மதுவிலக்கு செய்வோம் என ஒட்டு கேட்ட திராவிட மாடல் அரசு தற்போது முழுக்க கோதுமையில் தயாரிக்கப்பட்ட பீர் உள்ளிட்ட ஐந்து வகை புதிய பீர்களை விற்க, முடிவு செய்துள்ளது. இதற்கு ‘டாஸ்மாக்’ நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை, மதுவிலக்கு என்பது கனவாகவே போய் கொண்டிருக்கும் நிலையில், இன்னொருபுறம், டாஸ்மாக்குகள் மூலம் கிடைக்கும் வருவாய் அரசுக்கு ஓவராக கொட்டிக் கொண்டிருக்கிறது.. மொத்த நிதி ஆதாரத்தில் 3ல் ஒரு பங்கு வருமானம், டாஸ்மாக், மதுக்கடைகள் மூலம் கிடைத்து வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தின் கோடை வெயிலினால் பீர் விற்பனை அதிகரித்து வருகிறது. இதனால் தினமும், 60,000 பெட்டிகளாக இருந்த பீர் விற்பனை தற்போது, 1 லட்சம் பெட்டிகளை தாண்டியுள்ளது. தற்போது வரை 35 பீர் வகைகள் விற்கப்படுகின்றன. இந்நிலையில், 100 சதவீதம் கோதுமையில் தயாரிக்கப்பட்ட, ‘100% வீட் பீர்’ என்ற பெயரில் புதிய பீர் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

‘வீட்’ பீர் விலை, 190 ரூபாய் மற்றும் காப்டர் வகை பீர்கள், 160 ரூபாய் – 170 ரூபாய் விலையில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து பேசிய மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அதிகாரி, புதிதாக, ‘டிராபிக்கல்’ நிறுவனத்திடம் இருந்து பீர் வாங்கப்படுகிறது. மேலும், பிரபல பிராண்ட் ஆன ‘காப்டர்’ தயாரிப்பில், ‘செலக்ட் சூப்பர் ஸ்ட்ராங், செலக்ட் ஸ்ட்ராங், பிரீமியம் ஸ்ட்ராங், பிரீமியம் ஸ்மூத் லெஹர் பீர்’ வகைகளை விற்பதற்கும் டாஸ்மாக் நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.

கையிருப்பில், 10 லட்சம் பெட்டி பீர் வகைகள் உள்ளன. புதிய வகை பீர்கள் விரைவில் கடைகளில் கிடைக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















