தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தின் மூலம் தமிழகத்தில் உள்ள முஸ்லிம்களை பாகிஸ்தானுக்கு அனுப்பி விடுவார்கள் என்று அப்பாவி முஸ்லிம்களிடம் தப்பான பொய்யைப் பரப்பி, அவர்களை போராட்டம் என்ற பெயரில் வன்முறையை தூண்டிவிடுகிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
தமிழகம் முழுவதும் முஸ்லிம்கள் நடத்தும் போராட்டங்களுக்கு பின்புலமாக மு.க.ஸ்டாலின் மற்றும் சில முஸ்லிம் பயங்கரவாத அமைப்புகள் உள்ளன. இவர்கள் பின்னால் இருந்து தேவையான நிதி உதவிகளை அளித்து தூண்டி விட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் சட்டசபையில் இது தொடர்பாக பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பொங்கி எழுந்து விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். அவர் பேசியதாவது:-
குடியுரிமை திருத்த சட்டத்தினால் யார் பாதிக்கப்பட்டுள்ளார்கள், சொல்லுங்கள். நாங்கள் தீர்வு காண்கிறோம். தமிழ் நாட்டில் வாழுகின்ற, தமிழ் மண்ணில் பிறந்த எந்த சிறுபான்மையின மக்கள் பாதித்து உள்ளார்கள் என்பதை சுட்டிக் காட்டுங்கள். நாங்கள் அதற்கு பதில் சொல்கிறோம்.
அதை விட்டுவிட்டு மக்களை ஏமாற்றி, நாடகமாடி, தவறான, அவதூறான செய்தியை சொல்லி நல்ல அமைதியான முறையில் மக்கள் வாழுகின்ற இந்த மாநிலத்தில் குந்தகம் விளைவித்து வருகிறீர்கள். சொல்லுங்கள், யார் பாதிக்கப்பட்டுள்ளார் என்று.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் கர்ஜித்தார்.

எடப்பாடி பழனிச்சாமியின் இந்த அதிரடி தாக்குதலை கொஞ்சமும் எதிர்பாராத திமுகவினர் நிலைகுலைந்து போனார்கள்.
இனிவரும் நாட்களில் அதிமுகவினரின் அதிரடி ஆட்டம் தொடரும் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்
Get real time update about this post categories directly on your device, subscribe now.















