சென்னை மண்ணடியில் நடைபெற்ற வன்முறை சம்பவம் வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாக பரவியது அந்த வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டது மனிதநேய மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகதொண்டர்கள் ஒருவரை ஒருவர் கற்களாலும் கம்பிகளாலும் தாக்கி கொண்ட கடுமையாக தாக்கி கொண்டார்கள். இதை தடுக்க சென்ற காவல்துறை மீதும் கற்கள் வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா, மனிதநேய மக்கள் கட்சி என்ற பெயரில் அரசியல் கட்சியையும் நடத்தி வருகிறார். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளராக ஹைதர் அலி செயல்பட்டு வந்தார். இந்த நிலையில், ஹைதர் அலியை பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கம் செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் அதிருப்தியடைந்த ஹைதர் அலி தரப்பினருக்கு, மேலும் கோபத்தை அதிகப்படுத்தும் விதமாக, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பெயர், கொடி மற்றும் சின்னத்தை பயன்படுத்த நீதிமன்றம் மூலம் இடைக்காலத் தடையையும் பிறப்பிக்கப்பட்டது.
இதனால், ஹைதர் அலி தரப்பினர்மிக கோபத்தில் இருந்து வந்தார்கள் , தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சுருக்கமான த.மு.மு.க. என்னும் பெயரை வர்த்தகக்குறி சட்டத்தின்கீழ் பதிவு செய்தனர். இதனால் இந்த பெயரை வேறு யாரும் பயன்படுத்த இயலாது . இதனை தொடர்ந்து ஜவஹிருல்லா தரப்பினருக்கு கோபத்தை ஏற்படுத்தும் விதமாக, சென்னை மண்ணடியில் உள்ள தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் அருகிலேயே த.மு.மு.க. என்னும் சுருக்கமான பெயர் பலகையுடன் புதிய அலுவலகத்தை ஹைதர் அலி தரப்பினர் திறந்துள்ளனர். அதோடு, அங்கு வைக்கப்பட்ட பேனரில் த.மு.மு.க. தலைமை அலுவலகம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
ஹைதர் அலி ஆதராவளர்களின் இந்த செயலால் கடுப்பான ஜவாஹிருல்லா தரப்பினர் காவல்நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தனர். அதன்பேரில் விசாரித்த காவல் துறையும் சட்டப்படி, பெயரை பதிவு செய்திருப்பதால், பேனரை அகற்ற முடியது எனக் கூறியதாக சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஜவஹிருல்லா தரப்பு அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பேனரை கிழித்தனர். இதன் காரணமாக இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது இது கைமீறி முற்றி, கடும் மோதலாக மாறியது.
இரு கோஷ்டியினரும் ஒருவரையொருவர் கற்கள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால், தாக்கிக் கொண்டனர். பலருக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. தகவல் அறிந்து, பூக்கடை துணை கமிஷனர் மகேஷ்வரன் தலைமையில் காவல் துறை சம்பவ இடத்துக்கு வந்தனர். காயம் அடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தடியடி நடத்தி கூட்டத்தை கலைக்க முயற்சித்தனர். ஆனால், இரு கோஷ்டியினரும் கலைந்து செல்ல மறுத்து, தகராறு செய்தனர். போலீசார் நடத்திய சமாதான பேச்சு நள்ளிரவிலும் தொடர்ந்தது.