முதுகுளத்தூர் மணிகண்டன் மரணம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்ததாக கூறி மாரிதாசை, மதுரை புதூர் பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர். மாரிதாஸ் தனது யூ டியூப் சேனலில் பல்வேறு வீடியோக்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். +
போலீசார் அவரை கைது செய்ய அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர். அதே சமயத்தில், மாரிதாசை கைது செய்ய உள்ளதாக தகவல் கிடைத்தவுடன் பா.ஜ.க.வினரும், மாரிதாசின் ஆதரவாளர்களும் அவரது வீட்டின் முன்பு குவிந்தனர். அங்கு போலீசார் மற்றும் பா.ஜ.க.வினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது இதனால், அந்த பகுதியில் பதற்றமான சூழல் உருவானது.
இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: மதுரையில் மாரிதாஸ் அவர்கள் காவல்துறையால் கைது செய்யப்பட்ட செய்தியைக் கேட்டறிந்து, அவரிடம் தொலைபேசி மூலமும் உரையாடினேன்!
திமுகவை விமர்சனம் செய்தததால் மாரிதாஸ் கைது செய்யப்பட்டுள்ளதை வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். மதுரை புறநகர் பகுதியில் உள்ள மாரிதாஸ் வீட்டிற்கு சென்று கைது செய்துள்ளனர். இதற்கு பாஜகவினர் கண்டனங்களை எழுப்பியும், போலீசார் அராஜகம் மற்றும் திமுக அரக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: மதுரையில் மாரிதாஸ் அவர்கள் காவல்துறையால் கைது செய்யப்பட்ட செய்தியைக் கேட்டறிந்து, அவரிடம் தொலைபேசி மூலமும் உரையாடினேன்! ஜனநாயகம் அளித்த கருத்துரிமையைப் பொருட்படுத்தாமல் பாரபட்சமான இந்த நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறேன். திமுகவை விமர்சித்தால் மட்டும் கைது? இதுதான் தமிழ்நாட்டின் தற்போதைய அவல நிலை. ஒருபக்கம் சமூக வலைதளத்தில் தன்னுடைய ஏவல் படையை தயார் செய்தும், இன்னொரு பக்கம் தேசியவாதிகளை அறிவாலயம் அரசு கைது செய்கிறது! இந்த கபட நாடகத்தை பாஜக வன்மையாக கண்டிக்கிறது. இவ்வாறு அவர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.