கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி, மத்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தலைமையில் லக்னோவில் நடைபெற்ற 45வது ஜிஎஸ்டி கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் பேசப்பட வேண்டிய ஏராளமான பிரச்சனைகள் இருந்தும், தமிழக அரசின் சார்பில் நிதி அமைச்சர், 1 கவுன்சில் கூட்டத்தில் பங்கு பெறவில்லை என்பது தமிழக மக்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் செய்தி.
கொரோனா நோய் தொற்றால்இணைய வழியில் நடைபெற்ற 81 கவுன்சில் கூட்டம், சுமார் 2௦ மாதங்களுக்குப் பின்பு நேருக்கு நேர் அதிகாரிகள் சந்திப்பில் நடந்து முடிந்துள்ளது. இக்கூட்டத்தில் சாமானிய மக்கள் முதல் நிறுவனங்கள் வரையில் அனைத்து தரப்பினருக்குமான அறிவிப்புகள் பல வெளியாகியுள்ளது.
இதில் தமிழகத்தின் பிரச்சனைகளை எடுத்துரைக்க எவரும் இல்லை என்பது மக்களை மதிக்காத எதேச்சதிகாரம் என்பது பாஜகவின் கருத்து மட்டுமல்ல, தமிழக மக்களின் நிலைப்பாடும் அதுவே.
இதுகுறித்து தி.மு.க எம்.பி-யும் மூத்த தலைவருமான TKS இளங்கோவன் நேற்று ஆங்கில தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியில் “நிதி அமைச்சர் இந்த கூட்டத்திற்கு கண்டிப்பாக சென்று இருக்க வேண்டும். ஏன் செல்லவில்லை என்று தெரியவில்லை. மாநில நிதி அமைச்சர்களுக்கு இது ஒரு முக்கியமான கூட்டம். இதை புறக்கணித்தால் மாநில நலன் பாதிக்கப்படும்” என கடுமையான விமர்சனங்களை தமிழக நிதி அமைச்சர் மீது வைத்தார்.
அமைச்சர் பிடிஆர் எல்லாற்றுக்கும் உணர்ச்சி வசப்படுகிறார்..அரசியலில் நீடித்து நிலைப்பதற்கு இந்த அணுமுறை தவறு..அவருடைய தந்தையோ,தாத்தாவோ இப்படிப்பட்ட அணுகுமுறை கொண்டவர்கள் அல்ல.வருங்காலத்தில் திருத்திக் கொள்வார்.அரசியலில் எல்லோருமே கற்றுக் கொண்டு வருவதில்லை ஏற்கனவே,திமுக தலைவர்,முதல்வர் பிடிஆருக்கு பலமுறை இதுகுறித்து ஆலோசனை சொல்லியுள்ளார்.மீண்டும் சொல்வார் என்றே தெரிகிறது..- திமுக எம்பி,மூத்த தலைவர் TKS இளங்கோவன்.
TKS இளங்கோவன் திமுக பாரம்பரியமிக்க குடும்பத்தை சேர்ந்தவர்.நீதிக்கட்சி காலத்தில் இருந்தே இவரது குடும்பமும் துவங்குகிறது.இதுவரை TKS இளங்கோவன் யாரையும் தனிப்பட்ட முறையில் திட்டியோ,இழிவாக பேசியோ,அதிகாரத் தொனியில் திட்டியோ பார்த்ததில்லை..
எல்லோரிடமும் மரியாதையாகவே பேசியிருக்கிறார் விவாதங்கள்..அதனால்தான் TKS யை ஒரு ஆங்கில ஊடகத்தில் திட்டிய வட இந்தியரை பதிலுக்கு திட்டினார் கிஷோர் கே சுவாமி..தென்னிந்தியர்கள் கருப்பு என்பது போல தருண் விஜய் பேசியது பெரிய பிரச்சனையாக விஸ்வரூபமெடுத்தது..அவர் வேறு பொருளில் சொல்லப் போக அது வழக்கம் போல தவறாக புரிந்துகொள்ளப்பட்டது..
ஆனால் அப்போது கூட நிதானமாக ஒரு கருத்தைச் சொன்னார் TKS இளங்கோவன்..எங்கள் தலைவர்கள் கருணாநிதி,ஜெயலலிதா எல்லாம் சிகப்புதானே என்று சிரித்தார்..அவர் பெரும்பாலும் வன்மத்தோடு,குயுக்தியாக பேசி நான் பார்த்ததில்லை..அவர் மீது தற்போது அமைச்சர் PTR நடத்திய வன்சொல் தாக்குதல் மிக மோசமானது..
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















