காணாமல் போய் சடலமாக மீட்கப்பட்ட நெல்லை காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தனசிங்கின் உடற்கூராய்வில் வயிற்றுக்கு மேல் பகுதியில் இரும்பு தகடு இருந்ததும் கால்கள் கட்டப்பட்டிருந்ததும் தெரியவந்துள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலையா தற்கொலையா என விசாரித்து வரும் நிலையில் கால்கள் கட்டப்பட்டிருந்தது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் நெல்லை கிழக்கு மாவட்டத் தலைவர் கே.பி.கே.ஜெயக்குமார் தனசிங். இவர் கடந்த 4 நாட்களுக்கு முன்பு, நெல்லை மாவட்ட கண்காணிப்பாளரிடம் “எனது வீட்டை சில மர்மநபர்கள் கண்காணித்து வருகிறார்கள்.என் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என 4 பக்கங்கள் கொண்ட புகார் அளித்திருந்தார். இந்த நிலையில் இரு தினங்களாக தந்தையை காணவில்லை என அவருடைய மகன் உவரி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து கரைசுத்துபுதூர் உவரியில் உள்ள தனக்கு சொந்தமான தோட்டத்தில் பாதி எரிந்த நிலையில் ஜெயக்குமார் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இவர் எழுதிய கடிதத்தில் ரூபி மனோகரன், கே.வி. தங்கபாலு உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் பெயர் இருந்தது.இது குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து கட்சியினரும் வலியுறுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் ஜெயக்குமாரின் உடற்கூராய்வில் அவருடைய வயிற்றில் மேல் பகுதியில் இரும்புத் தகடு இருந்ததும் கால்கள் கட்டப்பட்டிருந்ததும் தெரியவந்தது. தோட்டத்தில் பாதி எரிந்த நிலையில் ஜெயக்குமார் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் இது கொலையா, தற்கொலையா என சந்தேகம் எழுந்தது. ஆனால் உடற்கூராய்வு தகவல் மூலம் அது கொலை என உறுதியாகியுள்ளது.
ஜெயக்குமார் இறப்பு விவகாரத்தில் கட்சி ரீதியாகவும் விசாரணை நடத்தி வருகிறோம். இந்த சம்பவத்தில் அரசியல் பின்புலத்துடன் இருந்தாலும் அவர்கள் கைது செய்யப்படுவர் என முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். இவ்வாறு செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவரின் புகாருக்கே,
இந்நிலையில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறியதாவது : திமுக ஆட்சியில் இதுதான் நிலைமை என்றால், சாமானிய பொதுமக்கள் எதிர்கொள்ளும் சட்ட ஒழுங்கு பாதுகாப்பு குறித்த கேள்வி பலமாக எழுகிறது. உடனடியாக, மறைந்த காங்கிரஸ் திருநெல்வேலி கிழக்கு மாவட்டத் தலைவர் திரு.ஜெயக்குமார் அவர்கள் புகாரில் குறிப்பிட்டுள்ள அனைவரிடமும் விசாரணை நடத்தி, உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டுமென்று திமுக அரசை வலியுறுத்துகிறேன். என அண்ணாமலை கூறியுள்ளார்.