தி இந்து ராமினை ட்விட்டரில் சம்பவம் செய்த தி இந்து குழுமத்தின் Chairperson மாலினி பார்த்தசாரதி! சம்பவம் தரமானது!

தி இந்து குழுமத்தின் Chairperson மாலினி பார்த்தசாரதி பிரதமர் நரேந்திர மோதியை கடந்த ஜூலை 22 ஆம் தேதி சந்தித்து அதை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்தார். இப்பொது அந்த ட்விட்டர் பதிவானது வைரலாகி வருகிறது.

தி இந்து குழுமத்தின் Chairperson மாலினி பார்த்தசாரதி பதிவிட்ட பதிவினை மேற்குறியீட்டு வெறும் 549 ஃபாலோயர்ஸ் கொண்ட Mrs_DoSoLittle என்ற நபர் தி இந்து ராமை டேக் செய்து, “என்ன பாஸ் இதெல்லாம்? என கேள்வி கேட்டார்.

அதற்கு பதிலளித்த தி ஹிந்து ராம், “இதற்கும் (மாலினி பார்த்த சாரதி பிரதமர் மோடி சந்திப்புக்கும் ) எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால், தி இந்துவின் 142 ஆண்டு கால பாரம்பரியத்தை நிலை நாட்ட என்னால் முடிந்ததை செய்வேன் என்பதை மற்றும் உறுதிபடக் கூறுகிறேன்” என அவர் இந்து ராம் பதிவிட்டார்.

பதிலுக்கு தி இந்து குழும Chairperson மாலினியும், “நானும் அதே 142 வருட பாரம்பரியத்தை தான் காக்க முயல்கிறேன் – தி ஹிந்து குழுமத்தை அரசியல் சார்பில்லாமல், உண்மை செய்திகளை வெளியிட்டு நடத்திட “இந்து ராமுக்கு பதிலடி கொடுத்து சிறப்பான சம்பவம் செய்துள்ளார்.

தி இந்து குழுமம் சமீப காலமாக இந்தியாவிற்கு எதிராக ராம் பொய் செய்தியை வெளியிடுவதிலும், அரசியல் சாயம் பூசுவதிலும் மட்டுமே கவனம் செலுத்துவதால் தி ஹிண்டுவின் 142 வருட பாரம்பரியம் கெட்டு விட்டது என்பதையும், அதை சரி செய்வதே தன் குறிக்கோள் என்றும் மாலினி ஊர்ஜிதம் செய்துள்ளது சிறப்பு! இதே மாலினி 2013 – 14 ஆண்டில் “ஆங்கிலம் தெரியாத மோதி ஒருக்காலமும் பிரதமராக மாட்டார்” என்றெல்லாம் சொன்னது நினைவுக்கு வருகிறது.

https://twitter.com/Mrs…/status/1418205801680756739

Exit mobile version