மன்மோகன் சிங் அரசு மத்திய அரசு! மோடி அரசு ஒன்றிய அரசு! ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் பல்டி அடித்த அமைச்சர் பி.டி பழனிவேல் தியாகராஜன்!

தமிழகத்தில் திமுக ஆட்சி பதவியேற்றத்தை தொடர்ந்து சென்னை கலைவாணர் அரங்கத்தில் 16 வது சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் கடந்த திங்கள் அன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இதையடுத்து சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடந்த அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் சட்டமன்ற கட்சி தலைவர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். இந்நிலையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது கடந்த 23 ஆம் தேதி விவாதம் நடைபெற்றது

அப்போது பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, திமுக வாக்குறுதி அளித்தபடி பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படுமா என்று கேள்வி எழுப்பினார்.

இந்த கேள்விக்கு அதில் அளித்த நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கூறியதாவது:- 2006-2011ம் ஆண்டு திமுக ஆட்சி காலகட்டத்தில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து பெட்ரோல், டீசல் விலை அதிகரித்த போதும், தமிழகத்தில் மூன்று முறை பெட்ரோல், டீசல் மீதான வரியை கலைஞர் குறைத்தார்.

ஒன்றிய அரசு என்று அழைப்பதற்குதிமுக மீது வழக்கு தொடுக்கப்படும்பாஜக அறிவிப்பு

நிதிநிலையை கருத்தில் கொண்டு பெட்ரோல் டீசல் விலையை குறைக்க முடியாது என்று தான் சொல்கிறோம். ஆனால் முதல்வரின் வாக்குறுதி அடிப்படையில் பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படும் என கூறினார்.

மேலும் அவர் பேசுகையில் மமோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு விகிதம் குறைவு என்றும் தற்போதுள்ள ஒன்றிய அரசின் வரி அதிகம் என்றும் கூறினார். ஒரே இடத்தில் ஒரே கேள்விக்கு பதில் அளிக்கும் போது அவர்கள் கூட்டணி வைத்தது மத்திய அரசு அழைக்கிறார் தற்போது இருக்கும் அரசு ஒன்றிய அரசு என்று அழைக்கிறார். அவர் பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது திமுகவின் இரட்டை வேடம் தற்போது அனைவர்க்கும் தெரிந்த ஒன்றுதான் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

FacebookTwitterWhatsAppMessengerTelegramWeChatLineShare
Exit mobile version