தேர்தல் முடிவுகள் திமுக ஆட்சி உறுதி என்பதை சொல்லி கொண்டிருகின்றன, தமிழகம் 11ம் ஆண்டாக தொடர்ந்து அதிமுக ஆட்சியினை அனுமதிக்க முடியாது என சொல்லிவிட்டது
இது திமுகவின் வெற்றி என சொல்ல முடியாது, வேறு தேர்வுகள் இல்லாத ஒரே காரணத்தால் அதாவது திமுகவினருக்கு ஸ்டாலினை விட்டால் ஆளில்லை என்பது போல தமிழகமும் அடுத்த தேர்வு இல்லை என இப்பக்கம் சரிந்துவிட்டது
பழனிச்சாமி தனக்கு எதிர்ப்பு அலை இல்லா தமிழகத்தில் மிக பெரிய இலக்கை நோக்கித்தான் சென்றிருக்கின்றார், வெற்றிக்கு மிக அருகில் அவர் கட்சியினை நிறுத்தியிருப்பது அதிமுகவில் அவர் பிடி இனி தளராது அடுத்த தலைவர் அவரே என்பதை சொல்லிவிட்டது
அதிமுகவில் சினிமா அல்லா ஒருவர் இவ்வளவு தூரம் சாதித்திருப்பது பெரிய விஷயம்
10 ஆண்டுகாலம் ஆண்ட அதிமுக இறங்குவதுதான் நல்லது, 15 வருடம் ஒரே கட்சி ஆட்சி என்பது சரியல்ல
பாஜகவினை பொறுத்தவரை அண்ணாமலையின் பின்னடைவு அதிர்ச்சியானது, அதே நேரம் 5 தொகுதிகளில் அவர்கள் வென்றுவிடுவார்கள் என்பது அவர்களுக்கு வளர்ச்சியே
0வில் இருந்து அவர்கள் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துவிட்டது மிக பெரிய வெற்றி
இந்த தேர்தலில் காணாமல் போகும் இருவர் தினகரனும், விஜயகாந்த் கட்சியும்
விஜயகாந்த் கட்சி அதிமுகவில் இருந்திருந்தால் இந்நேரம் 7 தொகுதிகளில் வென்றிருக்கலாம், ஆனால் மிகபெரிய கனவு கண்டு கரைந்துவிட்டார்கள்
தினகரனின் ஆட்டம் இனி எடுபடாது
கமலஹாசனின் அரசியலை பொறுத்தவரை அவர் மிஷனரிகளின் கைகூலி என்பது தெரிந்துவிட்டது, இதனாலே டிஜிஎஸ் தினகரனின் செல்வாக்கு மிக்க அந்த தொகுதியில் அவரால் வெல்ல முடிகின்றது
இது அவர் ஒரு கிறிஸ்தவ பினாமி என்பதை காட்டுகின்றது
தனி தொகுதியில் விசிக வெல்வது என்பது ஒன்றும் ஆச்சரியமல்ல அங்கு அவர்கள்தான் வெல்வார்கள், அவர்கள் வெல்ல வேண்டும் என கொடுக்கபட்ட இடம் அது, இன்னொரு சாதிக்காரன் அங்கு நிற்கவே முடியாது எனும்பொழுது முடிவு இப்படித்தான் இருக்கும்
தலைவி குஷ்புவினை பொறுத்தவரை சேப்பாக்கம் தொகுதி மறுக்க்கபட்ட பொழுதே அவரின் தோல்வி உறுதியாயிற்று, இதை என்றோ சொல்லிவிட்டோம்
பயிரை ஒரு இடத்தில் விதைத்துவிட்டு அறுவடையினை இன்னொரு இடத்தில் எதிர்பார்ப்பதெல்லாம் சரியல்ல
அண்ணாமலையினை மேல்சபை எம்பியாக நியமிப்பது பாஜக செய்ய வேண்டிய அவசரமான காரியம், இல்லையேல் கட்சிமேல் தமிழகத்தில் பெரும் அதிருப்தி ஏற்படும்
பாஜக தமிழகத்தில் இப்பொழுது ஆழம் பார்த்துகொண்டிருக்கின்றது , இனி அடுத்தடுத்த வியூகங்களில் அவர்கள் இறங்க வேண்டும், 2026ல் அவர்களால் ஆச்சரியங்களை கொடுக்க முடியும்
இப்போதைக்கு அதிமுக அரசு விலகுவது நல்லது, வரவேற்கதக்கது. திமுக கூட்டணி ஆட்சியாக வரவில்லை என்பதுதான் கொஞ்சம் வருத்தமான விஷயம்
கடந்த தேர்தலில் மேற்கு வங்கத்தில் 2 இடத்தில் இருந்த பாஜக அங்கு இத்தேர்தலில் ஆச்சரியம் நிகழ்த்தியது எப்படி?
ஒன்றுமில்லை அசைக்க முடியாத கம்யூனிஸ்டுகளை மம்தா வீழ்த்தினார், மம்தாவினை பாஜக இப்பொழுது நெருக்குகின்றது, மம்தாவின் அரசியல் அஸ்தமனத்தை நெருங்குகின்றது
இதே கணக்கு இங்கும் இருக்கலாம்
ஒரு தேசியவாதியாக 5 மாநில தேர்தலை உற்று பார்க்கின்றோம்
இதில் 3 மாநிலங்களில் அசத்தியிருக்கின்றது பாஜக அசாமை தக்க வைத்தது, மம்தாவின் கணக்கினை மீறி மிகபெரும் சக்தியாய் வளர்ந்திருப்பது என அது அதிரடி காட்டுகின்றது
கேரளாவில் காங்கிரஸின் வாக்கு வங்கியினை அது உடைத்திருக்கின்றது அதில்தான் பிணராய் வென்று கொண்டிருக்கின்றார்
தமிழகத்தில் இனி திமுக ஆட்சி அமையும் , அவர்களின் முதல் கையெழுத்து “கலைஞர் கொரோனா ஒழிப்பு திட்டம்” என தொடங்கும்
அதை தொடர்ந்து “கலைஞர் மதுகடை ஒழிப்பு” “கலைஞர் நில அபகரிப்பு தடுப்பு” “கலைஞர் பெண்கொடுமை சட்டம்” என வந்து கொண்டே இருக்கும் நாம் பார்த்து கொண்டே இருக்க போகின்றோம்
அவர் முதலில்செய்ய வேண்டியது கனமான துணியில் அதாவது எளிதில் கிழியாத துணியில் சட்டை தைத்து போட்டு கொள்வது, காரணம் வலுவான எதிர்கட்சியாக அமரும் அதிமுக பாஜக கூட்டணியின் கனைகள் இனி பலமாக இருக்கும்
ஆரோக்கியமான அரசியல் மாற்றத்தை வரவேற்போம், இந்திய பிரிவினவாதமில்லாத இந்து எதிர்ப்பு இல்லா ஆட்சியினை அவர்கள் கொடுப்பார்கள் என நம்புகின்றோம்
நம்பி அவர்களை வாழ்த்துகின்றோம்
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















