தி.மு.க வின் பகுத்தறிவு என்பது இந்து மதத்தை மட்டும் எதிர்ப்பது ஆகும். இந்து பண்டிகைக்கு திமுக தலைமை எப்போதும் வாழ்த்து சொல்வது கிடையாது. மற்ற மத பண்டிகைகளுக்கு முந்தி கொண்டு வாழ்த்து சொல்வது திமுகவின் வழக்கம்.
இதெல்லாம் எதற்காக அனைத்தும் சிறுபான்மை ஒட்டு அரசியலுக்கு என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் திமுக தலைவர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின்,தீவிர இந்து பற்றாளர். ஸ்டாலின் முதல்வராக வேண்டி போகாத கோவில் இல்லை வேண்டாத கடவுள் இல்லை என்றே சொல்லலாம்
தற்போது திமுக ஆட்சி அமைத்தும் ஹிந்துக்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆடி அமாவாசையை முன்னிட்டு அனைத்து முக்கிய கோவில்களும் மூடியது தமிழக அரசு. கூட்டம் கூட தடை விதித்தது. தர்ப்பணம் கொடுக்க அனுமதிக்கவில்லை.
ஆனால் பக்ரீத் பண்டிகைக்கு எந்த வித கட்டுப்பாடும் விதிக்கவில்லை. பனிமய மாத திருவிழாவுக்கு உள்ளூர் விடுமுறை என பாரபட்சம் காட்டியது தி.மு.க அரசு.
தற்போது அனைத்து மத வழிபட்டு தளங்களும் வார இறுதி 3 நாட்கள் மூடி உள்ளது. இந்த நிலையில்
இந்த நிலையில் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலின் அவர்களின் மனைவி துர்கா ஸ்டாலின் திருவாண்ணாமலை கோவிலுக்கு சென்று அண்ணாமலையாரை தரிசித்தார்.
தமிழக அரசு கடந்த வராம் அனைத்து கோவில்களிலும் தமிழில் அர்ச்சனை அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என சட்டம் இயற்றி அரசனை வெளியிட்டது.
தமிழக மக்களுக்கு எல்லாம் தமிழில் மந்திரம் ஓத சொல்லிய திமுக தலைவர் ஸ்டாலின் திருவண்ணாமலை கோயிலில் தன்னுடைய மனைவி மற்றும் குடும்பம் வழிபாடு செய்த போது சமஸ்கிருதத்தில் மந்திரம் சொல்லபட்டது.
ஒரு வேளை சமஸ்கிருதத்தில் மந்திரம் ஓதினால் தான் புண்ணியம் கிடைக்குமோ என்னவோ! அவர்கள் மரபு மீறமாட்டர்கள் தமிழக மக்கள் மரபு மீறலாம். தேடிக்கொள்ளும் ஸ்டாலின்.