கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவை வீழ்த்த பொய்யான வாக்குறுதிகளை மக்களிடையே வீசி ஆட்சி அமைத்தது திமுக, கடந்த மே
மாதம் ஆட்சிக்கட்டிலில் ஏறிய சில நாட்களிலேயே முதல்வர் ஸ்டாலின் மகள் மற்றும் அவருடைய மருமகன் ஸ்டாலின் செந்தாமரை சபரீசன்
பெயரில் புதிதாக ஏழு நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
இந்த நிறுவனங்களின் பெயர்கள் தற்போது வெளியாகியுள்ளன.ஸ்டாலின் மருமகன் சபரீசன் வேதமூர்த்தி பெயரில் பெனின்சுலார்
ரிசெர்ச் ஆபரேஷன் பிரைவேட் லிமிடட் 3.6.21லும் சன்ஸைன் வெல்பேர் பவுண்டேஷன் எனும் பெயரில் 16.6.21 அன்று இரண்டாவது
நிறுவனமும் சன்ஷைன் புட் அண்ட் பெவரேஜஸ் பிரைவேட் லிமிடெட் எனும் பெயரில் மூன்றாவது நிறுவனம் 18.05.2021 அன்றும்
ஆரம்பிக்கப்பட்டுள்ளது.முக ஸ்டாலின் மகளான செந்தாமரை ஸ்டாலின் பெயரில் நான்கு நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
சன்ஷைன் ஹோல்டிங்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் உட்பட புதிதாக ஆரம்பிக்கப்பட்ட நிறுவனங்களின் டைரக்டராக பொறுப்பேற்றிருப்பது மட்டுமல்லாமல், மஹிதாரா பிளாட்டினா எல்.எல்.பி எனும் நிறுவனம் 22 ஜூன் 2021லும் மஹிதாரா எமரால்டு எல்.எல்.பி எனும் நிறுவனம் 23 ஜூன் 2021 லும் மஹிதாரா பிரிஸ்டின் எல்.எல்.பி எனும் நிறுவனம் 27 ஜூலை 2021லும் மஹிதாரா ப்ரைம் எனும் நிறுவனம் 27 ஜூலை 2021 ல் ஆரம்பிக்கப்பட்ட
நிறுவனத்தையும் சேர்த்து புதிதாக ஆரம்பிக்கப்பட்ட ஏழு நிறுவங்களின் டைரக்டராகவும் செந்தாமரை ஸ்டாலின் இருக்கிறார் என்ற தகவல்
தற்போது வெளியாகியுள்ளது.

ஒருபுறம் அமைச்சர் பெருமக்களின் அட்டகாசமும், அராஜகமும் ஓங்கிவருகிறது. மறுபுறம் விடியல் அரசு என்று பிரகடனம் செய்துகொள்கிறார் முதல்வர்.
மக்களோ அவரின் குடும்பம் வாங்கிய சொத்துக்களை பல நிறுவனங்கள் தொடங்கி அதில் முதலீடு செய்து இன்னும் இன்னும் கோடிகளைக் குவித்து இந்தியாவிலேயே மிகப்பெரும் பணக்கார குடும்பமாக வலம் வருகிறார்கள். இவர்களையா தேர்ந்தெடுத்தோம் என புலம்பிவருகின்றனர்.
தகவல்: மெட்ராஸ் டெலிகிராம்