சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் இருந்துதான் முதல்வர் ஸ்டாலின், கடந்த மூன்று முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதாவது 10 ஆண்டுகளுக்கு மேல் அந்தத் தொகுதியில் அவர் தொடர்ந்து எம்எல்ஏவாக இருந்து வருகிறார்.சென்னைக்கு கடும் மழை ஏற்பட உள்ளது எனவும், அதற்கான தேவையான முன்னேற்பாடுகளை செய்யுமாறும், மோடி அரசு தமிழக திமுக அரசுக்கு அறிவுறுத்தியிருந்தது. வழக்கம்போல் மோடி அரசின் எச்சரிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் கண்டு கொள்ளவில்லை. எந்தவிதமான மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் ஸ்டாலின் மேற்கொள்ளவில்லை.
கடந்த ஜெயலலிதா ஆட்சியின் போது, சென்னை மாநகரம் முழுவதும் முறையான மழைநீர் வடிகால் வசதி செய்யப்பட்டு இருந்தது. இந்த கட்டமைப்பு பணிகள் பல ஆண்டுகளாக நடந்து வந்தன. கடந்த ஆண்டுதான் அந்தப் பணிகள் நிறைவு பெற்றன.
அதனால், கடந்த ஆண்டு பெய்த கனமழையின் போது சென்னையில் ஒருசில தாழ்வான பகுதிகளை தவிர, மற்ற இடங்களில் பெரிய அளவில் தண்ணீர் தேங்காமல் உடனுக்குடன் வடிந்து ஓடியது. மழைநீர் வடிகாலில் ஏற்பட்ட அடைப்புகளையும் உடனுக்குடன் சரி செய்தது, எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அண்ணா திமுக அரசு. இதனால் பெரிய அளவில் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது.
இப்போது அதை விட குறைவான அளவிலேயே சென்னையில் மழை பெய்து உள்ளது. அதோடு மத்திய மோடி அரசும் முறையான ஆலோசனைகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான அறிவுரைகளையும் வழங்கி இருந்தும், ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு மழைநீர் வடிகாலில் உள்ள அடைப்புகளை எடுப்பதற்கு எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.இதனால் சென்னையில் மழை பெய்யத் தொடங்கிய சில மணி நேரத்திலேயே சென்னையின் முக்கிய பகுதிகள் அனைத்தும் வெள்ளத்தில் மிதக்கத் தொடங்கின.
கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வதை போல, சென்னை மழை வெள்ளத்தில் மிதந்த பிறகுதான், ஆழ்ந்த நித்திரையில் இருந்த முதல்வர் ஸ்டாலின் விழித்து எழுந்து வழக்கம் போல தனது நாடகத்தை அரங்கேற்றினார். ஸ்டாலினின் தந்தை கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது, மழை வெள்ளத்தை வேட்டியை மடித்துக் கொண்டு சென்று பார்த்தார். அதுபோலவே சென்னை மேயராக ஸ்டாலின் இருந்த போதும், வேட்டியை மடித்துகொண்டு பார்த்தார். பின்னர் அவர் துணை முதல்வராக இருந்தபோதும் சென்னை வெள்ளத்தில் வேட்டியை மடித்துக் கொண்டு நடந்து சென்று பார்த்தார்.
இப்போது முதலமைச்சராக இருக்கும்போதும், அதே நாடகத்தை மீண்டும் அரங்கேற்றியுள்ளார். வேட்டியை மடித்துக் கொண்டு மழை வெள்ளத்தில் நடந்து போட்டோக்களை எடுத்து பத்திரிகைகளுக்கு அனுப்பி வருகிறார்.ஸ்டாலினின் சொந்த தொகுதியான கொளத்தூர் தொகுதி வெள்ளத்தில் மிதக்கிறது. அங்கும் அவர் சென்று தனது போட்டோ சூட்டை முடித்துக்கொண்டு சென்றுவிட்டார்.
ஸ்டாலினும், திமுகவினரும் சிறிதும் எதிர்பாராத வகையில், பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, திடீரென ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் வெள்ள சேதங்களை பார்வையிட்டார். அப்போது அவர், கொளத்தூர் தொகுதி தெருக்களில் படகில் சென்று வெள்ள சேதங்களை பார்த்தார். அதோடு 10 ஆண்டுகளுக்கு மேலாக முதல்வர் ஸ்டாலின் எம்எல்ஏவாக உள்ள கொளத்தூர் தொகுதியில் மழைநீர் வடிந்து செல்வதற்கு முறையான எந்த நடவடிக்கைகளையும் ஸ்டாலின் மேற்கொள்ள வில்லை என்பதையும் சுட்டிக்காட்டினார்.
ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் அண்ணாமலை களமிறங்கியது திமுகவினரை பதட்டம் அடையச் செய்தது. திமுக அமைச்சர் சேகர்பாபு உடனடியாக கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு பதறி அடித்தபடி வந்தார். அராஜகத்தின் மூலம் பாஜகவினரின் மழை நிவாரண பணிகளை தடுத்து நிறுத்த முயன்றார். ஆனால் முடியவில்லை. சென்னை மாநகர் முழுவதும் பாஜகவினரின் வெள்ள நிவாரண உதவிகள் தொடர்ந்து வருகின்றன.
திடீரென முதல்வர் ஸ்டாலினின் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் அண்ணாமலை வெள்ள சேதங்களை பார்வையிட்டு, பாஜகவினரின் வெள்ள நிவாரண உதவிகளை முடுக்கி விட்டுள்ளது, சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.இதைப்போல தியாகராய நகர் உள்பட சென்னையின் பல்வேறு பகுதிகளில் வெள்ள சேதங்களை அண்ணாமலை பார்வையிட்டு, பாஜகவினரின் வெள்ள நிவாரண உதவிகளை துரிதப்படுத்தினார்.
அமைச்சர் சேகர்பாபுவின் சென்னை துறைமுகம் சட்டமன்றத் தொகுதிக்கும் அண்ணாமலை சென்றார். அங்கு பாஜக இளைஞரணி சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 2000-க்கும் அதிகமான பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியை அவர் தொடங்கி வைத்தார்.
அண்ணாமலையின் இந்த அதிரடி ஆட்டத்தால், திமுகவினர் சற்று நிலை குலைந்துதான் போய் உள்ளனர்.எது எப்படியோ ஸ்டாலின் அரசு, இனிமேலாவது ஆக்கபூர்வமான பணிகளை மேற்கொண்டால் நல்லது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.















