சீனாவுக்கு செக் மேட் வைக்கும் மோடி அரசு.

கொரானா நிறைய நாடுகளின் பொருளாதாரத்தை அழித்து வருகிறது என்றாலும் இந்தியாவில் மட்டும் தான் கொரானா வினால் மிகப்பெரிய அளவில் நன்மைகள் நிகழ இருக்கிறது.இந்தியாவின் பொருளாதாரம் இனி தான் உச்சத்தை நோக்கி செல்ல இருக்கிறது.

மோடி வெளிநாடுகளுக்கு தேடித்தேடி ஓடியும் கொண்டு வர முடியாத தொழில் நிறு வனங்களை கொரானா இந்தியாவுக்கு சுலபமாக கொண்டு வருகிறது.

அமெரிக்காவின் முன்னணி தொழில் நிறுவனங்கள் சீனாவில் இருந்து வெளி
யேறி இந்தியாவுக்கு இடம் பெயர அமெரிக்கா முழு ஆதரவு அளித்து விட்டது.

சீனாவில் இருந்து பொருட்களை மிக அ திக அளவில் இறக்குமதி செய்யும் நம்ப ர்-1 நாடு எது தெரியுமா? அமெரிக்கா தான்.பல அமெரிக்க நிறுவனங்கள் சீனாவில் இருந்து பொருட்களை உற்பத்தி செய்து அமெரிக்கா உட்பட பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது.

என்னடா இது அமெரிக்கா ஒரு முதலாளித்துவ நாடு சீனா ஒரு கம்யூனிச நாடு அமெரிக்கா எப்படி சீனாவில் நிறுவனங் களை துவங்க அனுமதி அளித்து இருக்கு ம் என்று நமக்கு ஒரு கேள்வி வரலாம்.

இதற்கு முக்கியமான காரணம் என்ன வென்றால் பணம் தான்.பணத்திற்கு முன் கொள்கையாவது கோட்பாடாவது?


மக்கள் தொகை அதிகம் உள்ள சீனாவி ன் மனித வளத்தின் மூலமாக அமெரிக்காவில் பொருட்களை உற்பத்தி செய்ய ஆகும் செலவை விட குறைந்த செலவில் உற்பத்தி செய்ய முடியும் என்று அமெரிக்கா நினைத்தது.

அதனால் தான் அமெரிக்கா சீனாவை தேர்ந்தெடுத்து அங்கு தொழிற்சாலைகளை அமைத்து உற்பத்தியை ஆரம்பித்தது
இன்னொரு முக்கியமான விசயம் என்ன வென்றால் கம்யூனிசம் பேசினாலும் சீனாவில் ஊதிய உயர்வு கேட்டு தொழிலாளர்கள் போராட்டம் செய்ய முடியாது போராடக்கூடாது.

அந்த அளவிற்கு சீனாவில் தொழிலாளர் சட்டங்கள் மிக கடுமையானவை .இதனால் தான் அமெரிக்கா போன்ற முதலாளித்துவ நாடுகளை சீனாவில் உற்பத்தியை ஆரம்பித்து வியாபாரம் செய்ய ஆரம்பித்தன.

இப்பொழுது உங்களுக்கு ஒரு கேள்வி வரலாம்?சீனா மாதிரியே இந்தியாவிலும் மக்கள் தொகை அதிகமாக இருக்கி றதே அப்பொழுது ஏன் அமெரிக்கா இந்தியாவில் நிறுவனங்களை அமைத்து உற்பத்தியை உருவாக்க முன் வரவில்லை என்று நீங்கள் கேட்கலாம்.

இந்தியாவை அமெரிக்காவோடு நெருங்க விடக் கூடாது என்பதற்கு சீனா சில இயக்கங்களை இந்தியாவில் உருவாக்கி வைத்து இருக்கிறது.அவர்களின் நோக்க மே அமெரிக்க எதிர்ப்பை இந்தியாவில்
தூண்டி விட்டு போராடிக்கொண்டு இருப்பது தான்.

இதனால் தான் அமெரிக்கா இந்தியாவை விட சீனாவே பெட்டர் என்று சீனாவில் தொழிற் சாலைகளை அமைத்து தொழி ல் செய்து வந்தன. ஆனால் எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு இருக்கிறது அல்லவா அது மோடியின் ரூபத்தில் சீனாவுக்கு வ ந்து இருக்கிறது.

மோடி இந்திய பிரதமராக வந்த பிறகு இந்திய அமெரிக்க உறவு மிக வலுவாக மாறியது.அதுவும் ட்ரம்ப் வந்த பிறகு அமெரிக்க இந்திய உறவை விட மோடிட்ரம்ப் உறவு தான் மிக நெருக்கமானது இதன் மூலமாக மோடி சீனாவில் உள்ள அமெரிக்க நிறுவனங்களுக்கு குறி வைத்தார்.

