மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தமிழகத்தை சேர்ந்த முடிதிருத்தும் கடைக்காரரை பாராட்டி பேசினார். இந்த நிலையில் பிரதமர் மோடி பாராட்டிய மதுரை முடிதிருத்தும் கடைக்காரர், தனது குடும்பத்தினருடன்,பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். நாடு முழுவதும் கடந்த 5 மாதங்களாக கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட்டிருந்தது,. தற்போது பல தளர்வுகளுடன் ஊரடங்கு கடைபிடித்து வருகிறது
மார்ச் மாதம் முதல் 21 நாட்கள் முழு ஊரடங்கு பிறப்பிக்கட்டது,அந்த சமயத்தில் ஊரடங்கால் தவிக்கும் எளியவர்களுக்கு உதவிட மதுரை தாசில்தார் நகரை சேர்ந்த சலூன் கடைக்காரர் மோகன் அவர்களின் மகள் நேத்ரா படிப்பிற்காக சேமித்த ரூ. 5 லட்சத்திற்கு நிவாரணப் பொருட்கள் வழங்கினார்.
இந்த சம்பவம் பிரதமர் மோடி வரை சென்றது இந்த நிலையில் மதுரை தாசில்தார் நகர் முடித்திருத்தும் கடைகாரர் மோகனை ‘மனதின் குரல் ‘ நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி வெகுவாக பாராட்டி பேசினார்.இந்நிலையில், மோகன் மற்றும் அவரது குடும்பத்தினர் மதுரை மாவட்ட பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் சீனிவாசன் முன்னிலையில்அவரை நேரில் சென்று வாழ்த்தினார்கள். அன்று அவர் பாஜகவில் இணைந்ததாக செய்திகள் பரவியது. அதனை சலூன் கடைக்காரர் மறுத்தார்.
இந்த நிலையில் 4 மாதங்களுக்கு பிறகு மோகன், மனைவி மற்றும் மகளுடன் பா.ஜ.க மாநில பொதுச் செயலர் prof.சீனிவாசன், மதுரை புறநகர் மாவட்டத் தலைவர் மகா சுசீந்திரன் ஆகியோர் முன்னிலையில் பாஜ.க,வில் சலூன் கடைக்காரர் மோகன் இணைந்தார்.
மேலும் பா.ஜ.க வில் அப்போதே இணைய முன்வந்துள்ளார் மோகன் ஆனால் அவர் அங்கிருக்கும் சில அரசியல்வாதிகளால் மிரட்டப்பட்டுளளார் என்ற செய்தி வெளிவந்துள்ளது, சிலரின் அச்சுறுத்தல் காரணமாக அவர் பாஜகவில் இணையவில்லை. தற்போதும் அவரின் உயிருக்கு அச்சுறுத்தல்கள் வந்துள்ளது. பிரதமரை பற்றியும் அவரின் ஆட்சியை பற்றி குறை கூறுங்கள் என சில அரசியல் கட்சி தலைவர்கள்சலூன் கடைக்காரர் மோகன் அவர்களை வற்புறுத்தி மிரட்டி வந்துள்ளார்கள்
இந்த நிலையில் தான் இப்போது 300 பேருடன் அவர் பாஜ.கவில் இணைந்துள்ளார். மேலும், தமிழகம் முழுவதும் முடி திருத்தும் தொழிலில் உள்ள 6 ஆயிரம் பேரை கட்சியில் இணைக்க அவர் முடிவு செய்துள்ளார் என கூறினார்கள்.