தமிழகத்தில் மண்ணுக்குள் புதைந்திருந்த 1000 ஆண்டு பழமையான சோழர் காலத்து சிவன் கோயில், வந்தவாசி அருகே கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், பொதுமக்கள் உதவியுடன் மண்ணை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.மேலும் கோவில் கோபுரம் மட்டும் சிதலமடைந்திருந்தது. பொதுமக்கள் கோவிலின் முன்புறம் உள்ள ஒருவர் மட்டும் அதுவும் குனிந்து செல்லும் அளவுக்கு வாசல் வழியாக பல ஆண்டுகளாக உள்ளே சென்று பூஜைகளை செய்து வழிபட்டு வந்தனர். இந்த நிலையில் கோவில் மேல் பகுதி மற்றும் ஓரம் மூடியுள்ள மண்ணை அகற்றி கோவிலை சீரமைக்க கிராம பொதுமக்கள் முடிவு செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்துள்ள ஆயிலவாடி கிராமத்தில் ஏரிக்கரையையொட்டி சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆளவாய் சுந்தரேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. காலப்போக்கில் இந்த கோவிலின் மேல்பகுதி, ஓரம் முழுவதையும் ஏரிக்கரை ஓட்டி இருப்பதால் ஏரி கரையை அகலப்படுத்தும் போது மண்ணால் கோவில் மேல் பகுதி மற்றும் ஓரம் முழுவதும் மண்ணால் மூடியதால் கோவில் இருப்பதே தெரியாத நிலை இருந்தது.
வந்தவாசியை ஒட்டியுள்ள ஆயிலவாடி கிராமத்தில் உள்ள ஏரிக்கரையில் பல நூற்றாண்டுகளாக விளங்கும் ஆலவாய் சுந்தரேஸ்வரர் கோயில் உள்ளது. காலப்போக்கில், ஏரியின் அரிப்பு, கோவிலின் மேற்பகுதி மற்றும் பக்கவாட்டு பகுதிகள் அரிப்பு, ஏரியின் கரையோரம் விரிவடைவதால் படிப்படியாக மண்ணுக்கு அடியில் புதைந்துவிட்டது. கோவில் கோபுரம் மட்டும் எஞ்சியுள்ளது.
தற்போது அது இடிந்து விழும் நிலையில் உள்ளது. பல ஆண்டுகளாக, கிராம மக்கள் ஒரே நுழைவாயில் வழியாக செல்ல முடிந்து இருக்கிறது. ஒரே நேரத்தில் ஒருவர் மட்டுமே கும்பிட்டு வழிபட முடியும். இதன் எதிரொலியாக, கோவிலை தோண்டி, அதன் மேல்பகுதி மற்றும் பக்கவாட்டில் உள்ள மண்ணை அகற்றி, சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள கிராம மக்கள் முடிவு செய்தனர். இயந்திரங்களைப் பயன்படுத்தி, அவர்கள் தற்போது இந்தப் பகுதிகளை வெளிக்கொணரும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் இந்த பணியின் போது, மக்கள் ஆர்வத்துடன் வந்து பழங்கால தெய்வத்தை தரிசித்து மற்றும் மரியாதை செலுத்தினர். பொதுமக்கள் வழிபாடுகளை மீண்டும் தொடங்குவதற்கு முன், கோவிலை உடனடியாக ஆய்வு செய்து, தேவையான நிதியை ஒதுக்கி, புனரமைப்புப் பணிகளைத் தொடங்க தமிழக அரசை உள்ளூர் சமூகம் வலியுறுத்தி உள்ளது. மேலும் திமுக அரசு இந்த ஒரு விஷயத்தை கருத்தில் கொண்டு ஆயிரம் ஆண்டு பழமையான சிவன் கோயிலை புனரமைப்புப் பணிகளை தொடங்க வேண்டும் என்று உள்ளூர் மக்கள் விருப்பம் தெரிவித்து இருக்கிறார்கள்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















