முதல்வருக்கு பொருளாதார ஆலோசனை குழு! அமைச்சர் பிடி­ஆர் தியா­க­ரா­ஜனுக்கு மானமிருந்தால் ராஜினாமா செய்யட்டும்! பா.ஜ.க எஸ்.ஆர்.சேகர்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பொருளாதார ஆலோசனை வழங்குவதற்காக ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற எஸ்தர் டஃப்லா, அரவிந்த் சுப்பிரமணியன், ஜீன் ட்ரெஸ், டாக்டர் எஸ் நாராயணன் ஆகிய 5 பொருளாதார நிபுணர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் என அறிவித்தார்கள். இது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

இது குறித்து தமிழக பா.ஜ.க வின் பொருளாளர் எஸ்.ஆர் சேகர் அவர்கள் அவரது முகநூல் பதிவில் பதிவிட்டிருப்பது :

ஒரு விஷயத்தை பற்றி யாரும் பேசுவதில்லை ஆம் ரகுராஜன் உள்ளிட்ட அந்த ஆறு முகங்கள் சாதாரணம் அல்ல, அவற்றின் ஒரு நிமிட வருமானமே பல்லாயிரம் டாலர்களை தாண்டும் சும்மா வந்து அவர்கள் ஆலோசனை சொல்வார்கள் என்பது பிரையன் லாரா கொட்டாம்பட்டிக்கு தெருவோர கிரிக்கெட் ஆட வருவார் என்பதற்கு சமம் ஆம், மிகபெரிய சம்பளம் அவர்களுக்கு செல்லும் இந்த 6 பேரின் சம்பளம் என்பது தமிழக அரசின் மிகபெரிய செலவு அவர்களுக்கு சம்பள விவரம் என்ன? செலவு என்ன என ஆளும் கட்சியும் சொல்லவில்லை எதிர்கட்சியும் கேட்கவில்லை சரி, இவர்கள் 6 பேருக்கு அவசியம் என்றால் எதற்கு தமிழக நிதியமைச்சர்? எதற்கு அவருக்கு பொறுப்பு வெட்டி சம்பளம்? அவர் என்ன திறமை இல்லாதவரா?

திறமை வாய்ந்தவர் எனில் ஏன் 6 பேர் கொண்ட முட்டு, அதுவும் பிரமாண்டமான முட்டு? நிதி அமைச்சர் தன்மானம் உள்ளவர் எனில் ராஜினாமா செய்துவிட்டு வரவேண்டும் இது அவரின் சுயமரியாதைக்கான பெரும் சவால் மானமிருந்தால் அவர் ராஜினாமா செய்யட்டும் இல்லை ஹிஹிஹ்ஹி என பல்லிளித்தால் நீடிக்கட்டும் சரி பொருளாதாரத்தில் ஆளில்லை என பன்னாட்டு பெருமூளைகளை அழைக்கும் அரசு, நாளை தமிழக உளவுதுறையினை பலபடுத்த ரிட்டையர்டு இஸ்ரேல் மொசாட் ஆசாமிகளை அழைக்குமா?

காவல்துறையினை வலுபடுத்த சர்வதேச போலீஸ் நிபுணர்களை அழைப்பார்களா? ஒவ்வொரு துறைக்கும் ஆங்கிலேயனும் அந்நியனும் எனில் இவர்களுக்கு என்னதான் வேலை? ஏன் வெட்டியாக பதவி? எதிர்கட்சி அதிமுக கோமாவில் சிக்கிவிட்டது இனி அது 5 வருடம் கழித்துத்தான் எழும்
தேசிய கட்சியான பாஜக இதை கேட்கலாம், 6 பேர் நியமண சம்பளம், அந்நிய நாட்டவருக்கு ஏன் தமிழக வேலை வாய்ப்பு என கேட்கலாம் கேட்பார்கள் என எதிர்பார்ப்போம் ஆக என்ன தெரிகின்றது?

தமிழகத்தில் குறிப்பாக திமுகவில் ஒருவரும் திறமையானவர் இல்லை என்பதால் அமெரிக்காவிலும் லண்டனிலும் இருந்து மூளைகளை வாங்கியுள்ளார்கள் திமுக சுல்தான்கள் இதற்கு தமிழக மக்களின் வரிபணம் வெட்டியாக செலவழிக்கபட வேண்டும் இதற்கு ஏன் ஸ்டாலின் முதலமைச்சர், தியாகராஜன் நிதியமைச்சர்? நேரடியாக ரகுராம் ராஜனிடமே மாநிலத்தை ஒப்படைத்துவிடலாம்.
ஐயோ நம் வரிப்பணம் இப்படி பாழாபோகுதே?

https://www.facebook.com/sekhar.sr/posts/10158036514886615

என அவரின் முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Exit mobile version