நாடு தழுவிய ஊரடங்கு இன்று 3 முக்கிய உத்தரவுகள் பிறப்பித்தது சென்னை மாநகராட்சி !

கொரோன முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு தழுவிய ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில் சென்னையில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையை கடுமையாக அமல்படுத்தி வருகிறது சென்னை மாநகராட்சி. சமுதாய விலகலை அனைவரும் கடைப்பிடிக்கும் விதமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இன்று மூன்று முக்கிய அறிவிப்புகளை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

*அடுத்து வரும் 21 நாட்களுக்கு டீக்கடைகள் திறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

*பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் ரேஷன் பொருட்கள் மற்றும் காய்கறிகளை மட்டுமே வீட்டிற்கு வழங்க அனுமதி வழங்கப்படுகிறது.

இவ்வாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

FacebookTwitterWhatsAppMessengerTelegramWeChatLineShare
Exit mobile version