பட்டியல் சமூகத்தின், உண்மையான பாதுகாவலர்கள் நாங்கள் தான் என மேடைதோறும் தி.மு.க. தலைவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.ஆனால் திமுக ஆட்சிக்கு பொறுப்பேற்றதிலிருந்து பட்டியல் சமூகத்தினர் மீது நடக்கும் தாக்குதல்கள் அதிகமாகி உள்ளது.
திமுக அமைச்சர்களும் பட்டியல் சமூகத்தினரை மதிப்பதில்லை. ஏன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் திமுக அமைச்சர் ராஜகண்ணப்பனை நேரில் சென்று சந்தித்த போது பிளாஸ்டிக் நாற்காலி தான் கொடுக்கப்பட்டது. இந்த சம்பவம் பெரும் சர்ச்சைக்குள்ளானது.
அதே போல் வேங்கைவயல் சம்பவம் நடந்து ஒரு வருடம் ஆகிவிட்டது..இன்னும் குற்றவாளிகளை கண்டுபிடிக்கவில்லை, முக்கிய அரசியல் நிகழ்ச்சிகளில் , பட்டியல் சமூகத்தை சேர்ந்த பேரூராட்சி தலைவரையே அனுமதிப்பதில்லை இப்படி இந்த இரண்டு வருடங்களில் பட்டியல் சமூகத்தின் மீது நடத்தப்பட்ட சமூக ரீதியான தாக்குதல்களை கூறி கொண்டே போகலாம்
இந்த நிலையில் ஒருபடி மேல் சென்று சென்னை பல்லாவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி அவர்களின் மகன் வீட்டில் வேலை செய்த, 18 வயது பட்டியல் சமூக இளம்பெண்ணை திமுக சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகன் மற்றும் மருமகளால் கடுமையாகத் தாக்கப்பட்டும், சிகரெட்டால் சூடு வைத்தும் துன்புறுத்தப்பட்டுள்ளார் என்ற தகவல் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
அண்ணாமலை அவர்கள் பதிவிட்டுள்ள செய்தி :
சென்னை பல்லாவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி அவர்களின் மகன் வீட்டில் வேலை செய்த, 18 வயது பட்டியல் சமூக இளம்பெண், சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகன் மற்றும் மருமகளால் கடுமையாகத் தாக்கப்பட்டும், சிகரெட்டால் சூடு வைத்தும் துன்புறுத்தப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
மருத்துவக் கல்வி பயில உதவியாக இருக்கும் என்பதற்காகவும், எளிய குடும்பச் சூழ்நிலை காரணமாகவும், வீட்டு வேலை செய்ய வந்த இளம்பெண்ணை, இத்தனை கொடூரமாகத் தாக்கியிருப்பது, திமுக என்ற அதிகாரத் திமிரையே காட்டுகிறது. மாதம் ரூ.16,000 ஊதியம் என்று கூறிவிட்டு, ரூ.5,000 மட்டுமே இத்தனை மாதங்களாக ஊதியம் வழங்கியிருக்கிறார்கள் என்றும் தெரிய வருகிறது.
உடனடியாக, விரைவான விசாரணை நடத்தி, குற்றவாளிகள் மீது, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன்.

என களத்தில் இறங்கியுள்ளார் அண்ணாமலை