ஹிந்து, பௌத்தம், சீக்கியம் அல்லாத பிற மதத்தினர் முறைகேடாக பட்டியல் ஜாதி சான்றிதழ் பெற்றிருந்தால் ரத்து செய்யப்படும் என்றும், மோசடியான சான்றிதழ் மூலமாக அரசு சலுகை பெற்று இருந்தால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்துள்ள மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அவர்களை இந்து முன்னணி பேரியக்கம் மனதார பாராட்டுகிறது,,
தமிழகத்தில் இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறியவர்கள் அரசின் சலுகைகளை பெறுவதற்காக தனது சான்றிதழில் மதத்தை மாற்றாமல், இந்து மத சான்றிதழை பயன்படுத்தி பட்டியல் சமூக மக்களுக்கு சேர வேண்டிய சலுகைகளை பறித்து வருகிறார்கள்.
அரசியல் சாசனத்தையும் கேலிக்கூத்தாக்கி கிருத்துவ மதத்திற்கு மாறிய பின்னரும் சிலர் தனி தொகுதியை பயன்படுத்தி வெற்றி பெற்று அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி பட்டியல் சமூக சகோதரர்களின் வளர்ச்சி தடுத்து வருகின்றனர்.
கிறிஸ்தவர்களின் வாக்கை அறுவடை செய்யும் நோக்கில் திராவிட மாடல் அரசு கண்டும் காணாமல் அந்நிய மதம் மாறிய மக்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்கள்.
இனியாகிலும் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாபீஸ் போல, திராவிட மாடல் அரசின் முதல்வர் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என்பதே மக்கள் எதிர்பார்ப்பு
அனைவருக்குமான அரசு எனச் சொல்லிகொள்ளும் முதல்வர் பட்டியல் சமூக சகோதர்களின் சலுகைகளை பறிக்கும் அந்நிய மதத்தினரை கண்டிப்பாரா, தண்டிப்பாரா?
