தரமான சம்பவம் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் போனில் பேசிய வாலிபர் என்ன சொன்னார் தெரியுமா ..

“யாரு ராஜேந்திர பாலாஜியா?

ஆமா, தம்பி யாரு?

அய்யா உங்க பேட்டி பார்த்தோம் ரொம்ப சந்தோஷம்,

உண்மைதானப்பா பேசுறோம்

ஆமாங்க, திமுக ஒரு உருப்படாத கட்சி, தேசவிரோத கட்சின்னு நிறைய பேசுனீங்க‌

ஆமா உண்மைதானப்பா, அவனுக இருக்கானுகளே….

இருங்க சார், அந்த திமுகவுலதான உங்க எம்.ஜி.ஆரும் இருந்தாரு

ஆமா, ஆனா அப்ப அவனுக இப்படி இல்லியே?

என்ன இல்லியே, அண்ணா கம்பரசம் எழுதினது, இந்துமத விரோதம் பேசினது எல்லாம் எப்ப சார்? அத ஏன் உங்க ராம்சந்திரன் எதிர்க்கல‌

தம்பி, அண்ணாதான் மானங்கெட்டு எங்க தலைவர் பின்னால இதயகனி, கனி தொங்குது, என் கையிலவிழுதுன்னு அலைஞ்சாரு, வரலாற மாத்தாதீங்க. எங்க தலைவர் ஒரு இடத்திலேயும் நாத்திகம் பேசல, முருகன் வேடம் சன்னியாசி வேடம் கிறிஸ்தவ வேடம் இஸ்லாமிய வேடம்னு எல்லாம் போட்டாரு, கருணாநிதி மாதிரி நடிக்கல‌

அப்ப தேசவிரோதம் பேசலியா?

எப்ப்பா பேசினாரு? இவனுக இந்தி எதிர்ப்புன்னு நாட்ட கெடுத்தப்போ தலைவரும் புரட்சி தலைவி அம்மாவும் ஆயிரத்தில் ஒருவன் பட ஷூட்டிங்ல இருந்தாங்க‌

ஓஹோ

பின்ன, தலைவர் நல்லவர் தம்பி. அவர் முகத்துக்குத்தான வோட்டு விழுந்து, தம்பி எங்க தலைவர ராதா சுட்டாரு, அத வச்சித்தான இவனுக வோட்டு வாங்குனானுக‌

இல்ல சார் , இது பெரியார் மண்ணு, பெரியார் புரட்சியாளர்

என்ன புடுங்குன மண்ணு?, பின்ன ஏன் பெரியார் தேர்தலுக்கே வரல. தம்பி பெரியாருக்கு நடிகனே பிடிக்காது, அப்படிபட்ட தமிழ்நாட்டுல ஒரு நடிகர் நின்னு ஜெயிச்சார்னா என்ன அர்த்தம்

பெரியார ஒரு பயலும் மதிக்கலண்ணு அர்த்தம்

அதுதான் தம்பி, இவனுக சும்மா பெரியார்னு கட்டிவிட்ட கதை, உண்மையில அவர ஒரு பயலும் கண்டுக்கல, எல்லாம் நாட்டுல குழப்பம் வேணும்னு கருணாநிதி கட்டி வச்ச கதை

அது இருக்கட்டும், உங்க ராம்சந்தர் எதுக்கு தனியா வந்தாரு?

அவரு அண்ணாவ நம்புனாரு, அண்ணா இல்ல, இவனுக ஒரே இம்சை, ராமர் படத்தை அடிக்கிறது, சட்டத்த கொளுத்துறதுன்னு பூரா அயோக்கியதனம், புனிதமான கிருபானந்தவாரியார் சாமிகள எவனாவது அடிப்பானாய்யா? அதான் தலைவர் வெளிவந்தாரு

ஆக உங்க தலைவர் நல்லவரு?

