வருகின்ற 19 ம் தேதி ராஜஸ்தான் மாநிலத்தில் காலியாக உள்ள 3 ராஜ்ய சபா இடங்களுக்கு தேர்தல் நடைபெற இருக்கிறது. எம்எல்ஏக்களின் எண்ணிக்கைப்படி காங்கிரஸ் கட்சி 2 இடங்களிலும் பாரதிய ஜனதா கட்சி 1 இடத்திலும் வெற்றி பெறுகின்ற நிலையில் இருக்கிறது.
ஆனால் பா.ஜ.கவோ 2 வேட்பாளர்களை நிறுத்தி காங்கிரஸ் கட்சிக்கு இனிமாகொடுத்து இருக்கிறது.மத்திய பிரதேசத்தில் கூட வருகின்ற 19 ம் தேதி 3 ராஜ்ய சபா இடங்களுக்கு தேர்தல் நடைபெற இருந்தது.அங்கும் காங்கிரஸ் கட்சி 2 இடங்களிலும் பாஜக 1 இடத்திலும் ஜெயிக்கும் நிலையில் இருந்தது. ஆனால் பாஜக 2 வேட் பாளர்களை நிறுத்தி காங்கிரஸ் கட்சிக்கு சவால் விட்டது. இந்த சவாலுக்கு மத்திய பிரதேசத்தின் அப்போதைய காங்கிரஸ் முதல்வர் கமல்நாத் அமித்ஷா மத்திய பிரதேசத்தில் ஒரு ஆணியையும் புடுங்க முடியாது என்று எதிர் சவால் விட்டார்.
ஆனால் கடைசியில் அமித்ஷாவின் ஆப்பரேசன் ஜோதிர் ஆதித்ய சிந்தியா மூலமாக காங்கிரஸ் ஆட்சியின் கதை முடிந்ததோடு காங்கிரஸ் கட்சியின் 2 வேட்பாளர்களில் ஒருவர் மண்ணை கவ்வுவதும் உறுதியாகி விட்டது.இதே மாதிரி தான் நிலைமை தான் இப்பொழுது ராஜஸ்தானில் இருக்கிறது. காங்கிரஸ் கட்சி சுலபமாக 2 ராஜ்ய சபா இடங்களிலும் வெல்லும் நிலையில் இருக்கிறது.பிஜேபியினாலபாஜகவால் 1 இடத்தில் மட்டுமே வெற்றி பெற முடியும். இருந்தாலும் பாஜகவோ காங்கிரஸ் மாதிரி யே 2 வேட்பாளர் களை நிறுத்தி இருக்கிறது.
பாஜகவின் இந்த அசாத்திய துணிச்சல் தான் காங்கிரஸ் கட்சியை காலி செய்து கொண்டு இருக்கிறது.பாஜக எப்படியும் தன்னுடைய 2 வது வேட்பாளரை வெற்றி பெற வைக்க காங்கிரஸ் எம்எல்ஏக்களை இழுக்க ஆரம்பிக்கும்.இதில் வெற்றி கிடைத்தால் மத்திய பிரதேசத்தில் நடைபெற்றது மாதிரியே 2 வது ராஜ்ய சபா எம்.பியை பெறுவதோடு ஆட்சியையும் கைப்பற்றி விடலாம் என்று கணக்கு போட்டு வேலை செய்து
கொண்டு இருக்கிறது. சச்சின் பைலட்டும் அவருடைய ஆதரவு 16 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் காங்கிரஸ்கட்சியில் இருந்து வெளியேறி பிஜேபபாஜகவுக்கு க்கு வர இருக்கிறார்கள் என்று ஒரு நியூஸ் ராஜஸ்தானில் தீயாக பரவிக்கொண்டு இருக்கிறது.
இது ஒரு வேளை நடைபெற்று விட்டால் பாஜக ஒரே கல்லில் 2 மாங்காயை அடி த்து விடும். மத்திய பிரதேசத்தில் நடை பெற்றது மாதிரியே 2 வது ராஜ்ய சபா இடத்தையும் கைப்பற்றி விடலாம். அதோடு ராஜஸ்தான் ஆட்சியை கைப்பற்றி விடலாம்.பிஜேபியின் திட்டம் பலிக்குமா? ராஜஸ்தான் அரசியல் நிலவரம் எப்படி இருக்கிற து என்று பார்ப்போம்.
