செப். 30ஆம் தேதி வரை ஊரடங்கு தொடரும் – மத்திய உள்துறை அமைச்சகம் வெளியீடு.
ஊரடங்கில் 4-ஆம் கட்ட தளர்வுகள் அறிவிப்பு.
செப்.30-ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாது.
கல்வி நிலையங்களில், 50% ஆசிரியர்களுடன் ஆன்லைன் வகுப்புகளை நடத்த அனுமதி.
9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் விருப்பத்தின்பேரில் பள்ளிகளுக்குச் செல்ல அனுமதி.
மத்திய அரசிடம் கலந்தாலோசிக்காமல் மாநில அரசுகள் ஊரடங்கு அமல் படுத்தக் கூடாது.
கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் மாநில அரசுகள் ஊரடங்கு அறிவிக்கக் கூடாது.
மாநிலம் விட்டு மாநிலம் செல்ல முழுமையான அனுமதி அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மாநிலத்திற்குள்ளோ அல்லது மாநிலம் விட்டு மாநிலம் செல்லவோ இ-பாஸ் தேவையில்லை.
செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் மெட்ரோ ரயில் சேவை தொடங்கும்.
செப்டம்பர் 21 முதல் திறந்தவெளி கலையரங்கம், திறந்தவெளி திரையரங்குகள் செயல்படலாம்.
வெளிநாட்டு விமான சேவைக்கான தடை தொடர்ந்து அமலில் இருக்கும்.
- மத்திய அரசு.