பாஜாகவுடன் கை கோர்க்கிறார் ராஜ்தாக்கரே மகாராஷ்டிரா அரசியலில் ராஜ் தாக்கரேயின் மகாராஸ்டிரா நவ நிர்மாண் சேனா பிஜேபியுடன் இணைந்து கை கோர்க்க இருக்கிறது.
இதற்கு பிள்ளையார்சுழியை கிருஷ்ண ஜெயந்தி விழா போட்டு இருக்கிறது.கிருஷ்ண ஜெயந்தி விழாவில் மிக முக்கியமான கலாச்சார திருவிழாவான தகி அண்டியை மகாராஷ்டிரா அரசு தடை செய்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிஜேபியும் ராஜ்தாக்கரேயின் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சியும் இணைந்து உத்தவ் தாக்கரே அரசுக்கு எதிராக போராட்டங்களை அறிவித்து இருக்கிறார்கள்.
கிருஷ்ண ஜெயந்தியின் பொழுது நம்முடைய ஊர்களில் கொண்டாட்படும் உறியடி விழா மாதிரி தான் வட இந்தியாவில் தகி அண்டி திருவிழாவாகும் கிருஷ்ணர் குழந்தை பருவத்தில் வெண்ணெய் பானைகளை உடைத்து வெண்ணெய் எடுத்த நிகழ்வுகளை நினைவு படுத்தும் வண்ணம் மிக உயரமான இடத்தில்வெண்ணெய் பானையை கட்டி வைத்து இருப்பார்கள்.
அதனை பல இளைஞர்கள் பிரமிடு வடிவில் இணைந்து ஒருவர் தோளில் ஒருவர் ஏறிச்சென்று உயரத்தில் உள்ள பானையை உடைக்க வேண்டும். இப்படி பானையை உடைக்கும் பொழுது அவர்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடிப்பாரகள் இதையும் மீறி மேலே சென்று ஒரு இளைஞன் பானையை உடைத்து வெண்ணையை எடுத்து மக்களை ஆர்ப்பரிக்க வைப்பார்.
இந்த விழாவிற்கு பல லட்சங்களைபரிசாக பல நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.கடந்த வருடம் கூட தகி அண்டி திருவிழா நடைபெற்றது. இந்த வருடம் தகி அண்டிகிடையாது என்று மகாராஷ்டிரா அரசு அறிவித்து இருக்கிறது. வழக்கமாக இதுமாதிரி கலாச்சார நிகழ்வுகள் பாதிக்கப்பட்டால் களம் இறங்கி மகாராஷ்டிராவை கலங்க வைக்கும் சிவசேனாவே இப்பொழுது தகி அண்டியை தடை செய்து இருக்கிறது.
இதனால் பிஜேபி களத்தில் இறங்கி இருக்கிறது. சிவசேனாவுக்கு போட்டியாக ராஜ்தாக்கரேயின் மகாராஷ்டிரா நவநிர்மான் கட்சியை வளர்த்துவிட்டு கலாசார காவலர்களான சிவசேனாவின் தொண்டர்களை ராஜ்தாக்கரே பக்கமாக கொண்டு செல்ல பிஜேபி நினைக்கிறது.பால்தாக்கரேயின் தங்கை மகனான ராஜ்தாக்கரே சிவசேனாவில் இருக்கும் வரை உத்தவ் தாக்கரேவை சிவசேனா தொண்டர்கள் ஏறெடுத்து பார்க்க மாட்டார்கள் அந்த அளவிற்கு ராஜ்தாக்கரேயின் பிடியில் இருந்தது சிவசேனா.
சொந்த மகனான உத்தவ் தாக்கரேவை சிவசேனா தலைவர்களும் கட்சித் தொண்டர்களும் கண்டு கொள்ளாமல் இருப்பது பால்தாக்கரேக்கு மிகப்பெரிய பிரச்சனையாக குடும்பத்தினரால் உருவாக்கப்பட ராஜ் தாக்கரே வெளியேற்றப்பட்டார்.