சுமார் 25 வருடங்களுக்கும் மேலாக சீனாவில் உள்ள அமெரிக்க நிறுவனங்களை அவ்வளவு சுலபமாக வெளியேற்றி விட முடியாது அதற்கு தான் ட்ரம்ப் சீனா மீது கடந்த ஆண்டில் வர்த்தக போரை அறிவித்தார்.

இதனால் சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும்
பொருட்களுக்கு வரிகளை அதிகமாக்கியது அமெரிக்கா.

இந்த நேரத்தில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே பெரிய அளவில் மோதல்களே நடைபெற வில்லை.அமெரிக்கா மீது அணுகுண்டு வீசுவோம் என்று மிர ட்டி க்கொண்டு இருந்த வட கொரியா அதிபர் கின் ஜாங் உன்னை கூட ட்ரம்ப் உடன் சிங்கப்பூரில் வைத்து 2018 ஜூன் மாத த்தில் கை குலுக்க வைத்தது சீனா தான்.

இப்படி அமெரிக்காவுக்கு ஆதரவாக சீனா இருந்தும் ட்ரம்ப் சீனாவுக்கு எதிராக கடுமையான இறக்குமதி வரிகளை விதித்த தன் நோக்கமே அமெரிக்க நிறுவனங்க ளை சீனாவில் இருந்து இடம் பெயர வைக்கத்தான்.

சீனாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு ட்ரம்ப் விதித்த அதிகப்ப டியான வரிகளினால் முதலில் பாதிப்பு யாருக்கு ஏற்பட்டது என்றால் சீனாவில் உள்ள அமெரிக்கா ஜப்பான் தென் கொரியா நிறுவனங்களுக்கு தான்.

சீனாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட அதிகப்படியான வரியினால் உலகளாவிய அளவி ல் பொருட்களின் விற்பனை சரிய ஆரம்பிக்க சீனாவில் இருந்த அமெரிக்க ஜப்பான் தென் கொரியா நிறுவனங்கள் நஷ்டத்தை சந்திக்க ஆரம்பித்தன.

உடனே மாற்று வழி தேடிய அந்த நிறுவ னங்களுக்கு அடுத்து தெரிந்த ஒரே சோ ர்ஸ் இந்தியா தான்.வேறு வழியில்லை இந்தியாவில் மனித வளம் சீனாவுக்கு நிகராக இருக்கிறது.அதோடு மோடி ஆட்சியில் உள்கட்டமைப்பு சிறப்பாக முன்னேறி வருகிறது.

எனவே இந்தியாவை நோக்கி பார்வையை திருப்பின அமெரிக்க நிறுவனங்கள்.இதை முறியடிக்க அமெரிக்காவை மிரட்ட சீனா எடுத்த பயோ வெப்பனான கொரானா மூலமாக சீனாவே தனக்கு தானே கொள்ளி வைத்துக் கொண்டது.

உலகளவில் பொருளாதாரம் முடங்கி மக்கள் அழிய க்காரணம் சீனா தான்
என்று உலகநாடுகள் அனைத்தும் ஏற்றுக்கொண்டு விட்ட நிலையில் சீனாவில் உள்ள அமெரிக்கா ஜப்பான் தென் கொரி யா நாடுகளின் நிறுவனங்களை தொடர்ந்து செயல்பட அந்த நாடுகளின் அரசு களும் மக்களும் நிச்சயமாக ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.

அதனால் சீனாவில் உள்ள அமெரிக்க ஜப்பான் தென் கொரிய நிறுவனங்கள் மாற்று ஏற்பாடு தேடும் பொழுது அவர்களுக்கு தெரியும் முதல் சாய்ஸ் இந்தியாதான். அந்த சாய்சை நோக்கியே இப்பொழுது உலக நாடுகள் வந்து கொண்டு இருக்கின்றன.

ஆக கொரானா பல நாடுகளின் பொரு ளாதாரத்தை அழித்தாலும் இந்தியாவை இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய தொழி ல் வளம் மிகுந்த நாடாக மாற்ற இருக்கிறது என்பதை இன்னும் சில மாதங்களிலும் மாற்றியது என்பதை இன்னும் சில வருதங்கள் கழித்தும் அறிந்து கொள்ளலாம்..

கட்டுரை :- வலதுசாரி சிந்தனையாளர் விஜயகுமார் அருணகிரி.

Exit mobile version