பிரதமர் திரு.நரேந்திர மோடியின்பிறந்தநாள் விழா, தமிழகம் முழுவதும் பாஜக இளைஞரணி சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. மாநிலம் முழுவதும் ரத்த தான முகாம்கள் நடத்தப்பட்டன. இதில் பாஜக இளைஞர் அணியை சேர்ந்த 7,000 பேர் கலந்துகொண்டு ரத்ததானம் வழங்கினார்கள். அதேபோல மாநிலம் முழுவதும் 70,000 மரக்கன்றுகள் நடப்பட்டன.
சென்னை வில்லிவாக்கம் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 70 அடி உயர பிரம்மாண்ட கொடிக்கம்பத்தில் பாஜக கொடியேற்றப்பட்டது. வில்லிவாக்கத்தில் நடந்த விழாவில் பாஜக மாநில இளைஞரணி தலைவர் வினோஜ் ப செல்வம் கலந்துகொண்டு, 70 அடி உயர கொடி கம்பத்தில் பாஜக கொடியை ஏற்றி வைத்தார்.
சென்னை துறைமுகம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட காளிகாம்பாள் கோவில் அருகில் நடந்த விழாவில், பிரதமர் நரேந்திர மோடியின் 70-வது பிறந்த நாளை குறிப்பிடும் வகையில், ஏழைப் பெண்கள் 70 பேருக்கு இலவச தையல் மெஷின்கள், கல்லூரி மாணவ – மாணவிகள் 70 பேருக்கு மொபைல் டேப்கள், ஏழை பள்ளி மாணவ – மாணவிகள் 70 பேருக்கு கல்வி உதவித் தொகை, மாணவ – மாணவிகள் 700 பேருக்கு புத்தகப் பைகள், நோயாளிகள் 70 பேருக்கு இலவச இதயம் மற்றும் கண் சிகிச்சைகள் உள்பட 70 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சிக்கு பாஜக மாநில தலைவர் டாக்டர் எல்.முருகன் தலைமை தாங்கி, நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பித்தார். பாஜக மாநில இளைஞரணி தலைவர் வினோஜ் ப செல்வம் முன்னிலை வகித்தார்.
இதில், பாஜக இளைஞரணி சார்பில் கேக் வெட்டி பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் பாஜக இளைஞரணி நிர்வாகிகளும், தொண்டர்களும், பொதுமக்களும் பெருமளவில் கலந்து கொண்டனர்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















