இந்தியாவில் தயாரான வென்டிலேட்டர் இரட்டை பயனை தரக்கூடியது சாதித்து காட்டிய மேக் இன் இந்தியா!

உலகம் முழுவதும் கொரோன தொற்றின் காரணமாக 1 கோடி மக்களுக்குமேல் பாதிக்கப்பட்டுள்ளார்கள் இந்தியவைல் 6 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.கடந்த சில வாரங்களுக்கு முன்பு அமெரிக்கா அனுப்பிய இந்தியாவிற்கு சுமார் 100 வென்டிலேட்டர்கள் நன்கொடை அளித்தது.

மேலும் வென்டிலேட்டோர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக பிஎம் கேர் நிதியிலிருந்து 50000 வெண்டிலேட்டர் உள்நாட்டில் தயாரிக்க ஆர்டர் செய்துள்ளது. கடந்த 45 வருடமாக 47 000 வென்டிலேட்டர்கள் மதுவுமே இந்தியாவில் இருந்தது தற்போது ஒரே ஆர்டரில் 50000 வென்டிலேட்டர்கள் தயாரிக்கப்படுகிறது.

இதனிடையே, ‘பைலெவல் பாசிடிவ் ஏர்வே பிரஷர் வென்டிலேட்ட்ர’ (பிஐபிஏபி) எனப்படும் இரட்டை பயன்பாட்டு வென்டிலேட்டர்களை இந்தியா சொந்த தொழில்நுட்பத்தில் தயாரித்துள்ளது. இது அனைத்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

பிஐபிஏபி என்பது, மூக்கில் குழாய் எதுவும் பொருத்தாமல் சுவாசிக்க உதவும் கருவியாகும். மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் இத்தகவல் கூறப்பட்டுள்ளது.

Exit mobile version