மேற்கு வங்காளத்தில் தேர்தலுக்கு பிறகு நடைபெற்ற வன்முறைகளை சிபிஐ வி சாரித்து 6 வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.
கூடவே கொல்கத்தா பேட்சை சார்ந்த அதிகாரிகளை கொண்ட சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளது
.
எஸ்.ஐ.டி விசாரணை என்பது நீதிமன்றம் தலைமை ஏற்று வழி நடத்தும் புலனாய்வு விசாரணையாகும். இதில் மத்திய மாநில அரசுகள் தலையிட முடியாது. கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை ஏற்க முடியாது உச்ச நீதிமன்றம் செல்வோம் என்று திரிணாமுல் காங்கிரஸ் கூறி இருக்கிறது.
மேற்கு வங்காளத்தில் தேர்தலுக்கு பிறகு நடைபெற்ற வன்முறைகளினால் மம்தா பானர்ஜியின் ஆட்சிக்கு கண்டம் இருப்பது ஒரு பக்கம் என்றால் அடுத்த பக்கம் எம்.எல்.ஏ பதவியில் இல்லாத மம்தா பானர்ஜி அக்டோபர் மாதத்திற்கு பிறகு முதல்வராக தொடர முடியுமா என்கிற கேள்வியும் இருக்கிறது.
வருகின்ற அக்டோபர் மாதத்திற்குள் மம்தா பானர்ஜி ஏதாவது ஒரு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ வாக தேர்வானால் தான் அவர் முதல்வர் பதவியில் தொடர்ந்து இருக்க முடியும்.
மம்தா பானர்ஜியும் பவானிபூர் தொகுதி திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ வாக வெற்றி பெற்று இருந்த சோபன்தேவ் சட்டோபாத்யாயை ராஜினாமா செய்ய வைத்து விட்டு அங்கு இடைத்தேர்தலில் போட்டியிட இருந்தார்.
ஆனால் தேர்தல் கமிஷனோ கொரானாவை காரணம் காட்டி இப்போதைக்கு பவானிபூர் சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தலை நடத்தாது என்றே தெரிகிறது வருகின்ற அக்டோபர் இறுதிக்குள் பவானிப்பூரில் இடைத்தேர்தல் நடை பெற்று மம்தா பானர்ஜி அதில் வெற்றி பெற்றால் தான் முதலமைச்சராக தொடர்ந்து இருக்க முடியும்.
இதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே தெரிகிறது அனேகமாக அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெற இருக்கும் 5 மாநில சட்டமன்ற தேர்தலுடன் பவானிப்பூர் சட்டமன்ற தொகுதிக்கு இடைதேர்தல் நடைபெறலாம்.
ஒரு வேளை செப்டம்பர் இறுதிக்குள்பவானிபூரில் இடைத்தேர்தல் நடைபெறவில்லை என்றால் நவம்பர் 4ல் மம்தா பானர்ஜி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தே தீர வேண்டும். இது கடவுள் அவருக்கு அளிக்கும் தண்டனையாகும்
சில வாரங்களுக்கு முன்னர் நள்ளிரவு 11 மணி அளவில் பிரதமர் மோடி அவருடைய இல்லத்தில் வை த்து சுவேந்து அதிகாரியை சந்தித்து இருக்கிறார்.பிரதமர் நள்ளிரவில் ஒரு மாநில எதிர்கட்சி தலைவரை சந்தித்து பேசுவது அவ்வளவு சாதாரண விசயம் அல்ல.
சுவேந்து அதிகாரி உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்தித்து இருக்கிறார்.அதோடு மத்தியஅரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார்மேத்தாவை சந்தித்து பேசி இருக்கிறார் எனவே சுவேந்து அதிகாரியின் டெல்லி விஜயம் கட்சி சம்பந்தப்பட்டது அல்ல.
ஆக மேற்கு வங்காளத்தில் ஏதோ ஒன்று நடைபெற இருக்கிறது. அது என்ன? இதுதான் டெல்லி வட்டாரத்தில் தற்போதைய ஹாட் நியூஸ். இதை தொடர்ந்து பிரதமருக்கு மாம்பழம் அனுப்பி உள்ளார் மம்தா பானர்ஜி. எதிரும் புதிருமாக இருந்த மம்தா தற்போது சமாதனம் பேச வருகிறார்.
பிரதமர் கலந்து கொண்ட கூட்டத்தில் கூட பங்கேற்காத மம்தா இப்போது அடி பணிகிறார் என்றால் அது மேற்கு வங்கத்தில் நடைபெற்ற வெறி ஆட்டம் தான் காரணம்.