மக்கள் சொன்னாங்க தம்பி, அடுத்த 11 வருஷம் கருணாநிதியால என்ன புடுங்க முடிஞ்சுதுது தம்பி, ராஜிவ் கொலைக்கே திமுக காரணமுன்னு பெயின் கமிஷன் சொல்லிச்சி

சார் அது ஜெயின் கமிஷன்..

யோவ் இப்ப அதுவா முக்கியம், தலைவரு நல்லவரு, அம்மா கெட்டிகாரங்க‌

ஆனா உங்க தலைவரும் புலிகள ஆதரிச்சாரே

இந்திய படைக்கும் பிரபாகரனுக்கும் சண்டை வந்தப்புறம் தலைவரு ஆதரிக்கலியே, தலைவர் இருந்திருந்தா அந்த நன்றிகெட்ட பயல அப்பவே நசுக்கிருப்பாரு ராஜிவ் இப்பவும் இருந்திருப்பாரு

அந்த திருசெந்தூர் வைரவேல்..

என்ன தம்பி பேசுறிய, கருணாநிதி நடையா நடந்தாரே அந்த வேலை கண்டுபிடிச்சாரா? அப்படி ஒரு சம்பவமே இல்ல தம்பி, எல்லாம் கருணாநிதி கட்டிய கதை

அந்த ரே கமிஷன், பல்கேரியா கப்பல்

தம்பி பைத்தியக்காரன் பலவும் சொல்லுவான், இப்ப இருக்குற திமுக தலமை எப்படி எல்லாம் உளரும்னு ஊருக்கே தெரியும் , இவரே இப்படின்னா இவர பெத்தவுக எப்படி இருப்பாக, விடுங்க தம்பி

ஆக தலைவர் நல்லவரு?

பின்ன, தலைவர் தன் சொத்துக்களை எல்லாம் ஏழைக்கு விட்டுட்டு போனாரு, காதுகேக்கத பிள்ளைகள், ஊமை பிள்ளைகள்னு ஸ்கூல் நடத்த வச்சிட்டு போனாரு, அம்மா வீடும் அரசு சொத்தாயிட்டு, ஆனா பாருங்க கருணாநிதி வீட்ல இருந்து ஒரு செங்கல் கூட ஏழைக்கு வரல, இதெல்லாம் நாம சொன்னா பூரா பயலும் காதுகேக்காத மாதிரியே இருப்பாங்க‌

உண்மைதானுங்க, ஆனாலும் இது பெரியார் மண்ணுங்க..

தம்பி அம்மா ஜெயலலிதாவும் பிரச்சாரத்துக்கு வந்தாங்க இவ்வளவுக்கும் அவங்க பிராமண அய்யரு, அந்த பக்கம் வீரமணியும் கருணாநிதியும் வந்தாங்க, யாருப்பா ஜெயிச்சாங்க?

அம்மாதான் சார்

வேற எப்படி தம்பி இது பெரியார் மண்ணு? அப்படி சொல்றவன் மண்டையிலதான் மண்ணு, தம்பி 1996ல கருணாநிதி ஏன் ரஜினி வீட்டுல மூப்பனார் வீட்டுல காவல் இருந்தாரு, வீரமணிய ஏன் கூட்டிட்டு வோட்டு கேக்க போகல‌

ஆமா சார், யோசிக்கணும்

அதாம்பா சொல்றேன் , இது அதிமுக மண். தலைவருக்கு அப்புறம் அம்மா காலத்துல கருணாநிதி எப்படி ஜெயிச்சாரு சொல்லு

எப்படி சார்?

மூப்பனார ஏமாத்தி, ரஜினிய ஏமாத்தி ஜெயிச்சாரு. 2006ல காங்கிரஸ ஏமாத்தி மைனாரிட்டி கவர்மென்ட் வச்சிருந்தாரு இவருதான் அவரு பவுசு, அப்பவும் பிரச்சாரத்துகு யாரு வந்தா? வீரமணியும் சுபவீயுமா வந்தாக..

