மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தமிழகத்தை சேர்ந்த முடிதிருத்தும் கடைக்காரரை பாராட்டி பேசினார். இந்த நிலையில் பிரதமர் மோடி பாராட்டிய மதுரை முடிதிருத்தும் கடைக்காரர், தனது குடும்பத்தினருடன்,பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். நாடு முழுவதும் கடந்த 60 நாட்களாக கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட்டிருந்தது,. தற்போது தளர்வுகளுடன் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முதல் 21 நாட்கள் முழு ஊரடங்கு பிறப்பிக்கட்டது,அந்த சமயத்தில் ஊரடங்கால் தவிக்கும் எளியவர்களுக்கு உதவிட மதுரை தாசில்தார் நகர் முடி திருத்தம் செய்யும் கடைக்காரர் மோகன் மகள் நேத்ரா படிப்பிற்காக சேமித்த ரூ. 5 லட்சத்திற்கு நிவாரணப் பொருட்கள் வழங்கினார்.
இந்த சம்பவம் பிரதமர் வரை சென்றது இந்த நிலையில் மதுரை தாசில்தார் நகர் முடித்திருத்தும் கடைகாரர் மோகனை நேற்றைய ‘மனதின் குரல் ‘ நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டினார்.இந்நிலையில், மோகன் மற்றும் அவரது குடும்பத்தினர் மதுரை மாவட்ட பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் சீனிவாசன் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்கள். அவர்களை கட்சியினர் பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















