Sunday, March 22, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

மீண்டும் ராஜ்யசபா எம்.பியாகிறார் இணையமைச்சர் எல்.முருகன்… பா.ஜ.க வெளியிட்ட வேட்பாளர் பட்டியல்..

Oredesam by Oredesam
February 14, 2024
in செய்திகள்
0
மீண்டும் ராஜ்யசபா எம்.பியாகிறார் இணையமைச்சர் எல்.முருகன்… பா.ஜ.க வெளியிட்ட வேட்பாளர் பட்டியல்..
FacebookTwitterWhatsappTelegram

15 மாநிலங்களில் காலியாகவுள்ள 56 ராஜ்ய சபா மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு வருகின்ற பிப்ரவரி 27ம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. உத்தரப் பிரதேசம் – 10, பீகார், மஹாராஷ்டிரா தலா 6, மத்திய பிரதேசம், மேற்கு வங்கத்தில் தலா 5 உள்பட மொத்தம் 56 ராஜ்ய சபா இடங்களுக்கு ராஜ்யசபா தேர்தல் வரும் 27 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, பீகார், மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசம், குஜராத், ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, ராஜஸ்தான், கர்நாடகா, உத்தரகாண்ட், சத்தீஸ்கர், ஒடிசா, ஹரியானா மற்றும் ஹிமாச்சலப் பிரதேசம் ஆகிய 15 மாநிலங்களில் ராஜ்யசபா தேர்தல் நடைபெறவுள்ளது.

READ ALSO

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று அறிவித்தது பாஜக அந்த லிஸ்டில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மீண்டும் மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்.பி.யாகிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை டெல்லி பாஜக மேலிடம் வெளியிட்டுள்ளது

ஏப்ரல் மாதத்துடன் முடிவடைய உள்ள ராஜ்யசபா எம்.பி.க்களில் 9 மத்திய அமைச்சர்கள் உள்ளனர் என்பது குறிப்பிட தக்கது. மேலும் இதில், பாஜக தலைவர் ஜேபி நட்டா (ஹிமாச்சலப் பிரதேசம்), ரயில்வே, ஐடி மற்றும் தகவல் தொடர்பு அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் (ஒடிசா), ஐடி இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் (கர்நாடகா), குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் நாராயண் ரானே (மஹாராஷ்டிரா), கல்வி அமைச்சர் தர்மேந்திரா ஆகியோர் அடங்குவர். பிரதான் (மத்திய பிரதேசம்), சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா (குஜராத்) மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்திர யாதவ் (ராஜஸ்தான்) ஆகியோரும் இந்த லிஸ்ட்டில் உள்ளனர்.

இந்த முறை ராஜ்யசபாவிற்கு போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்து வருகிறது பாஜக. முதற் கட்ட வேட்பாளர் பட்டியலில் கடந்த 2022-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து பா.ஜ.க. கட்சியில் இணைந்த ஆர்.பி.என். சிங் உத்திர பிரதேசத்தில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

உத்திர பிரதேசத்தில் சுதன்ஷூ திரிவேதி, சௌத்ரி தேஜ்வீர் சிங், சாத்னா சிங், அமர்பால் மயூரா, சங்கீதா பால்வன்ட் மற்றும் நவீன் ஜெயின் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். பீகாரில் தர்மஷீலா குப்தா மற்றும் பீம் சிங் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். சத்தீஸ்கரில் பா.ஜ.க. சார்பில் ராஜ தேவேந்திர பிரதாப் சிங் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

அரியாணாவில் சுபாஷ் பராலாவும், கர்நாடகா மாநிலத்தில் நாராயண கிரிஷ்னாசா பாண்டகேவும், உத்தரகாண்ட் மாநிலத்தில் மகேந்திர பட், மேற்கு வங்காளத்தில் சமிக் பட்டாச்சாரியாவும் பா.ஜ.க. வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மீண்டும் மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்.பி.யாகிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை டெல்லி பாஜக மேலிடம் வெளியிட்டுள்ளது. இதனையடுத்து நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் பாஜக பாஜக சார்பில் யார் போட்டியிடுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

