக தமிழக பாஜகவிற்கு புதிய இளம் தலைவர் அண்ணாமலை முன்னாள் மாநில தலைவர் எல்.முருகன் அவர்களுக்கு மத்திய அமைச்சர் பதவி வானதி சீனிவாசனுக்கு தேசிய மகளிர் அணி பதவி என தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளித்து வருகிறது. தற்போது செய்தியாளர்கள் சந்திப்பில் அதிரடி காட்டி வருகிறார்கள் தமிழக பா.ஜ.க தலைவர்கள். அண்ணாமலை வானதி சீனிசவாசன் போன்ற தலைவர்கள் Attacking Mode ல் உள்ளார்கள். இது பா.ஜ.கவினரிடையே புது உற்சாகத்தை கொடுத்துள்ளது. சமூக வலைதங்களிலும் வைரல் ஆகி வருகிறது.
இந்த நிலையில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ‘தினமலர்’ நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில் தமிழகத்தில் தி.மு.க ஆட்சிக்கு எதிரான முதன்மையான எதிர்க்கட்சியாக பா.ஜ.க உருவெடுத்து வருகிறது. தற்போது புதுவையில் பாஜக கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. மேலும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பா.ஜ.க வை வலுப்படுத்த பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டு உள்ளன. மத்திய அமைச்சர் எல். முருகன், விரைவில் தமிழகம் முழுதும் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார்.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் தலைமையில், கட்சியின் செயல்பாடு இரட்டிப்பு வேகம் எடுக்கும். தி.மு.க., ஆட்சியில் மக்கள் சந்திக்கும் பிரச்னைகளுக்கு எதிராக அவர் குரல் கொடுப்பார். தமிழகத்தில் முதன்மையான எதிர்க்கட்சியாக பா.ஜ.க வை உருவாக்க அனைத்து முயற்சிகளும் நடக்கின்றன. செப்டம்பரில் மூன்று நாள் சுற்றுப் பயணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி வர திட்டமிட்டுள்ளேன்.மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள 11 பெண் அமைச்சர்களும், கோவையில் விரைவில் சந்திக்க உள்ளனர். மோடி அமைச்சரவையில் இதர பிற்படுத்தப்பட்டோர், தலித் அமைச்சர்கள் அதிக எண்ணிக்கையில் இடம் பெற்றுள்ளனர்.
இந்த சாதனையை தமிழகத்தின் அனைத்து கிராமங்களுக்கும் எடுத்துச் செல்ல திட்டமிட்டுள்ளோம்.தமிழகத்தில் மேலும் பல வெற்றிவேல் யாத்திரைகள் நடத்தப்பட வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி.மு.க., இடம் பெற்றுள்ளது. அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.
நன்றி : தின மலர்