ஒரு தேசத்தில் சில தீவிரவாதிகள் இருந்தாலே அது உலகத்துக்கு மாபெரும் அச்சுறுத்தலாக மாறும். ஒரு தேசத்தையே தீவிரவாத அமைப்பு ஒன்று ஆட்சி செய்தால் உலகம் என்ன ஆகும் என்பதற்குப் பாடம் ஆப்கானிஸ்தான். வெறும் ஐந்து ஆண்டுகள்தான் அவர்கள் ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்தனர்.
ஆனால், ஆப்கன் மக்களுக்கும் உலகத்துக்கும் அது கொடுந்துயர் காலமாக இருந்தது. முன்னேற்றத்திற்கான எல்லா விஷயங்களையும் மதத்தின் பெயரால் தடை செய்து அந்நாட்டை பின்னோக்கிச் செலுத்தியது அந்த ஆட்சி.
கடந்த 20 ஆண்டுகளில் டெக்னாலஜி வளர்ச்சி உலகையே அசுரப் பாய்ச்சலை நோக்கி நகர்த்திக்கொண்டிருக்கிறது. ஆனால், இனி தாலிபன்கள் ஆப்கனை இரண்டாயிரம் ஆண்டுகள் பின்னோக்கி நகர்த்திச் செல்லக்கூடும்.
உலகின் மிக வல்லமை பொருந்திய அமெரிக்க ராணுவம் மீண்டும் ஒரு தோல்வியை சந்தித்திருக்கிறது. ஆப்கானிஸ்தான் மண்ணில் அல்-கொய்தா அமைப்புக்கோ, ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கோ புகலிடம் தர மாட்டோம்” என தாலிபன் அமைப்பு கொடுத்த ஒற்றை உறுதிமொழியை மட்டும் எடுத்துக்கொண்டு அமெரிக்கப் படைகள் வெளியேறியுள்ளன.
அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளின் சுமார் ஒரு லட்சத்து 30 ஆயிரம் படைவீரர்கள், உலகின் அதிநவீன போர்க்கருவிகள், சக்தி வாய்ந்த போர் விமானங்கள் இத்தனையும் இருந்தும் வெறும் 75 ஆயிரம் பேர் கொண்ட தாலிபன் படையை வீழ்த்த முடியாமல் சமாதானம் செய்துகொண்டு அமெரிக்கா பின்வாங்கியிருக்கிறது.20 ஆண்டுகள் அமெரிக்கா பணத்தைக் கொட்டி பயிற்சியும் ஆயுதங்களும் கொடுத்து வளர்த்த ஆப்கன் ராணுவமும் போலீஸ் படையும் சின்ன எதிர்ப்புகூட காட்டாமல் சரணடைந்துவிட்டன.
தங்கள் நாட்டில் மோசமான இந்த நிலைமைக்கு பாகிஸ்தான், ஈரான், சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள்தான் காரணம் எனவும், தங்கள் நாட்டை சீரழித்த பாகிஸ்தான் நாட்டை அல்ல கல்லறையாக மாற்றுவான் என ஆப்கனிஸ்தான் சேர்ந்த பெண்கள், இளைஞர்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.
தங்களது நாட்டில் பாகிஸ்தானியர்கள் அடிக்கடி தற்கொலைப்படை தாக்குதல் நடத்துகிறார்கள், எல்லையோரத்தில் வசிக்குப் இளம் பெண்களை துன்புறுத்துகிறார்கள், தங்கள் பள்ளிச் சிறுமிகளை மயக்க மருந்து கொடுத்து தங்கள் எல்லைக்கு அழைத்துச் செல்கிறார்கள் என்று குற்றம் சாட்டும் ஆப்கானிஸ்தானிய பெண்கள், ” ஓ ஹல்லா பாகிஸ்தானை ஒரு கல்லறையாக ஆக்குவானாக ” தலிபான்கள் நாட்டை கைப்பற்றியுள்ள நிலையில், அடுத்து என்ன செய்வது என்று நாங்கள் மிகவும் பதட்டமாக உள்ளோம் என அந்த பெண்கள் கூறியுள்ளனர்.
ஜூலையில் பதாக் ஷான், தக்கார் மாகாணங்களை தலிபான்கள் கைப்பற்றினர். அப்போது, உள்ளூர் மதத் தலைவர்களிடம் 15 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் 45 வயதுக்குட்பட்ட விதவையர் குறித்த பட்டியல் கேட்டு உள்ளனர். தங்கள் அமைப்பில் உள்ளவர்களுக்கு திருமணம் செய்வதற்காக இந்தப் பட்டியலை தலிபான் கேட்டுள்ளது.இதன் வாயிலாக கட்டாய திருமணம் செய்து, மனைவி என்ற பெயரில் பெண்களை அடிமையாக வைத்திருக்க திட்டமிட்டுள்ளனர்