தமிழக சிறுபான்மையினர் ஆணைய தலைவராக பொறுப்பேற்ற காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசுகையில் மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கிற்கு மேலாக சிறுபான்மையினர் இருப்பார்கள் சிறுபான்மை மக்களுடைய உரிமை ஜனநாயகத்தை பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்று ஒரு ஜனநாயக தரம் எப்படி நிர்ணயிக்கப்படுகிறது என்று சொன்னால் அந்த பகுதியில் வாழும் சிறுபான்மை மக்கள் எவ்வளவு மகிழ்ச்சியோடு வாழ்கிறார்கள் என்பதை பொறுத்துதான் ஜனநாயகத்தின் தரம் நிர்ணயிக்கப்படுகிறது பெரும்பான்மை ஆள வேண்டும் சிறுபான்மை வாழவேண்டும் தெரிவித்துள்ளார்.
திராவிட முன்னேற்றக் கழக அரசு மதமாற்ற தடைச்சட்டதை எதிர்த்து என்னுடைய தலைமையிலான போராட்டக்குழுவினர் அழைப்பின்பேரில் டாக்டர் கலைஞர் அவர்களே நேரடியாக வந்து சிறுபான்மை மக்களுடைய போராட்டத்திற்கு தலைமை ஏற்று அந்த சட்டத்தை திரும்பப் பெறுவதற்கு அந்த போராட்டத்தை வெற்றிகரமாக நடத்திக் கொடுத்தார் தினமும் மக்களை ஒருங்கிணைத்து வளர்ச்சியிலும் முன்னேற்றத்திலும் அவருடைய செய்யக்கூடிய பணியாக இந்த பணியை பார்க்க முடியும் அந்த சமூக மாற்றத்தையும் கொண்டு வருவதற்கு அத்தனை முயற்சிகளையும் தமிழக அரசினுடைய சிறுபான்மை ஆணையத்தின் அவர்களுடைய நிறைவேற்றுவேன் என கூறினார்!