சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி தீரன் சின்னமலை 216 ஆம் நினைவு தினத்தை முன்னிட்டு, சங்ககிரி மலைக்கோட்டையில் தீரன் சின்னமலையின் உருவப்படத்துக்கு நேற்று தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, மற்றும் மொடக்குறிச்சி எம்எல்ஏ சரஸ்வதி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பின் சங்ககிரி கோட்டயைலிருந்து புறப்பட்ட அண்ணாமலை அவர்கள் ரோடு அறச்சலூர் ஓடாநிலையில் உள்ள சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை சிலைக்கு மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்திந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பேசியதாவது:
1967-க்கு பிறகு தமிழகத்தில் ஆட்சி புரிந்த அரசுகள், பாடப்புத்தகங்களில், சுதந்திரத்துக்காகப் போராடிய தமிழக தலைவர்களையும், தியாகிகளையும் மறைத்து வந்துள்ளன. அவர்களை நாங்கள் வெளிப்படுத்தி, போற்றி வருகிறோம்.
கீழடி அகழாய்வை பா.ஜ.க வரவேற்கிறது. கீழடி என்பது ஒருவருக்கு மட்டும் சொந்தமானது அல்ல. கீழடி ஆய்வு முடிவுகளை ஏற்கும் ஆட்சியாளர்கள், கடவுளைப் பற்றி பாடிய சங்க இலக்கியங்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
மேகதாதுவில் கர்நாடக அணை கட்ட சட்டப்படி அனுமதி இல்லை. கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக பா.ஜ.க சார்பில் நாளை (5-ம் தேதி) தஞ்சாவூரில் உண்ணாவிரதபோராட்டம் நடக்கவுள்ளது. இந்த போராட்டம் தமிழக விவசாயிகளுக்காக பாஜக நடத்தும் போராட்டம், கர்நாடகா அரசின் முடிவுக்கு எதிரான அறவழிப் போராட்டம் என்றார்.
மேலும் கர்நாடக காங்கிரஸ் தலைவர் சிவகுமார், மற்றும் முன்னாள் முதல்வர் சித்தராமையா ஆகியோர், மேகே தாட்டுவில் அணைகட்ட தமிழக அரசிடம் எதற்காக கருத்து கேட்க வேண்டும் தமிழகத்திடம் அனுமதி பெற எதற்கு அவசியம் தமிழகத்தை ஒரு பொருட்டாக எடுத்து கொள்ளாதீர்கள் என்று சொல்கின்றனர். தமிழக காங்கிரஸ் தலைவர்களிடம் ஊடகங்களான நீங்கள் கேள்வியை கேட்க வேண்டும்தமிழக காங்கிரஸார் பதில் சொல்ல வேண்டும்.
மேலும் அவர் கூறுகையில் மத்திய அமைச்சர்களைச் சந்தித்த பின்னர், மேகதாதுவில் அணை கட்டப்படாது என தமிழக நீர்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் தெளிவுபடுத்தியிருக்கிறார்.
நீட் தேர்வு குறித்து தமிழக அரசு நியமித்திருக்கும் ஏ.கே. ராஜன் 2017,2018 ஆண்டுகளில் நடந்த நீட் தேர்வு குறித்த தரவுகளை மட்டும் எடுத்து கொண்டுள்ளார்கள். 2020 ல் நடத்தப்பட்ட நீட் தேர்வு குறித்து தரவுகள் எடுக்கப்படவில்லை. 2020-ல் நடந்த நீட் தேர்வை எந்த விதத்தில் ஆய்வு செய்து பார்த்தாலும், சமூகநீதியைத் தாண்டி, நீட் வெற்றி பெற்றுள்ளது. எல்லா சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.
நீட் தேர்வுக்காக நன்றாகப் படித்துக் கொண்டிருந்த மாணவர்களை, நீட் வராது, படிக்காதீர்கள் என்று தேர்தலுக்காகக் கூறிவிட்டு, தற்போது 3 மாதத்தில் நீட் தேர்வுக்கு தயாராகுமாறு மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கூறுகிறார். சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், 3 மாதத்தில் நீட் தேர்வு எழுதி முதலில் பாஸ் செய்து காட்டட்டும்”
தமிழகத்தின் மீதும், மக்கள் மீதும் பிரதமர் மிகுந்த அக்கறை கொண்டுள்ளார். தமிழகத்தின் எந்த உரிமையையும் மத்திய அரசு பறிக்கவில்லை. முத்ரா கடன் திட்டத்தில் தமிழகம் தான் முதலிடம் 7 லட்சம் கோடி தமிழகத்திற்கு மோடி அரசு ஒதுக்கியுள்ளது. இது குறித்து யாரும் பேசவில்லை என பேசினார்