இந்த தேர்தலில் எம்ஜிஆர் முக்கியமான பேச்சாக வந்ததன் காரணம் என்ன ?

எம்.ஜி.ஆர் ஆட்சியை மக்களுக்கு கொடுப்பேன் ரஜினிகாந்த்.

கருப்பு எம்ஜிஆர். விஜயகாந்த்.

எம்.ஜி.ஆர் மறு உருவம்தான் நான்.
கமல்ஹாசன்.

எம்.ஜி.ஆரின் பரம ரசிகன் நான்.
மு.க.ஸ்டாலின்.

இந்தத் தேர்தல் எம்.ஜி.ஆர் முக்கிய இடத்தைப் பிடிப்பார் போல். ஆனால் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் எம்.ஜி.ஆரின் பரம ரசிகன் நான் என்ற பேச்சு நிச்சயம் திமுகவில் உள்ளவர்களுக்கு பெரும் அதிர்ச்சிக் கொடுக்கும். காரணம் திமுக தொண்டர்களுக்கு எம்ஜிஆர் என்றாலே பிடிக்காது. இவர் அரசியலுக்காக எம்.ஜி.ஆரின் பரம ரசிகன் என்று பேசியிருக்கிறார்.

மேலும் கணிசமான பொது மக்கள் மற்றும் ரசிகர்களைக் கொண்ட நடிகர் ரஜினிகாந்த் கட்சியில் இருந்து சில மாவட்டச் செயலாளர்களை திமுக கட்சியில் சேர்த்தது ஒரு விவேகமான முடிவு ஆகாது. காரணம் இந்தச் செயல் ரஜினிகாந்த் ரசிகர்களின் வெறுப்பைத்தான் திமுக சம்பாதித்து உள்ளது.

திமுக தலைவர் ஸ்டாலின் சமிபத்திய செயல்கள் அவரது விரக்தியைத்தான் காட்டுகிறது. அதில் முக்கியமானது எடப்பாடி தொகுதிற்கு போய் இந்தத் தொகுதியில் எடப்பாடி பழனிசாமி ஏதாவது ஒரு நல்லது செய்திருப்பாரா என்று பேசியது திமுக தொண்டர்களுக்கே அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

FacebookTwitterWhatsAppMessengerTelegramWeChatLineShare
Exit mobile version