பசும்பொன்.முத்துராமலிங்கம் தேவர் குருபூஜையில் பிரசாதமாக தந்த விபூதியை கீழே கொட்டி அவமதித்த தி.மு.க தலைவர் ஸ்டாலின் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் எம்.எல்.ஏ தெரிவிதுள்ளார்.
கோவையில் உள்ள தனியார் விடுதியில் முக்குலத்தோர் புலிப்படை தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், “தி.மு.க தலைவர் ஸ்டாலின் தேவர் ஜெயந்தி விழாவில் திருநீர் பூச மறுத்து, முக்குலத்தோர் மக்களின் உணர்வுகளை இழிவுபடுத்தி விட்டதாக தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், “இதற்காக ஸ்டாலின் வருத்தம் தெரிவித்து, மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும், ஸ்டாலின் வருத்தம் தெரிவிக்கும் வரையில் போராட்டங்கள் நடத்துவோம் எனவும்” அவர் கூறினார். ஏற்கனவே இந்து சமுதாய மக்கள் ஸ்டாலினின் இந்த செயலால் அவமதிக்கப்பட்டது போல் உணர்கின்றனர். இதில் ஒரு எம்.எல்.ஏ’வே இதுபோல் ஸ்டாலினை கண்டித்திருப்பது தேவர் சமுதாயம் ஸ்டாலின் மீது கடும் கோபத்தில் உள்ளது தெரிகிறது.