200 உறுப்பினர்களை உடைய ராஜஸ்தா ன் சட்டமன்றத்தில் பாஜகவுக்கு 72 எம்எ ல்ஏ க்கள்தான் இருக்கிறார்கள்.ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு பகுஜன் சமாஜ் கட்சி யில் இருந்து வந்த 6 எம்எல்ஏக்களோடு 107 எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள். அதோடு 12 சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆதரவு பாரதிய ட்ரைபல் பார்ட்டி-2 சிபிஎம்- 2 ராஷ்டி ரிய லோக்தளம் -1 என்று 124 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் காங்கிரஸ் வலுவாக இருக்கிறது.
ஆனால் பிஜேபிக்கு ஆதரவாக பிஜேபியி ன் 72 எம்எல்ஏக்கள் ஹனுமன் பெனிவா லின் ராஷ்டிரிய லோக்தந்ரிக்கட்சியின் 3 எம்எல்ஏக்கள் ஒரு சுயேச்சை எம்எல்ஏ என்று 76 எம்எல்ஏக்களின் ஆதரவு இருக்கிறது.
ராஜஸ்தானில் ஒரு ராஜ்ய சபா வேட்பாளர் வெற்றி பெற 51 எம்எல்ஏக்களின் ஆதரவு வேண்டும். 76 எம்எல்ஏக்களின் ஆதரவு மட்டுமே வைத்துள்ள பிஜேபி எப்படி 2 வது வேட்பாளரை வெற்றி பெறவைக்க முடியும்,? கஷ்டம் தான் இருந்தாலும் முயற்சி செ ய்தால் முடியாதது எதுவும் இல்லை.
முயற்சி செய்வோம்.காங்கிரஸ் கட்சியோடு ஒட்டி இருக்கும் 12 சுயேச்சை எம்எல்ஏக்களும் இப்பொழுது காங்கிரஸ் கட்சியோடு இணைந்து செய ல் பட்டாலும் அவர்களில் பலர் பிஜேபியி ல் டிக்கெட் கிடைக்காமல் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் தான்..அதனால் முதலில் இந்த 12 சுயேச்சை எம்.எல்.ஏக்கள்ளகயும் பிஜேபிக்கு ஆதரவாக கொண்டு வருவார்கள்.
அடுத்து பாரதிய ட்ரைபல்பார்ட்டி யின் 2 எம்எல்ஏ க்கள் ராஷ்டிரியலோக்தளத்தின் 1 எம்.எல்.ஏ என்று மொத்தமாக 15 எம்எல்ஏக்களி ன் ஆதரவு பிஜேபிக்கு கிடைத்து விடும்ஆக பிஜேபிக்கு ஆதரவாக பிஜேபி -72 ஆர்எல்பி-3 சுயேச்சைகள்-13 பிஆர்பி-2 ஆர்எல்டி-1 என்று 91 எம்எல்ஏக்கள் ஆதரவு கிடைத்து விடும். பிறகு காங்கிரஸ் கட்சியில் இருந்து சச்சின் பைலட் தலைமையில் இருந்து 16 காங்கிரஸ் எம்எல்ஏ க்கள் வெளியேறி விட்டால் ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியின் கதை முடிந்துவிடும். பிஜேபி-91 காங்கிரஸ் 91 என்று ராஜ ஸ்தானில் சட்டமன்றத்தில் பாஜகவுக்கு சரிபலம் கிடைத்து விடும். சச்சின் பைலட் ஆதரவு எம்எல்ஏக்களின் எண்ணிக்கை16 என்று கூறப்பட்டாலும் 25 ஐ தாண்டும் என்கிறார்கள்.
ஆக சச்சின் பைலட்டை முன்னிறுத்தி மத்திய பிரதேசத்தில் ஜோதிர் ஆதித்ய சிந்தியா மூலமாக நடத்திய ஆட்சி கவிழ் ப்பு மாதிரி ராஜஸ்தானிலும் நடத்தவே பிஜேபி 2 வது ராஜ்ய சபா வேட்பாளரை நிறுத்தி இருப்பதாக நினைக்க தோன்றுகிறது. ராஜ்ய சபா தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களுக்கு மேல் உள்ள நிலையில் எந்தநேரத்திலும் ராஜஸ்தானில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு ஷாக் கொடுத்தார் சச்சின் பைலட் என்று பரபரப்பான செய்திகள் வெளிவரும் என்று்எதிர்பார்க்கப்படுகிறது பார்ப்போம்.