நியூயார்க்கில் இப்போதைய நிலவரம் தான் இது.கொரானாவில் 3 வது கட்டத்தில் நியூயார்க் இருக்கிறது. இந்தியாவில் கொரானாவின் பரவல் இப்பொழுது 2 வது கட்டத்தில் இருக்கிறது.இருந்தாலும் 2 வது கட்டத்திலும் இந்தியா வில் அண்டை நாடுகளில் 2 வது கட்டத்தில் கொரானா பரவியதை விட குறைவாகவே இருப்பதால் இந்தியாவில் மற்ற நாடுகளில் உள்ளது மாதிரி கொரானாவின் பாதிப்பு பெரிய அளவில் பாதிக்கப்படாது.
நியூயார்க் மாதிரி தான் இப்பொழுது இந்தி யாவில் மகாராஷ்டிரா இருக்கிறது.அமெரிக்காவில் நியூயார்க் தான் கொரானா தாக்குதலில் முதலிடம்.இந்தியாவில் மகாராஷ்டிராதான் முதலிடம்.மகாராஷ்டிராவில் இந்த மாதம் 10 ம் தேதி 2 பேருக்கு கொரானா வைரஸ் பாதிப்பு இருந்த தாக கண்டு பிடிக்கப்பட்டதுஇப்பொழுது 20 ம் தேதி 52 பேருக்கு இருப்பதாக உறுதி செய்ய ப்பட்டு உள்ளது.
நியூயார்க்கில் மார்ச் 2ல் இருந்து மார்ச் 11 தேதிக்குட்பட்ட 10 நாட்களில் 2 ல் இருந்து 220 பேருக்கு கொரானா பாதிப்பு உயர்ந்துள்ளது.அதே நேரத்தில் மகாராஷ்டிராவில் அதே பத்துநாட்களில் 2 ல் இருந்து 52 தான் உயர்ந்துஇருக்கிறது.
நியூயார்க்கும் மகாராஷ்டிராவும் ஒரே மாதிரியான மாநிலங்கள் தான். நியூயார்க்கில் ஒரு சதுர கிலோமீட்டர்க்கு 159 மக்கள் வாழ்கிறா ர்கள்.மகாராஷ்டிரா வில் ஒரு சதுரகிலோமீ ட்டர்க்கு 365 பேர் இருக்கிறார்கள்.
ஆனால் இரண்டிலும் கொரானா பரவும் வேகத்தில் மிகப்பெரிய அளவில் வித்தியாசம் இருக்கிறது. நியூயார்க்கை விட அதிக மக்கள் தொகை அடர்த்தி மிகுந்த மகாராஷ்டிராவில் 2 ஆம் கட்டத்தில் நியூயார்க்கில் பரவியதை விட4 ல் ஒரு மடங்கு தான் இருக்கிறது.
அது மட்டுமல்ல ஒவ்வொரு நாளிலும் கொரா னா 2 வது கட்டத்தில் மூன்று மடங்காக பெருகிக்கொண்டே போகும். ஆனால் மகாராஷ்டிரா வில் 2,6,3,12,5,4,7,3,3,5 என்று அதனு டையபரவல் ஒரு சராசரியான மழைக்கால த்தில்பரவக்கூடிய வைரஸ் காய்ச்சல் மாதிரி தான் இருக்கிறது.
கொரானாவின் இரண்டாவது கட்டத்தை இந்தியா வெற்றிகரமாக கடந்து விட்டது.இந்தி யாவில் 3வது ஸ்டேஜ் வருகின்ற ஞாயிற்று கிழமையில் இருந்து துவங்குகிறது.அதனையும் நாம் வெற்றிகரமாக கடந்து விட்டால் 4வது கட்டம் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது. இதனை. தொடர்ந்து தான் பிரதமர் மோடி அவர்கள் அவ்வளவு அக்கறையுடன் வருகின்ற ஞாயிறன்று மக்கள் தானாக வே ஊரடங்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறுகிறார்.
ஞாயிறு விடுமுறை நாள் என்பதால் ஒருவர் தன்னுடைய குடும்பத்துடன்வெளியில் சுற்றி நோய் தொற்று ஏற்பட்டால் அதனால் அவர்க ளின் நெருங்கி ய உறவினர்கள் நண்பர்கள் பக்கத்தில் உள்ளவர்கள் என்று அனைவருக்கும் பரவ நேரிடும்.
இதனால் நியூயார்க் மாதிரி 3 நாட்களில் 5000 க்கும் மேற்பட்ட மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது மாதிரி நேரிடலாம். ஒரு மாநிலத்து க்கே 5 ஆயிரம் என்றால் ஒட்டுமொத்தமாக இந்தியா முழுவதும் எவ்வளவு பேருக்கு பரவ நேரிடும். அதனால் வருகின்ற ஞாயிற்று கிழ மை வீட்டி லேயே இருப்போம்
இதனால் 3 வது கட்டத்தையும் நாம் பெரியபாதிப்பின்றி வெற்றிகரமாக கடந்து செல்ல முடியும்.கடந்து செல்வோம்.
எழுத்தாளர் : விஜயகுமார் அருணகிரி