1) சேலத்தில் ஈவேரா நடத்திய – ராமர் பட அவமதிப்பு ஊர்வலக் காட்சிகளை வெளியிட்ட ‘துக்ளக்’ பத்திரிகை இதழ்கள் பறிமுதல் செய்யப்பட்டது யார் ஆட்சியில்..?
கலைஞர் ஆட்சி.! கலைஞர் ஆட்சி.!
2) 1971 -ல் தேர்தல் சமயத்தில் முகமது – பின் – துக்ளக் படம் எடுக்கவும், பிறகு அதை வெளியிடவும் ஏகப்பட்ட தொல்லைகள் தரப்பட்டது யார் ஆட்சியில்..?
கலைஞர் ஆட்சி.! கலைஞர் ஆட்சி.!
3) மேற்கண்ட படத்துக்கு இசை அமைத்த M S விஸ்வநாதன் உள்ளிட்டோரும் நடிகை G.சகுந்தலா போன்றோரும் மிரட்டப்பட்டது யார் ஆட்சியில்..?
கலைஞர் ஆட்சி.! கலைஞர் ஆட்சி.!
4) சோ- வின் பிரசித்தி பெற்ற நாடகம் – “என்று தணியும் இந்த சுதந்திர தாகம்?”- மேடை ஏறிய அரங்குகளில் முட்டை வீசப்பட்டு கலவரங்கள் நடத்தப்பட்டது – யார் ஆட்சிக் காலத்தில்..?
கலைஞர் ஆட்சி.! கலைஞர் ஆட்சி.!
5) திமுகவை விமர்சித்த “அலை ஓசை”- தினசரி பத்திரிகை அலுவலகம் தாக்கப்பட்டதும், அதன் வெளியீட்டாளரான வேலூர் நாராயணன் தலையில் ரத்தகாயத்துக்குப் போடப்பட்ட பாண்டேஜுடன் மேடை ஏறிக் கண்டனக் கூட்டத்தில் பேசியதும் யார் ஆட்சியில்..?
கலைஞர் ஆட்சி.! கலைஞர் ஆட்சி.!
6) காமராஜர் அணியின் – ஸ்தாபன காங்கிரஸ் – பிரசார பீரங்கியாக இருந்த ‘நாத்திகம்’ ராமசாமியை மாதக் கணக்கில் சிறையில் வைத்தது யாருடைய ஆட்சி? தினந்தோறும் ‘நாத்திகம்’ ஏட்டில் முதல் பக்கத்தில் “நமது ஆசிரியர் சிறையில்….. ம் நாள்!”- என்று கட்டம் கட்டி செய்தி போடுவார்களே அது யாருடைய ஆட்சியில்..?
கலைஞர் ஆட்சி.! கலைஞர் ஆட்சி.!
7) ‘குமுதம்’ வார இதழ் 1970 களின் தொடக்கத்தில் திமுகவை விமர்சிக்கத் தொடங்கியவுடன் அதில் கலைஞர் எழுதி வந்த – “நெஞ்சுக்கு நீதி”- தொடர் நிறுத்தப்பட்டது! பிறகு அத்தொடர் ‘சாவி’ ஆசிரியராக இருந்த ‘தினமணி கதிரில்’ தொடரப்பட்டது! பிறகு குமுதம் அலுவலகம் தாக்கப்பட்டது யாருடைய ஆட்சியில்..?
கலைஞர் ஆட்சி.! கலைஞர் ஆட்சி.!
இதை எல்லாம் தெரிந்து கொள்வது இளைய தலைமுறைக்கு விழிப்புணர்வைத் தரும் – இல்லாவிட்டால் இன்றைய திமுக அல்லக்கைகள் கூறுவதையே நம்ப வேண்டி வரும்.!
8) சட்டசபையில் K A மதியழகன் சபாநாயகர்.!
திமுகவில் இருந்து நீக்கப்பட்ட MGR – அதிமுகவை நிறுவிய பின் – சட்டசபையில் திமுக மீது நம்பிக்கை இல்லாத்தீர்மானம் கொண்டு வருகிறார்.!
K A மதியழகனின் தம்பி K.A.கிருஷ்ணசாமி MGR கட்சி ஆரம்பித்த உடனேயே தனது “தென்னகம்” தினசரி மூலம் MGR க்கு முழு ஆதரவு தந்து அதிமுக ஆரம்பித்த உடனேயே அதில் இணைந்தார்.!
உடனே மதியழகன் மீது சந்தேகம் வந்து – தங்கள் கட்சி சபாநாயகர் மீதே ‘நம்பிக்கை இல்லாத் தீர்மானம்’ கொண்டு வந்தனர் திமுகவினர்.!
அப்போது சட்ட சபையில் நடந்த கலாட்டா இன்றைய இளம் தலைமுறை அறியாதது.!
சபாநாயகர் மதியழகனிடம் இருந்து மணியைப் பிடுங்கி, அவரை சபாநாயகர் இருக்கையில் இருந்து உருட்டி விட்டு, துணை சபாநாயகராக இருந்த பெ.சீனிவாசனை வைத்து சட்டசபை நடத்தியது யார் ஆட்சியில்..?
கலைஞர் ஆட்சி.! கலைஞர் ஆட்சி.!
9) ஒரே நேரத்தில் இரண்டு சபாநாயகர்கள் சபை நடத்திய விநோதம் – யார் ஆட்சியில்..?
கலைஞர் ஆட்சி.! கலைஞர் ஆட்சி.!
கருத்து சுதந்திரம்,
பத்திரிகை சுதந்திரம்,
ஜனநாயகம் – திமுக இதற்கெல்லாம் ரொம்ப தூரம் இன்றைய தலைமுறை தம்பிகளா..!