நேற்று நாடு முழுவதும் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட்டது. அரசியல் தலைவர்கள் அனைவரும் தங்களின் திருவள்ளுவர் தின வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டார்கள். சமூக வலைத்தளத்தில் திராவிட கட்சிகளின் முன்னோடி அண்ணாதுரை முதல்வராக இருந்த போது அவரது முதல்வர் அறையில் உள்ள மேசையில் உலக பொதுமறை தீட்டிய திருவள்ளுவர் படம் முன்னிருக்க தனது அலுவக பணியில் முதல்வர் அண்ணா துரை என்ற வாசகத்துடன் ஒருபுகைப்படம் வைரலானது.அந்த புகைப்படத்தில் திருவள்ளுவர் மகரிஷி போல் காட்சி அளிக்கிறார்.
தெய்வப் புலவர் திருவள்ளுவரை நாயன்மார்கள் வரிசையில் வைத்து பூஜிக்கின்றனர் இந்துக்கள். கடவுளாக வழிபாடு செய்யப்பட்டு வரும் திருவள்ளுவ நாயனாருக்கு, சென்னை மயிலாப்பூரில் பழமையான கோயில் உள்ளது. இங்கு முறையான பூஜைகளும், வழிபாடுகளும் நடைபெற்று வருகின்றன.
நாயனார் சொரூபஸ்துதி’ என்ற பாடலை அடிப்படையாக வைத்து கொடுக்கப்பட்ட உருவம் ஏற்றுக்கொள்ள முடியாமல் போனதற்கு திராவிட இயக்கங்களிடம் எந்த காரணமும் இருந்திருக்கவில்லை.பட்டையும் ருத்ராச்ச மாலையும் மத அடையாளங்களாக எடுத்துக்கொண்டிருக்க வேண்டிய அவசியமும் இல்லை.காரணம்,அவைகள் நம் நாட்டின் கலாச்சாரத்தோடு எப்போதும் தொடர்பு கொண்டிருந்ததே.1950களுக்கு முன் வெளியிடப்பட்ட படங்களில் திருவள்ளுவர் பூணூலுடனும் இருந்திருக்கின்றார்.
திராவிட இயக்கங்கள் விஸ்வரூபம் எடுப்பதற்கு முன்னர் திருவள்ளுவர் பலவகைகளில்நெற்றியில் பட்டையுடன் காட்சி அளிக்கிறார். பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் சென்னை மாகாணத்தின் ஆட்சியராக இருந்த பிரான்சிஸ் வைட் எல்லிஸ் திருவள்ளுவரின் உருவம் பொறித்த தங்க நாணயம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். இந்த நாணயத்தின் ஒரு புறம் திருவள்ளுவரின் உருவமும் மற்றொரு புறம் நட்சத்திரமும் பொறிக்கப்பட்டுள்ளது.
இந்த பிரான்சிஸ் வைட் எல்லிஸ் என்பவர் பெயரிலிலேயே மதுரையில் எல்லிஸ் நகர் பெயரிடப்பட்டது. இந்த எல்லிஸ் மற்றும் கால்டுவெல் போன்றவர்கள், நம் கலாச்சாரத்தை சிதைப்பதற்கு முயற்சிகள் எடுத்துக்கொண்டார்கள் அதன் ரூ பகுதி தான் அடையாளங்களை மாற்றுவது. இதை தான் திராவிட இயக்கங்கள் இன்று வரை பிடித்துக்கொண்டு இருக்கின்றது. இவர்களை திராவிட இயக்கங்ககளின் தந்தைகள் என்று சொல்லுமளவிற்கு திராவிட இயக்கங்கள் கேள்விகள் இல்லாமல் ஏற்றுக்கொண்டதினாலேயஇன்றைய பிரச்சனைகளுக்கு முக்கிய காரணம்.