ராஜ் தாக்கரே சிவசேனாவில் இருந்து வெளியேறி தனிக்கட்சி ஆரம்பித்ததும் பிஜேபி ஆதரவை எதிர்பார்த்தார்.ஆனால் பால்தாக்கரே மீது இருந்த பற்று காரணமாக பிஜேபி சிவசேனாவை கட்டி தழுவி ராஜ்தாக்கரேவை கண்டு கொள்ளவில்லை.ஒரு வேளை பிஜேபி ராஜ்தாக்கரேயுடன் இணைந்து இருந்தால் இன்று சிவசேனாகட்சியே இருந்து இருக்காது. இந்தியாவில் மோடி அலை ஏற்படுத்திய அரசியல் மாற்றத்தினால் மகாராஷ்டிராவிலும் மிகப்பெரிய அளவில் அரசியல் மாற்றம் அதுவரை மேலே இருந்த சிவசேனாவை கீழே தள்ளி பிஜேபியை உச்சத்திற்கு கொண்டு சென்றது.
மகாராஷ்டிராவில் இருபது வருடங்களு க்கு முன் சிவசேனாவுக்குகீழே இருந்த பிஜேபி இன்று சிவசேனாவை காட்டிலும்பல மடங்கு செல்வாக்குடன் வளர்ந்துவிட்டது. இதை ஜீரணிக்க முடியாத இந்தவ் தாக்கரே பிஜேபி கூட்டணியில் இருந்துவெற்றி பெற்றாலும் பிஜேபியின் எதிரிகளுடன் இணைந்து கூட்டணி அமைத்துமுதல்வராகி விட்டார்.
இந்த முதல்வர் பதவியை தக்க வைக்கஇது வரை சிவசேனாவுக்கு இருந்த கலா ச்சார காவலன் என்கிற பெயரை உடைத்து மதசார்பின்மை அடையாளத்தை திணித்து வருகிறார். இதுவும் நல்லதற்க்கேஇதனால் சிவசேனாவிடம் இருந்து தேசியம் சார்ந்த இந்துத்வா வாக்குகள் பிஜேபி பக்கமாக வந்துவிட்டது.
இருந்தாலும் மகாராஷ்டிரா மண்ணின்அடையாளமான மராட்டியர்களின் அதரவும் வேண்டும் அல்லவா.. அதற்கு தான் ராஜ்தாக்கரேவை துணைக்கு அழைத்து இருக்கிறது பிஜேபி.இனி பல வருடங்களுக்கு பிஜேபி சிவசேனா இடையே கூட்டணிக்கு வாய்ப்புகள் இல்லை என்பதால் பிஜேபி ராஜ்தாக்கரே கூட்டணி மகராஸ்டிரா அரசியலில் நிச்சயமாக புதிய பரிணாமத்தை அடையம்.
ஏற்கனவே கடந்த மாதம் ராஜ்தாக்கரேவை மகராஸ்டிரா மாநில பிஜேபி தலைவர் சந்திரகாந்த் பட்டீல் சந்தித்து பேசிஇருந்தார்.அப்பொழுதே பிஜேபி எம்என்எஸ் இடையே கூட்டணி என்று மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பு உண்டானது இந்த நிலையில் இப்பொழுது பகிங்கரமாக உத்தவ் தாக்கரே அரசுக்கு எதிராக தகி அண்டி விழா தடைசெய்யப்பட்டதற்கு எதிராக ராஜ்தாக்கரே பிஜேபி உடன் இணைந்து போராட இருக்கிறார்.
இப்போதைக்கு எம்என்எஸ் பெரிய அரசியல் சக்தியாக இல்லை என்றாலும் எதிர்காலத்தில் சிவசேனா ஆட்சியில் இருந்து இறங்கிய பிறகு ராஜ்தாக்கரே மறுபடியும் சிவசேனா தொண்டர்களிடையே ஆதரவுபெற்று சிவசேனா என்கிற பானையை உடைத்து அதில் இருந்து கலாசார காவலன் என்கிற வெண்ணெயை எடுத்து வெற்றி வீரரனாக வலம் வருவார்.