ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றிய நிலையில், அமெரிக்க படைகள் அந்நாட்டை விட்டு முழுமையாக வெளியேறி விட்டார்கள். இது அமெரிக்கவின் ராஜ தந்திரமா அல்லது தோல்வியா என்பது போக போக தான் தெரியும்.
ஆப்கான் மக்கள் மரண பயம் காரணமாக நாட்டை விட்டு வெளியேறி வருகிறார்கள். இஸ்லாமிய நாடான அந்த நாட்டில் முஸ்லிம்களுக்கு நிம்மதியாக வாழ முடியவில்லை!
ஆப்கான் நாட்டில் இருந்து சாதாரண மக்கள் கால் நடையாக அண்டை நாடுகளுக்கு அடைக்கலம் தேடி செல்லும் காட்சிகள் ஒரு பக்கம். 12 வயது சிறுமிகளை கதற கதற தலிபான் தூக்கி செல்லும் காட்சிகள் மறு புறம்.
சற்று வசதி படைத்த மக்கள் காபூல் விமான நிலையத்தில் தப்பி செல்ல துடிக்கும் காட்சிகள். அங்கேயும் துப்பாக்கி சூடு, குண்டு வெடிப்பு சாவு என மனதை உலுக்கும் காட்சிகள் மனதை பதற வைத்தது.
ஊடக தர்மம் குழி தோண்டி புதைக்கப்பட்டது. இந்த நிலையில் அரசுக்கு சொந்தமான செய்தி நிறுவனத்தில் தொகுப்பாளராக பணிபுரிந்த ஷப்னம் தவ்ரான் வேலையை விட்டு நீக்கப்பட்டுள்ளார்.
வழக்கம்போல் வேலைக்குச் சென்ற அவரை பெண் என்பதால் வீட்டுக்குச் செல்லுமாறு தாலிபான்கள் கூறியதாகவும், உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் அவர் வீடியோ வெளியிட்டு, உதவி கோரியுள்ளார்.
இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் செய்தியாளர் ஒருவரின் பின்னால் தாலிபான்கள் துப்பாக்கியுடன் நிற்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதிய ஆட்சியை தாலிபான்கள் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். கந்தஹாரில், தொலைக்காட்சி மற்றும் வானொலிகளில் இசை நிகழ்ச்சிகளுக்கு தடை விதித்துள்ள தாலிபான்கள், பெண்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்கும் தடை விதித்திருக்கின்றனர்.
இந்நிலையில், தொலைக்காட்சி நேரலை நிகழ்ச்சியின்போது தொகுப்பாளரின் அருகில் தாலிபான் அமைப்பினர் துப்பாக்கியுடன் இருப்பது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. ஈரானிய செய்தியாளரான மாசிஹ் அலினேஜாட் இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.
மேலும், அவர் வெளியிட்டுள்ள பதிவில் இது விநோதமானது. தொலைக்காட்சி தொகுப்பாளரின் பின்னால் துப்பாக்கியுடன் தாலிபான்கள் காட்சியளிப்பதுடன் இஸ்லாமிக் எமிரெட்