திருக்குறளில் ‘ஆதி பகவன்’, ‘மலர்மிசை ஏகினான்’, ‘அறவாழி அந்தணன்’ என்று வரும் சொல் தொடர்கள் வள்ளுவப் பெருமான் சமண சமயத்தினர் என்று கொள்வதற்கு வலுவான சான்றுகள் ஆகும்” 1904 இல், கோ. வடிவேலு செட்டியார் என்பவர், ‘திருக்குறள் மூலமும் பரிமேலழகருரையும்’ என்ற நூலை வெளியிட்டார் அதில் அவர் திருவள்ளுவரை ஜடா முடியுடனும் நெற்றியில் பட்டை மற்றும் குங்குமம் கையில் ஜின் முத்திரையுடன் இருக்கும் உருவம் தந்து ‘நாயனார் சொரூபஸ்துதி’ என்ற பாடலை அடிப்படையாக வைத்தே இந்த உருவம் திருவள்ளுவருக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது என்னும் விளக்கத்தையும் அந்த நூலில் கொடுத்துள்ளார்.
கடந்த 2020-ஆம் ஆண்டு திருவள்ளுவ நாயனார் தினத்தை முன்னிட்டு, துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு வெளியிட்ட வாழ்த்துச் செய்தியுடன், காவி உடை அணிந்த திருவள்ளுவ நாயனார் படத்தையும் வெளியிட்டு இருந்தார்.அவரைப்போலவே பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள், திருவள்ளுவ நாயனாரின் காவி உடை அணிந்த படங்களையே பல ஆண்டுகளாக பயன்படுத்தி வருகின்றனர்.
அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக உட்பட அதன் கூட்டணி பரிவாரங்கள் “ தை தை“ என குதித்தன. திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசி விட்டார்கள் என்று கூப்பாடு போட்டார்கள். இன்னும் சிலர் திருவள்ளுவர் மத சார்பற்றவர் என்று ஒப்பாரி வைத்தார்கள்.இதெல்லாம் மு.க.ஸ்டாலினும், அவரது சகாக்களும் அப்போது நடத்திய நாடகங்கள்.
இந்த முறையும் இந்து அமைப்புகளை சேர்ந்தவர்களும், தேசபக்த அமைப்பை சேர்ந்தவர்களும், காவி உடை தரித்த திருவள்ளுவ நாயனார் படத்தைத்தான் பயன்படு வாழ்த்து செய்திகளை வெளியிட்டு உள்ளார்கள். மத்திய அமைச்சர் டாக்டர் எல்.முருகன், கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசன் உட்பட பல்வேறு இந்து அமைப்பினர் காவி உடை அணிந்த திருவள்ளுவ நாயனாரின் படத்துடன், வாழ்த்து செய்திகளை வெளியிட்டு உள்ளனர்.ஆனால் இதற்கு முன்பு, திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசுவதா என்று கொக்கரித்தவர்கள், கூக்குரல் எழுப்பியவர்கள், ஒப்பாரி வைத்தவர்கள் ஒருவர்கூட இன்று வாய்திறக்கவில்லை.
மு.க.ஸ்டாலின், கனிமொழி, உதயநிதி ஸ்டாலின், திருமாவளவன், கி.வீரமணி போன்றவர்கள் எங்கே சென்று ஒழிந்தார்கள் என்று புரியவில்லை. மேலும் சமூக வலைத்தளத்தில் திராவிட கட்சிகளின் முன்னோடி அண்ணாதுரை முதல்வராக இருந்த போது அவரது முதல்வர் அறையில் உள்ள மேசையில் உலக பொதுமறை தீட்டிய திருவள்ளுவர் படம் முன்னிருக்க தனது அலுவக பணியில் முதல்வர் அண்ணா துரை என்ற வாசகத்துடன் ஒருபுகைப்படம் வைரலானது அந்த புகைப்படத்தில் திருவள்ளுவர் மகரிஷி போல் காட்சி அளிக்கிறார்.
சிறுபான்மையினர் ஓட்டிற்காக நடிக்கும் சில கட்சிகள் திருவள்ளுவர் கிறிஸ்துவர் என கூறிவருவதை எதிர்க்க முடியமால் ஆதரித்து வருவதுதான் தமிழகத்தில் நடக்கும் கொடுமையான விஷயம்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















