இந்தியாவின் முதல் முப்படை தளபதி பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் வீரமரணத்தை கேரளாவில் சில இஸ்லாமியர் கொண்டாடியதை கண்டு ஆவேசம் அடைந்த மலையாள சினிமா டைரக்டரும் பாஜக ஆதரவாளருமான அலி அக்பர் இஸ்லாமிய மார்க்கத்தில் இருந்து வெளியேறுவதாக அறிவித்து இருக்கிறார்
அலி அக்பர் அவருடைய பேஸ்புக் பதிவில் பிபின் ராவத் மரணத்தை கொண்டா டிய இஸ்லாமியர்களை கண்டித்து வீடியோ போட பதிலுக்கு இஸ்லாமியர்கள் அலி அக்பரை கண்டித்து கமெண்ட் போட பேஸ்புக் நிறுவனம் அலி அக்பரின் பதிவை நீக்கி அலி அக்பரின் பேஸ் புக் அக்கவுண்டை 30 நாட்களுக்கு முடக்கியது.
உடனே இன்னொரு பேஸ்புக் அக்கவுண்டை உருவாக்கி அதில் ஜெனரல் பிபின்ராவத் மரணத்தை கொண்டாடியதைஎன்னால் ஏற்றுக் கொள்ள முடியாது.அதனால் நானும் எனது குடும்பமும் இஸ்லாமிய மார்க்கத்தில் இருந்து வெளியேறுவ தாக அறிவித்து இருக்கிறார் இனி நாளை முதல் தன்னுடைய பெயர் ராம்சிங் என்றும் அலி அக்பர் கூறி இருக்கிறார்.
தன்னுடைய ராம்சிங் பெயரு க்கான காரணத்தை அலி அக்பர் கூறியதை நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது.1947 ஆகஸ்ட் 2 ல் மலப்புரம் மாவட்டம் மலபரம்பாவில் ஒரு முஸ்லிம் குடும்பமே இந்துக்களாக மாறியதை குறிப்பிட்டு ராம சிம்கன் அவருடைய சகோதரர் தயாசிம்கன் அவருடைய மனைவி கமலாஅவர்களின் சமையல்காரர் ராஜூ ஐயர் மற்றும் இந்துவாக மதம் மாறிய ராமசிம் கன் குடும்பத்தையே கொன்ற இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு நினைவு படுத்த தன்னுடைய பெயர் இனி ராம்சிங் என்று அலி அக்பர் கூறியிருப்பதை நினைத்தால் மெய் சிலிர்க்கிறது.
வயநாடில் பிறந்த அக்பர் அலி கேரள பிஜேபியின் சார்பாக சிலர் வருடங்களு க்கு முன் டிவி விவாதங்களில் கலந்துகொண்டவர்.2016 கேரள சட்டமன்றத் தேர்தலில் கோழிகோடு மாவட்டத்தில் உள்ள முஸ்லிம்கள் மெஜாரிட்டியாக உள்ள கொடுவேலி சட்டமன்ற தொகுதியில பிஜேபி வேட்பாளராக போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
கேரளவில் ஒரு முஸ்லிம் பிஜேபியில் இருப்பது பெரிய விசயம். அதை விட அவர் தன்னுடைய மதத்தினரை குறைகூறி இஸ்லாமிய மார்க்கத்தில் இருந்து வெளியேறி இந்துவாக மாறுவது அதிசயம் தான்.இருந்தாலும் அதிசயிக்க வைத்து இருக்கிறார் அலி அக்பர்
- விஜய்குமார் அருணகிரி வலது சாரி சிந்தனையாளர்!
Source : https://www.opindia.com/2021/12/malayalam-director-ali-akbar-quits-islam-protesting-celebrations-of-bipin-rawats-death/