எந்தெந்த மாநிலத்தில் எத்தனை இடங்கள் காலியாகின்றன?
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் (ராஜஸ்தான்) பதவிக்காலமும் இந்த ஆண்டு ஏப்ரலில் முடிவடைகிறது. ஏப்ரல் 2, 2024 அன்று, உத்தரப் பிரதேசத்தில் இருந்து 10, மகாராஷ்டிரா மற்றும் பீகாரில் இருந்து தலா 6, மத்தியப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கத்தில் இருந்து தலா 5, குஜராத் மற்றும் கர்நாடகாவிலிருந்து தலா 4, ஆந்திரா மற்றும் தெலுங்கானா மற்றும் சத்தீஸ்கர், ஹரியானாவில் இருந்து தலா 3 , இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 1 ராஜ்யசபா எம்.பி., ஓய்வு பெறுகிறார்.

மகாராஷ்டிராவில் இருந்து ஓய்வுபெறும் ராஜ்யசபா எம்.பி.க்களில் ரானே, முன்னாள் தகவல் மற்றும் ஒளிபரப்பு மற்றும் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மற்றும் பாஜக மூத்த தலைவர் வி.முரளீதரன் ஆகியோர் அடங்குவர்.

சிவசேனா (யுடி) எம்பி அனில் தேசாய், என்சிபியின் வந்தனா சவான் மற்றும் காங்கிரஸின் குமார் கேட்கர் ஆகியோரும் ஓய்வு பெறவுள்ளனர்.

தேர்தல் வேட்புமனு:
பிப்ரவரி 15ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை பிப்ரவரி 16ஆம் தேதி நடைபெறும். விண்ணப்பதாரர்கள் பிப்ரவரி 20 ஆம் தேதி வரை தங்கள் பெயர்களை திரும்பப் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
செய்திகள்

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

March 5, 2026
வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.
இந்தியா

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

February 20, 2026
Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

அமைச்சர் வர தாமதம் மாணவர்களுக்கு வழங்கிய சாப்பாடை பறித்த அவலம் ..பெற்றோர்கள் வேதனை..

அமைச்சர் வர தாமதம் மாணவர்களுக்கு வழங்கிய சாப்பாடை பறித்த அவலம் ..பெற்றோர்கள் வேதனை..

August 26, 2023
மஹாராஷ்டிரா அரசை காப்பாற்ற முடியாது- அமித் ஷா அதிரடி!

கேரளா கம்யூனிஸ்ட் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு வங்கியில் ரூ.300 கோடி மோசடி! அதிரடியில் இறங்கிய கூட்டுறவு துறை அமைச்சர் அமித் ஷா!

August 8, 2021
மத்திய பாஜக அரசு கூட்டாட்சி தத்துவத்திற்கு முக்கியத்துவம் தருகின்றது: பிரதமர் மோடி.

மத்திய பாஜக அரசு கூட்டாட்சி தத்துவத்திற்கு முக்கியத்துவம் தருகின்றது: பிரதமர் மோடி.

April 25, 2023
ஜீ தமிழ் தொலைக்காட்சி நடவடிக்கை எடுக்குமா!  கரு.பழனியப்பனால் ஜீ தமிழ் நிர்வாகத்திற்கு நெருக்கடி!

ஜீ தமிழ் தொலைக்காட்சி நடவடிக்கை எடுக்குமா! கரு.பழனியப்பனால் ஜீ தமிழ் நிர்வாகத்திற்கு நெருக்கடி!

September 22, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • படிப்பை மட்டும் விட்றவே விட்றாதீங்க… ஆசிரியர்களையே நியமிக்காமல் தேவாவும், ஜீவாவும் எப்படிப் படிப்பார்கள் முதலமைச்சரே?-அன்புமணி கேள்வி.
  • BREAKING || த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!
  • போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!
  • தமிழக வெற்றிக் கழகத்துடன்(TVK) இனி யார் கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளது..?

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x