இல்லீங்க‌

ஆமாப்பா வடிவேலு, பாக்யராஜ் நீ ஒரு அம்மணிய சொல்லிட்டே இருப்பியே ஆங்.. அந்த குஷ்பு இவுகள கூட்டிட்டுத்தான் வோட்டு கேட்டு வந்தாரு, இவுகளா திராவிட முகம், கடைசில வடிவேலு நாசமானதுதான் மிச்சம், எங்கட்ட இருந்திருந்தா எப்படி வச்சிருப்போம் சொல்லு

அதுவும் சரிதானுங்க‌

ஆனாலும் ஜெயா குற்றவாளிதானே

தம்பி அம்மா இறந்த அப்புறம்தான் தீர்ப்பு வந்து அது எப்படி செல்லும்? நல்லவங்க அம்மா இருக்கும் போது தீர்ப்பு சொல்லிருக்கலாமே மறு வழக்கு போட்டு ஜெயிச்சிருப்ப்போம், சும்மா சொல்லிட்டு இருக்க கூடாது தம்பி

எப்படி சார் இப்படி?

தம்பி எங்களுக்கு நிறைய வேல இருக்கு, நாங்களா அந்த திமுகவாண்ணு பார்த்திர முடிவுல இருக்கோம், தொந்தரவு பண்ணாதீங்க‌

இல்லசார், பிஜேபி வளர்ச்சிய தடுக்கத்தான் இப்படி மோதிக்கிறீங்கண்ண்ணு…

ஏன் பிஜேபி வளர்ந்தா என்ன வளரட்டுமே, இங்க சன்டிவியும் கருணாநிதி குடும்பமும் அவுக சொத்தும்தான் வளரணுமா, பிஜேபி இங்க வளராம அமெரிக்காவுலயும் சைனாவுலேயுமா வளரும் , அதெல்லாம் அவங்கபாடு தம்பி, எங்ககிட்ட என்ன பேசணுமோ அதத்தான் பேசணும் புரியுதா?

சசிகலா விடுதலை?

தம்பி ஜெயில் விடுதலை செஞ்சா அவங்க வரத்தான் செய்யணும், உள்ளேயே இருப்பேண்ணு அடம் பிடிக்க முடியாது, அதுனால அவுகளா வருவாங்க..

அவங்க வந்தா அதிமுக நிலை

அதெல்லாம் அண்ணன் பழனிச்சாமி , பன்னீர் எல்லாம் பாத்துக்குவாங்க‌

எது காலுல விழுறதா?

தம்பி அதெல்லாம் இங்க பேசபுடாது, இந்திராகாந்தி கால்ல கருணாநிதி விழுந்தா அதுதான் பயம், எங்க ஜெயா அம்மா கால்ல விழுந்தா அது மரியாதை. அவங்களுக்கு நாங்கெல்லாம் தத்து பிள்ளைகள், சசிகலா வளர்ப்பு அம்மா, இதுல என்னதம்பி தப்பு

சார் இந்த விவசாய போராட்டம்?

மழை வந்திருக்கு குளம் நிரம்பி கிடக்கு, வேலை செய்ய சொன்னா சிலபேர் திமுக பேச்சை கேட்டு போராட போறானுக , இவனுக வயல திமுககாரன் வந்து உழது நட போறானா? இல்ல அறுக்க போறானா? திமுக டிவி, பத்திரிகை எல்லாம் திறந்திருக்கு ஸ்டாலின் இன்னைக்கும் மேக் அப் போட்டுட்டு இருக்காரு, எல்லாம் நாங்க பாத்துட்டோம்

அப்ப விவசாயி போராட்டம்?

ஒழுங்கா விவசாயம் பார்த்தா பொழைச்சாங்க, இல்ல அண்ணாநகர் ரமேஷ், சாதிக்பாட்சா நிலமைதான், நான் சொல்லிதான் விட்டேன், போராட்டம்னு உங்க வாயில அரளி கொட்டைய அரைச்சி கொடுத்திருவானுக , இதனால அவனுக கொடுக்குற எதையும் சாப்பிடாதீக, வேணும்னா 200 ரூபாய வாங்கிட்டு வந்திருங்கப்பாண்ணு..”

Exit mobile version