மு.க.ஸ்டாலினுக்கு மானம் சுயமரியாதை என்றால் என்ன? விளக்கும் அளித்துள்ள மூக்குத்தி அம்மன் படகுழுவினர்.

மதம் இல்லை என்று சொல்கிறவர்களை கூட ஏற்றுக் கொள்ளலாம்.

ஆனால் இந்து மத நம்பிக்கைகளை கேலி செய்து கொண்டு மற்ற மத நம்பிக்கைகளை புகழும்
திமுக தான் உண்மையில் இந்துக்களால் புறக்கணிக்க வேண்டிய கட்சி.

மானம் உள்ள இந்துக்கள் திமுகவுக்கு வாக்களிக்கும் முன் தங்களின் மனசாட்சி யிடம் கேள்வி கேளுங்கள்..

வெறும் ஓட்டு அரசியலுக்காக தாங்கள் பிறந்த அடையாளத்தையே கேவலப்படுத்தும் இவர்கள் பணத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்.


நானெல்லாம் ஒரு காலத்தில் திமுகவின் தீவிர அனுதாபி அப்பா இந்து முன்னணி நான் திமுக.

எப்படி இருந்து இருக்கும்
எங்களின் உறவு என்று யோசித்து பாருங்கள்.எப்பொழுதும் என்னை திட்டிக்கொண்டே இருப்பார்.

மதம் சார்ந்த விசயங்களை என்னுள் திணித்துக்கொண்டே இருப்பார். பள்ளிக்கு அனுப்பும் பொழுதே நெற்றியில் பெரியபட்டை நடுவில் குங்குமம் என்று சிறு வயதிலேயே என்னுள் தன்னுடைய அடையா ளங்களை என்னுள் திணித்துக்கொண்டே இருப்பார்.

அதுவே எனக்கும் என் தந்தைக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளியை உருவாக்கியது.

ஒரு வேளை என் தந்தையின் தீ
விர இந்துத்வா உணர்வே என்னை அத ற்கு எதிராக திமுகவை நோக்கி தள்ளி இருக்கலாம்..

நான் திமுக ஆதரவாளராக
இருந்த பொழுதும் தமிழனை காட்டு மிராண்டி என்று கூறிய பெரியாரை ஏற்றுக் கொண்டதே கிடையாது ஏனெனில் நான்
ஒரு தமிழன்.

கருணாநிதி மீட்டிங் என்றால் திருநெல்வேலியில் எங்கு நடந்தாலும் சென்று விடுவேன்.

10 வயது இருக்கும் பொழுதே
திமுக கொடி பிடித்து 1980 சட்டமன்ற தேர்தலில் அப்பொழுது எங்கள் தொகுதியில் நின்ற திமுக காங்கிரஸ் கூட்டணி வேட்பாளார் ராஜாத்தி குஞ்சிதபாதம் என்கிற
காங்கிரஸ் வேட்பாளர்க்கு ஓட்டு கேட்டு இருக்கிறேன்.

எனக்கு முதல் ஒட்டுப்போட தகுதி வந்த தேர்தலில இருந்து 2006 தேர்தல் வரை நான் திமுகவை தவிர வேறு எந்த கட்சிக் கும் ஓட்டுப்போட்ட தில்லை.

ஆனால் கரு ணாநிதி எப்பொழுது இந்து என்றால் திருடன் என்று சொன்னாரோ அப்பொழுது
தான் நான் என்னைத்திருடன் என்று கூறும் அந்த திருட்டுக்கூட்டத்திற்கு எதற்கு
ஓட்டு போட வேண்டும்? என்று சிந்திக்க ஆரம்பித்தேன்.

என்னை திருடன் என்று கூறும் அந்த திருட்டு கூட்டத்திற்கு நான் ஓட்டுப்போட்டால் என்னை திருடன் என்று கருணாநிதி கூறியதை நான் ஏற்றுக் கொண்டதாகி
விடும்.

தன்மானம் உள்ள ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய மதத்தையும் இனத்தையும் மற்றவர்கள் இகழ்ந்து பேசினால் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கமாட்டார்கள்.

எனக்கு தன்மானம் இருக்கிறது. அதனால் இந்து என்றால் திருடன் என்று கூறிய திருட்டு கருணாநிதியின் திமுகவுக்கு
நான் ஏன் ஓட்டுப்போட வேண்டும் என்று அதிமுகவுக்கு வாக்களிக்க ஆரம்பித்தேன்.

2009 லோக்சபா தேர்தலில் தான் நான் முதன்முதலாக அதிமுகவுக்கு ஆதரவாக பேச ஆரம்பித்தேன் வாக்களித்தேன்.

என்னை அதிமுக ஆதரவாளராக மாற்றியது ஜெயலலிதாவோ அதிமுகவின் கொள்கையோ? அல்ல மாறாக திமுகவின்
இந்து மத எதிர்ப்பு தான் காரணம்.

ஒரு தீவிர இந்துத்வாவாதியான என்னுடைய தந்தையின் ரத்தத்தில் இருந்து வந்த என் ரத்தத்தில் ஒரு துளியிலாவது என்னுடைய மதம் சார்ந்த உணர்வு இருக்காதா?

இருந்தது அதனால் தான் என்
னை திருடன் என்று கூறிய கருணாநிதிக்கு எதிராக மாற்று அரசியலை தேடி அதிமுகவுக்கு ஆதரவாக மாறினேன்

சுயமரியாதை தன்மானம் பற்றி வாய் கிழிய பேசினால் மட்டும் போதாது.

தன்னுடைய மதத்தையும் இனத்தையும் இன்னொருவன் கிண்டல் செய்யும்பொழுது
கோபம் வர வேண்டும்.

அவன் தான் மனிதன் ஆனால் திமுகவில் இருப்பவர்கள்களுக்கு சுயமரியாதை தன்மானம் துளி
கூட கிடையாது.

இருந்து இருந்தால் தமிழையும் தமிழனையும் படு கேவலமாக பேசிய பெரியாரை தந்தை பெரியார் என்று வணங்கி நிற்பார்களா..

நான் இந்து மத வெறி வேண்டும் என்று யாரிடமும் கூற மாட்டேன்.

ஆனால் தன்னுடைய மதம் சார்ந்த
உணர்வு கண்டிப்பாக இருக்க வேண்டும் என்கிறேன்.

தாய் மதம் என்பது நம்மை ஈன்ற தாய்க்கு சமமானது.அதனை இன்னொருவன் கிண்டல் செய்வதை வேடிக்கை பார்ப்பது
நம்முடைய தாயை நாமே கேவலப்படுத்தும் செயலாகும்.

அதனால் எந்த ஒரு சூழ்நி
லையிலும் திமுக என்கிற இந்து விரோத கட்சிக்கு வாக்களிக்க கூடாது.

அப்படி நாம் வாக்களித்தால் நம்மை பெற்ற தாயை நாமே இகழ்வது மாதிரி கேவலமான செயலாகும்.

ஆறவு உள்ள மனிதர்கள் நிச்சயமாக செய்ய மாட்டார்கள்.
ஏனென்றால் மனிதனின் அடையாளம்மானமும் சுயமரியாதையும் தான்.

கட்டுரை:- எழுத்தாளர் விஜயகுமார் அருணகிரி.

Exit mobile version